ரயில்டெல் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது. தற்போது 25 சதவிகித பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 75 சதவிகிதமாக குறையும்.
டெல்லி: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்டெல் நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை ஐபிஒ மூலமாகவோ அல்லது பொது ஏல முறையிலோ விற்று பணத்தை திரட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறப்பான செயல்பாட்டிற்காக பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மினிரத்னா பட்டம் பெற்ற இந்நிறுவனம் இந்திய ரயில்வேயின் மற்றொரு அங்கமாகும். ஏற்கனவே இந்திய ரயில்வேயின் மற்றொரு துணை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தின் 15 சதவிகித பங்குகளை பொது ஏலமுறையில் விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்தியன் ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் விரிவாக்கப் பணிகளுக்காக கடந்த மாதம் ஐபிஓ மூலம் 12 சதவிகித பங்குகளை விற்று பங்குச் சந்தையில் நுழைந்தது. இதன் மூலம் சுமார் 476 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
அதேபோல் அதன் மற்றொரு துணை நிறுவனமான ஆர்ஐடிஎஸ்(RITES) கடந்த 2018ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் நுழைந்தது, இதன் மூலம் சுமார் 466 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய நிதித் தேவைகளுக்காக மேலும் சுமார் 15 சதவிகித பங்குகளை பொது ஏலத்தின் மூலம் விற்று சுமார் 700 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. பொது ஏலம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியன் ரயில்வேயின் மற்றொரு துணை நிறுவனமான ரயில்டெல் (RAILTEL) தன்னுடைய விரிவாக்கப் பணிகளுக்காக மத்திய அரசின் வசம் உள்ள சுமார் 25 சதவிகித பங்குகளை பொது ஏல முறையிலோ அல்லது பங்குச் சந்தையில் ஐபிஒ மூலமாகவோ விற்று பணத்தை திரட்ட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரயில்டெல் நிறுவனம் மினிரத்னா விருது பெற்ற பொதுத்துறை நிறுவனமாகும். கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் சுமார் 320 கோடி ரூபாய் லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் சொத்து மதிப்பானது சுமார் ஆயிரத்து 249 கோடி ரூபாய் ஆகும். இந்நிறுவனம் நாடு முழுவதும் ரயில்வே பாதையை ஒட்டி கண்ணாடி இழை கம்பிகளை (Optic Fiber Cable) அமைத்துள்ளது. அதோடு பிராட்பேண்ட் மற்றும் மல்டி மீடியா சேவையையும் அளித்து வருகிறது.
ரயில்டெல் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது. தற்போது 25 சதவிகித பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 75 சதவிகிதமாக குறையும். பங்குகளை விற்பது தொடர்பான அறிவிப்பை பொது சொத்து நிர்வாகத் துறை (Department of Investment and Public Asset Managerment-DIPAM) தெரிவித்துள்ளது.
ஐபிஒ அல்லது பொது ஏல முறை ஏதாவது ஒன்றின் மூலம் பணத்தை திரட்ட முடிவு செய்திருந்தாலும் என்றைக்கு என்ற தேதி பற்றிய அறிவிப்பு இன்னும் முடிவாகவில்லை. ஆனால் கண்டிப்பாக வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் தேவையான பணம் திரட்டப்படும் என்று தீபம் (DIPAM) தெரிவித்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications