நியூயார்க் : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஃபோர்டு நிறுவனம், 7000 வொயிட் காலர் ஊழியர்களை வேலையைl விட்டு அனுப்பப்போவதாக அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் உள்ள மொத்த ஊழியர்களில் இது மொத்தம் 10% ஆகும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவிலும் ஃபோர்டு நிறுவனத்திற்கு பல கிளைகள் உள்ளது. குறிப்பாக தமிழகத்திலும் உள்ளது கவனிக்கதக்கது. இந்த ஆள் குறைப்பு நடவடிக்கையால் தமிழகத்திலும் பலர் வேலையை இழக்கலாம் என்றும் தெரிகிறது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக ஃபோர்டு நிறுவனத்தில் தொடர்ந்து செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் 7,000 வொயிட் காலர் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
அதென்ன வொயிட் காலார் ஊழியர் என்கிறீர்களா? கஷ்டப்படாமல் உடல் உழைப்பு இல்லாமல் மேம்போக்காக செய்யும் அலுவலக வேலைகளைத் தான் அவ்வாறு கூறுவார்கள்.
தற்போது ஃபோர்டு நிறுவனத்தில் சர்வதேச அளவில் 2 லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் இந்தியாவில் 10,000-க்கும் அதிகமாக ஊழியர்கள் உள்ளனர். எனினும் இந்தியாவில் எவ்வளவு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவல்கள் குறித்து இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், இதில் அமெரிக்காவிலிருந்து மட்டும் 2,300 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனராம். இதில் ஏற்கனவே 1500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதோடு இந்த வாரம் 500 பேர் செல்ல உள்ளனராம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே பலர் தானாக முன் வந்து வேலையை விட்டு விட்டு வெளியே சென்று விட்டனராம்.
மேலும் இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஹாக்கெட் ஊழியர்கள் மறுசீரமைப்பின் நான்காவது அலை, வரும் மே 24 ம் தேதி பெரும்பாலான வேலை நீக்கம் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளராம்.
ஏற்கனவே பல நிறுவனங்கள் இந்த ஆள் குறைப்பு அஸ்திரத்தை எடுத்துள்ள நடவடிக்கையால் பல ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஃபோர்டு நிறுவனமும் இந்த ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது கவனிக்க தக்கது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications