இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது!

டெல்லி : எந்த துறையில் கால் பதித்தாலும் அதில் வெற்றியும் கண்டு தனக்கென தனி இடம் வகிப்பது தான் முகேஷ் அம்பானியின் ஸ்டைல், அதிலும் ஜியோவைப் போல ஒரு பரப்பான வெற்றியாகத் தா இருக்கும். இன்றளவிலும் ஜியோவைக் சமாளிக்க முடியாமல் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் காணமல் போய் விட்டன. இருக்கும் சில நிறுவனங்களும் ஜியோவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், புதிதாக ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் கால் ஊன்ற காத்துக் கொண்டிருக்கிறதாம். அதுவும் பற்பல ஆஃபர்களோடும் சேவையோடும். சும்மாவே நாங்க கலக்குவோம். இப்ப பல ஹோம்வொர்க் செஞ்சு களத்துல இறங்க போறோம். சும்மாவா இருப்போம். அடிச்சி தூள் கிளப்ப மாட்டோம் என்று சவால் விடுகிறதாம் போட்டி நிறுவனங்களுக்கு.

இத்தகைய வளர்ச்சி ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் அமேசான் ஃப்ளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களில், இது ஒரு பெரிய வர்த்தக வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் கதிகலங்கி நிற்கின்றனவாம்.

மற்ற ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கும்

மற்ற ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கும்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தால் அமேசான் பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் உள்ளிட்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது என்றே கூறலாம். அதிலும் முகேஷ் அம்பானியின் தலைமையிலான இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பாகவே இருக்கும் என்றும் மற்ற ஆய்வுகளும் கூறுகின்றனவாம்.

ஆன்லைன் சில்லறை விற்பனை அதிகரிக்கும்

ஆன்லைன் சில்லறை விற்பனை அதிகரிக்கும்

உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான ஃபார்ரெஸ்டெர் ஆய்வின் படி, இந்தியாவில் ஆன்லைன் சில்லறை விற்பனையானது வரும் ஐந்து ஆண்டுகளில் 25.8 சதவிகிதம் வளர்ந்து 2023 ஆம் ஆண்டில் $ 85 பில்லியனை எட்டுமாம். இது கடந்த 2016-ம் ஆண்டில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளினாலும், கடந்த 2017-ல் ஜி.எஸ்.டியாலும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

பெரும் பிரச்சனையை சந்திக்கும்

பெரும் பிரச்சனையை சந்திக்கும்

அதோடு இந்த சில்லறை வர்த்தகத்தின் மூலம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் பிரச்சனையை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் ஜியோவில் கொடுத்த ஆஃபர்களை போலவே, ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்திலும் மிகப் பெரிய தள்ளுபடிகள் மூலம் நடவடிக்கைகளை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் ஃபார்ரெஸ்டெர் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் சதீஷ் மீனா தெரிவித்துள்ளராம்.

பலமான ஆஃபர்கள் எதிர்பார்க்கலாம்

பலமான ஆஃபர்கள் எதிர்பார்க்கலாம்

அதோடு ரிலையன்ஸ் டெலிகாம் துறையில் கடந்த 2003 ஆம் ஆண்டில் Monsoon Hungama tariff plan திட்டத்தில் நுழைந்தது. இது ஒரு நிமிடத்திற்கு வெறும் 0.40 பைசாகவாக குறைத்தது. எனினும் இதற்கு முன்னர் நிமிடத்திற்கு ரூ.2 ஆக இருந்தது. பின்னர் 2016 ஆம் ஆண்டில் Jio 4G திட்டம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ரூ.250க்கு ஒரு ஜிபி என்ற நிலையில் ரூ.50க்கு 1 ஜிபி என மாற்றியது. இந்த வகையான தள்ளுபடியானது எந்தவொரு சந்தையையும் சீக்கிரம் சீர்குலைக்கும், இந்த நிலையில் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் மளிகை சாமானில் ஏதோவொன்றை எதிர்பார்க்கலாம் என்றும் மீனா கூறியுள்ளார்.

ஆன்லைன் டூ ஆப்லைன் யுக்தி

ஆன்லைன் டூ ஆப்லைன் யுக்தி

அதோடு சில்லறை வர்த்தகத்திற்காக முகேஷ் அம்பானி பயன்படுத்தும் யுக்தி என்ன தெரியுமா? "ஆன்லைன் டூ ஆப்லைன்" (online-to-offline ) சேவையாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எனவெனில் 100க்கும் மேற்பட்ட சேவைகளை ஒரே ஆப்பில் பெற முடியுமாம். இது போன்ற ஆன்லைன் டூ ஆப்லைன் ஆப்பை பல நிறுவனங்கள் செயல்படுத்த நியைத்தாலும் கடைசியில் முடியாமல் போனதே மிச்சம், ஆனால் முகேஷ் அம்பானியின் இந்த சூப்பர் ஆப் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்றும், அதுவும் மிக சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றும் கூறுகிறார்கள் நிபுனர்கள்.

ஒரே ஆப்பில் 100 சேவைகள்

ஒரே ஆப்பில் 100 சேவைகள்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த சூப்பர் ஆப் ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் இயங்கும் என்றும், ஜியோ இதன் மூலம் 300 மில்லியன் பயனாளர்களை பெற முடியும் என்றும் கணித்துள்ளதுதாம்.

சில்லறை வர்த்தகர்கள் உதவியாக இருப்பர்

சில்லறை வர்த்தகர்கள் உதவியாக இருப்பர்

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முன்னர் வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் எங்களுக்கு சுமார் 12 லட்சம் சில்லறை வர்த்தகர்கள் உள்ளனர். இது எங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும், இது எங்களின் புதிய ஆன்லைன் சில்லறை வர்த்தகத் திட்டத்துக்கு பேருதவியாக இருக்கும். அதோடு ஜியோ சேவையையும் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
சும்மாவே காட்டுவோம், இப்போ எங்க கிட்ட ஜியோ மூலம் சுமார் 28 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாம்.

முகேஷ் அம்பானிக்கு சாதகமான விதிமுறைகள்

முகேஷ் அம்பானிக்கு சாதகமான விதிமுறைகள்

மேலும் இணைய வர்த்தக நிறுவனங்களின் அபார வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கிலும், உள்ளூர் வியாபாரிகளின் தொழிலை வளர்க்கும் நோக்கிலும், பல விதிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்திருதாலும், அந்த விதிமுறைகள் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களை நேரடியாகவே பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த விதிமுறைகள், ரிலையன்ஸ் நிறுவனத்துக்குப் பெரும் ஆதரவாக அமையும் என்றும் கருதப்படுகிறது.

அனுபவத்தை மேம்படுத்த வேண்டும்

அனுபவத்தை மேம்படுத்த வேண்டும்

மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவடன், வாடிக்கையாளர்களின் அதன் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதன் மூலமே அமேசான் பிளிப்கார்டுடன் போட்டியிட முடியும். அதோடு என்னதான் தள்ளுபடி சலுகைகளை வழங்கினாலும், பேடிஎம் மாலில் இருந்தது போல, அதுபோன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் இடத்தில் விசுவாசத்தை காட்டினால் மட்டுமே ஜெயிக்க முடியும். இது போன்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளும், நிலைப்பு தன்மையும் பிளிப்கார்ட் அமேசானுக்கு எதிராக களத்தில் குதிக்க ஆதரவாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+