ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க..! கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட ஆமாங்க, 15,000 இந்திய ரூபாய் மதிப்புள்ள 160 பவுண்ட் ஸ்டெர்லிங்கை ஒஸ்ஸி (Ozzie) என்கிற நாய் தின்றுவிட்டது. இது லேப்ரடாடில் (Labradoodle) என்கிற விலை உயர்ந்த பணக்கார நாய்.

 

இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியில் வசிப்பவர் ஜுடித் ரைட் (Judith Wright). இவர் தான் பணத்தை பறி கொடுத்த நாயின் சொந்தக் காரர். இவர் வீட்டு வாசலில் கடிதங்களைப் போட ஒரு கடிதப் பெட்டி இருக்கிறது.

இவருடைய பெரிய வீட்டில், ஒரு பகுதி வீட்டை உள் குடித்தனம் போல விட்டிருக்கிறாராம். அந்த உள் குடித்தனம் இருக்கும் மனிதர் தன் ஏப்ரல் மாத வாடகையை எப்போதும் போல கையில் கொடுக்க பார்த்திருக்கிறார்.

ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை

கடிதப் பேட்டியில் போடு

கடிதப் பேட்டியில் போடு

ஆனால் இந்த முறை ஜுடித் சில வேலை காரணமாக வெளியில் சென்றிருக்கிறார். அப்போது அவர் வீட்டு வாடகைப் பணத்தை தன் கடிதப் பெட்டியில் போட்டி விட்டுப் போகச் சொல்லி இருக்கிறார். உள் குடித்தனக் காரரும் பணத்தை கடிதப் பேட்டியில் போட்டுவிட்டு தன் கடமையை சிறப்பாகச் செய்து விட்டதாகக் கிளம்பிவிட்டார்.

ஒஸ்ஸி (Ozzie)

ஒஸ்ஸி (Ozzie)

கடிதப் பெட்டியில் போட்ட பணத்தைப் பார்த்த ஒஸ்ஸி (Ozzie)எதையோ பீட்ஸா, பர்கர், டெலிவரி செய்துவிட்டுப் போகிறான் போல என பணத்தைக் கடித்து மென்று முழுங்கியே விட்டதாம். ஜுடித் தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, வீட்டுக்கு வந்து பார்க்கும் போது இங்கிலாந்தின் பவுண்ட் ஸ்டெர்லிங் நோட்டுக்கள் கிழிந்த நிலையிலும் பாதி நோட்டுக்களும் கீழே கிடந்திருக்கிறது.

துணுக்குகள்
 

துணுக்குகள்

அதன் பின் உள் குடித்தனக் காரர் எப்போதும் பணத்தைக் கொடுக்க பயன்படுத்தும் கவரும் கிழிந்து கிடப்பதையும் பார்க்கிறார். அப்படியே தன் விஷமக்கார ஒஸ்ஸி (Ozzie)-யையும் பார்த்து விஷயத்தை புரிந்து கொள்கிறார். ஒஸ்ஸி (Ozzie)-க்கு தெரியாமலேயே சில இங்கிலாந்து பவுண்ட் ஸ்டெர்லிங் துணுக்குகள் அதன் வாய்க்கு கீழ் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த உடன் புரிந்து கொண்டார்.

ரூ. 12,000 செலவு

ரூ. 12,000 செலவு

அடித்துப் பிடித்து விலங்குகள் மருத்துவமனையில் சேர்த்து மேலும் ஒரு 130 பவுண்ட் ஸ்டெர்லிங்கை (12,000) செலவழித்து ஒஸ்ஸி (Ozzie)-யின் வயிற்றில் செரிக்காமல் இருந்த பவுண்ட் ஸ்டெர்லிங்கை எல்லாம் எடுத்து ஒஸ்ஸி (Ozzie)-யைக் காப்பாற்றி இருக்கிறார். நம் ஒஸ்ஸி (Ozzie) சாப்பிடும் வேகத்தில் பேபர்களில் பயன்படுத்தும் காலர் பின் உட்பட பலவற்றையும் நொறுக்கித் தள்ளி இருக்கிறது.

விலை உயர்ந்த திங்கள்

விலை உயர்ந்த திங்கள்

இந்த கூத்துக்கள் எல்லாம் கடந்த திங்கட்கிழமை நடந்திருக்கிறது. ஜுடித் ரைட் தன் சமூக வலைதள பக்கங்களில் இது ஒரு விலை உயர்ந்த திங்கள் என தன் நாயோடு போஸ் கொடுத்து புலம்பி இருக்கிறார். வீட்டு வாடகைப் பணம் 15,000 ரூபாயும் போய், தன் செல்ல நாய் (செல்ல சனியன் என்றும் சொல்லலாமாம்)-க்கு மருத்துவ செலவுகள் வேறு ஒரு 12,000 செலவழித்து.... ஐயா யேசப்பா என்று கடுப்பில் ஜபித்துக் கொண்டிருக்கிறார் ஜிடித் ரைட்.

கூண்டு ஃபர்ஸ்ட்

கூண்டு ஃபர்ஸ்ட்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது முதலில் கடிதப் பெட்டிக்கு ஒரு நல்ல இரும்புக் கூண்டு வாங்கிப் போட வேண்டும் என சபதம் ஏற்றிருக்கிறார். மீண்டும் அடுத்த மாதம், உள் குடித்தனக் காரன் வாடகை தரும் போது (160 + 130) சுமார் 300 பவுண்ட் ஸ்டெர்லிங் செலவழிக்க முடியாது எனவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

a dog ate its house owners april month house rent

a dog ate its house owners April month house rent
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X