அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோவுடன் தடையில்லா வர்த்தகம் மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் போடப்பட்டதின் மூலம் நான் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்
வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த இரு நாடுகளுடன் உறவை வலுப்படுத்தும் விதமாக ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.
எங்கள் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோவுடன் தடையில்லா வர்த்தகம் மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் போடப்பட்டதின் மூலம் நான் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்கவிலிருந்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டதை மெக்ஸிகோவும் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் எல்லைப் பிரச்சனையும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைம் டேபிள்
நாம் தினமும் காலையில் எழுந்த உடன் நம் உள்ளங்கையை பார்ப்போம், இல்லாவிட்டால் நமக்கு பிடித்தமானவர்களின் ஃபோட்டோ ஏதாவது இருந்தால் அதை பார்த்துவிட்டு அதற்கு பின்பு மற்ற காலைக்கடன்களை முடித்துவிட்டு, பின்னர் தினசரி வேலைகளை பட்டியல் போட்டு, அதன்படி வேலைகளை முறையாக செய்து முடிப்போம்.
இவன் வேற மாதிரி
இதெல்லாம் சாதாரண மனிதர்களுக்குத்தான், ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வேறு மாதிரிதான். காலையில் எழுந்த உடன் இன்னிக்கு எந்த நாட்டை வம்புக்கு இழுக்கலாம், எந்த நாட்டுக்கு பொருளாதாரத் தடை போடலாம், வளைகுடா நாடுகளிடம் சொல்லி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கச் சொல்லலாமா அல்லது அதிகரிக்கச் சொல்லலாமா என்று தான் யோசிப்பார் போல.
ஹார்லி டேவிட்சன் பைக்
கடந்த ஒரு ஆண்டாக இந்தியா, சீனா மற்றும் ஈராக் நாடுகளுடன் தினசரி ஏதாவது ஒரு பிரச்சனையில் மூக்கை நுழைத்து வம்பிழுத்து தகராறு செய்து பிரச்சனையை ஊதி பெரிதாக்கிக் கொண்டே வருகிறார். இந்தியா உடன் ஹார்லி டேவிட்சன் பைக் மற்றும் 29 பொருட்களுக்கான இறக்குமதி வரி தொடர்பான பிரச்சனை உள்ளது. இதற்கான தீர்வு இன்னும் காணப்படவில்லை.
இரண்டு முகம்
நம் அண்டை நாடான சீனாவுடன் எஃகு, தகவல் தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு வரி விதிப்பது தொடர்பான பிரச்சனையில் பேச்சு வார்த்தை நடக்கும் போதே இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்திவிட்டு, பாட்சா படத்தில் ரஜினிகாந்த் சொல்வதுபோல் எனக்கு இன்னொரு முகம் இருக்கு, ஒழுங்கா வந்து கையெழுத்து போடு என்று மிரட்டிக்கொண்டு இருக்கிறார்.
உலகளாவிய நாட்டாமை
வளைகுடா நாடான ஈரானுடன் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பான பிரச்சனையில் தலையிட்டு, அந்நாட்டுக்கு பொருளாதாரத் தடை விதித்ததோடு, இனிமேல் ஈரானிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது. அப்படி செய்தால் அந்த நாடுகளையும் பதினெட்டு பட்டி பஞ்சாயத்தில் இருந்து ஒதுக்கி வைத்துவிடுவோம் என்றும் மிரட்டிக்கொண்டு இருக்கிறார்.
நான் நல்லவன்தான்
நிலைமை இப்படி போய்க்கொண்டு இருக்கையில், திடீரென ட்ரம்ப் நல்லவனாக உருவெடுத்து விட்டார் போலத் தெரிகிறது. அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகியவற்றுடன் எல்லைப் பிரச்சனை தொடர்பாக மோதிக்கொண்டு எல்லையில் சுவரைக் கட்டி பாதுகாப்பை பலப்படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி தொடர்ந்து மோதிக்கொண்டு இருந்தார்.
அண்டை நாடுகளுடன் கைகோர்ப்பு
இந்தியா மற்றும் சீனாவுடன் இறக்குமதி தொடர்பாக மோதிக்கொள்வதற்கு பதிலாக, நாம் ஏன் நம் அண்டை நாடுகளான கனடா, மெக்ஸிகோவிலிருந்து எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களை இறக்குமதி செய்து உறவை பலப்படுத்தக்கூடாது என்று நினைத்துவிட்டார் போல. இவ்விரு நாடுகளுடனும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு முன்வந்துவிட்டார்.
உறவில் விரிசல்
கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் இருந்து அமெரிக்கா அதிக அளவில் எஃகு மற்றும் அலுமினியப்பொருட்களை இறக்குமதி செய்து வந்தது. இதில் எஃகு பொருட்களுக்கு 25 சதவிகிதமும், அலுமினியப்பொருட்களுக்கு 10 சதவிகித வரியும் விதித்து வந்தது. இதனால் இந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் விழத்தொடங்கியது.
வரி இல்லா வர்த்தகம்
ட்ரம்ப் அதிபராவதற்கு முந்தைய காலத்தில் கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியப்பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் வந்த உடன் எனக்கு தேசப் பாதுகாப்பு தான் முக்கியம் என்று சொல்லி வரியை உயர்த்திவிட்டார். இதனால் இம்மூன்று நாடுகளுக்கு இடையில் விரிசல் அதிகரித்துக்கொண்டே போனது.
நாங்களும் வரியை உயர்த்துவோம்
கடந்த ஆண்டு இம்மூன்று நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட விரிசலை குறைக்க முற்பட்டபோது தேச நலன் என்ற பெயரில் ட்ரம்ப் செய்த இறக்குமதி வரி உயர்வு பெரும் தடையாக தொண்டையில் முள்ளாக உறுத்திக்கொண்டே இருந்தது. இதனால் மூன்று நாடுகளுக்கு இடையில் ஏற்படவிருந்த வர்த்தக ஒப்பந்தம் தள்ளிக்கொண்டே போனது. தங்கள் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரி விதித்ததற்கு போட்டியாக பதிலுக்கு கனடா, மெக்ஸிகோ நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்திவிட்டன.
ஒப்பந்தம் கையெழுத்தானது
தற்போது ட்ரம்ப் திடீரென இவ்விரு நாடுகளுக்கிடையே ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முன்வந்துவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் வாஷிங்டனில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதை இரு நாடுகளுக்கும் அனுப்பி வைத்துவிட்டார். அதோடு இவ்விரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்படும வர்ததகத்திற்கு வரி விதிக்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் கூறுகையில், கனடா மற்றும் மெஸிகோ நாடுகளுக்கு இடையில் வரி இல்லாத வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்திற்கு வரவேற்பு
வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான உடன் அது உடனடியாக கனடா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பதிலுக்கு கனடாவும் வரியில்லா வர்த்தகம் மேற்கொள்வது குறித்து ஒப்பந்தம் தயாரித்து அதை வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போல் இன்னும் ஓரிரு நாட்களில் இறக்குமதி வரியை நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. மற்றொரு அண்டை நாடான மெக்ஸிகோவும் வரி இல்லாத ஒப்பந்தம் போடப்பட்டுள்ளத வரவேற்றுள்ளது.
வெற்றி வெற்றி வெற்றி
மூன்று நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் (Wilbur Ross) கடைசியில் ட்ரம்ப் மேற்கொண்ட திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அமெரிக்காவிலுள்ள எஃகு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் அதிக பயன் பெறுவார்கள் என்று கூறினார்.
மவுன ராகம்
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையில் வரி இல்லா வர்த்தகம் நடைபெற ஒப்பந்தம் (US-Mexico-Canada Agreement-USMCA) ஏற்படுத்தப்பட்டாலும், கனடாவும், மெக்ஸிகோவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மவுனம் காக்கின்றன. வரி இல்லாத ஏற்றுமதி இறக்குமதிக்கு அமெரிக்கா ஒப்பந்தம் போட்டாலும் உலோகங்களுக்கான வரியை நீக்கும் வரையிலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
More From GoodReturns

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications