இந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் இருந்து எச்-1பி விசாவில் அமெரிக்காவில் நுழைவதற்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்து வரும் டொனால்ட் ட்ரம்ப், இந்திய மாணவர்களுக்கான விசாக்களை வழங்குவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்காததால், அமெரிக்கா சென்று கல்வி கற்பதற்கான கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

கடந்த 2017-18ஆம் ஆண்டில் அமெரிக்கா செல்வதற்கான கல்விக் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை சுமார் 1.96 லட்சமாக இருந்தது. அதற்கு முந்தைய 2016-17ஆம் ஆண்டில் 1.86 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒபாமா அதிபராக இருந்த காலகட்டத்தில் அதாவது 2013-14ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்று கல்வி கற்பதற்காக கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை சுமார் 1.20 லட்சமாகவே இருந்தது. ஆனால் ட்ரம்ப் வந்த பின்னர் கல்விக் கடன் வாங்கி அமெரிக்க செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் சராசரியாக 5 சதவிகிதம் வரையிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மினிரத்னா பட்டம் பெற்ற ரயில்டெல் - 25 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசு

முதல் மரியாதை

முதல் மரியாதை

டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பெயரைக் கேட்டாலே இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ளவர்களுக்கு எட்டிக்காயாக கசக்கும் பெயர். ஒபாமா இருந்த வரையிலும் எச்-1பி விசா என்பது இந்திய ஐடி இளைஞர்களுக்கு விசிட்டிங் கார்டு போல மிக எளிதாக கிடைத்து வந்தது. உலகளாவிய அளவில் எச்-1பி விசா வழங்குவதில் இந்தியர்களுக்குத்தான் முதல் மரியாதை இருந்து வந்தது.

கட்டுப்பாடுகள் கிடையாது

கட்டுப்பாடுகள் கிடையாது

எச்-1பி விசா எண்ணிக்கையிலும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக ஆண்டு தோறும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் சராசரியாக 1 லட்சத்திற்கும் கூடுதலாகவே இருந்தன. அதேபோல் எச்-1பி விசா நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்து வந்தது

கல்விக் கடன்கள்
 

கல்விக் கடன்கள்

அதே சமயத்தில் உயர்கல்வி கற்பதற்காக அமெரிக்கா செல்பவர்களின் எண்ணிக்கையானது மிக சொற்ப அளவில் தான் இருந்தது. கல்விக் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் குறைவான அளவிலேயே இருந்து வந்தது. உயர்கல்வி கற்பதற்காக செல்பவர்களுக்கு வழங்கும் விசாக்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை

அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை

கடந்த 2016ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவிக்கு வந்த பின்னர் நிலைமை அப்படியே உல்டாவாக மாறிப்போனது. வரைமுறை இல்லாமல் அதிகப்படியான எச்-1பி விசா வழங்குவதால் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்கள் வந்து அமர்ந்து கொள்கின்றனர். அதோடு அவர்களுக்கு அதிகப்படியான சம்பளமும் வழங்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க வேண்டுமானால், அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இதனால் வேலையில்லாத் திண்டாட்டமும் கணிசமாகக் குறையும் என்று நம்பினார்.

எச்-1பி விசா கட்டுப்பாடு

எச்-1பி விசா கட்டுப்பாடு

வேலையில்லாத் திண்டாட்டம் குறைவதோடு, எச்-1பி விசாவில் இந்தியர்கள் அமெரிக்கா வருவதும் குறையும் என்று நம்பி எச்-1பி விசா வழங்குவதில் தினந்தோறும் புதிய புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இந்திய ஐடி இளைஞர்களுக்கு நம்பியாராக விளங்கத் தொடங்கினார்.

எச்-1பி விசா எண்ணிக்கை குறைப்பு

எச்-1பி விசா எண்ணிக்கை குறைப்பு

முதலில் எச்-1பி விசாவிற்கான குறைந்த பட்ச சம்பளமாக ஆண்டுக்கு 95000 டாலர்கள் இருக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தார். பின்னர் எச்-1பி விசா வேண்டி விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட வேலை எச்-1பி தகுதிப்பட்டியலில் இருக்க வேண்டும் என்று அடுத்த அஸ்திரத்தை ஏவினார். அதற்கடுத்து ஆண்டுக்கு 65000 எச-1பி விசாக்கள் மட்டுமே வழங்கப்படும் என்று கட்டுப்பாடு விதித்தார்.

 நல்லவரா கெட்டவரா

நல்லவரா கெட்டவரா

எச்-1பி விசா வழங்குவதில் அதிக கட்டுப்பாடுகளை விதித்து இந்திய ஐடி இளைஞர்களுக்கு நம்பியாராக தன்னைக் காட்டிக்கொண்ட ட்ரம்ப், மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக வழங்கும் விசாக்களை (Student Visa) அதிக அளவில் வழங்கி மாணவர்களின் மத்தியில் எம்.ஜி.ஆராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

2013ஆம் ஆண்டுகளில் குறைவு தான்

2013ஆம் ஆண்டுகளில் குறைவு தான்

கடந்த 2013-14ஆம் ஆண்டுகளில் இருந்து 2015-16ஆம் ஆண்டுகள் வரையில் கடைபிடித்துவந்த கெடுபிடியான சட்டதிட்டங்களால் உயர்கல்விக்காக அமெரிக்கா செல்வது குறைந்து காணப்பட்டது. உதாரணமாக 2014ஆம் ஆண்டுவாக்கில் உயர் கல்விக்காக கனடா செல்வதற்காக கல்விக் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை சுமார் 38 ஆயிரமாக இருந்தது. அதுவே பின்னர் 2017-18ஆம் ஆண்டு வாக்கில் மூன்று மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்து 71ஆயிரமாக அதிகரித்தது.

மற்ற நாடுகளிலும் அதிகம்

மற்ற நாடுகளிலும் அதிகம்

கல்விக் கடனில் கனடா செல்பவர்களைப்போலவே ஆஸ்திரேலியா செல்பவர்களின் எண்ணிக்கையும் 2013-14ஆம் ஆண்டில் 46 ஆயிரத்து 380 என்று இருந்ததைவிட 2017-18ஆம் ஆண்டில் 100 சதவிகிதம் அதிகரித்து 1 லட்சத்து 8 ஆயிரத்து 292 ஆக அதிகரித்து காணப்பட்டது. இங்கிலாந்தில் 2013-14ஆம் ஆண்டில் வழங்கிய அதே அளவை 2017-18ஆம் ஆண்டிலும் தொடர்ந்து கடைபிடித்து வந்ததால் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

ஜெர்மனியிலும் அதிகம்

ஜெர்மனியிலும் அதிகம்

மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு கல்விக் கடன் வாங்கி செல்பவர்களின் எண்ணிக்கையானது 2013-14ஆம் ஆண்டுளில் 9618ஆக இருந்தது 2017-18ஆம் ஆண்டுகளில் 90 சதவிகிதம் அதிகரித்து காணப்பட்டது.

அமெரிக்கா தான் டாப்

அமெரிக்கா தான் டாப்

அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த 2013-14ஆம் ஆண்டுகளில் கல்விக் கடன் வாங்கி உயர் கல்விக்காக அமெரிக்க செல்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2ஆயிரத்து 673 ஆக இருந்தது. பின்னர் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வந்ததில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 5 சதவிகிதம் வரை அதிகரித்து காணப்பட்டது. 2017-18ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 1 லட்சத்து 96 ஆயிரத்து 271 ஆக அதிகரித்து காணப்பட்டது.

எண்ணிக்கை சரிவு

எண்ணிக்கை சரிவு

ஒபாமா இருந்தபோது கடந்த 2015ஆம் ஆண்டு வாக்கில் உயர்கல்வி கற்பதற்காக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களில் நிராகரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 74831 ஆக இருந்தது. அதுவே ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னர் 2018ஆம் ஆண்டில் 40 சதவிகிதம் சரிந்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையானது சுமார் 42691ஆக குறைந்துவிட்டது.

எச்-1பி விசா லாட்டரி

எச்-1பி விசா லாட்டரி

கடந்த ஆண்டு வரையிலும் எச்-1பி விசாவில் அமெரிக்கா செல்பவர்களுக்கான எண்ணிக்கை 65 ஆயிரமாகவும் உயர் கல்விக்காக செல்பவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரமாகவும் இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு மொத்தமாக 65 ஆயிரம் எச்-1பி விசாக்களாக மாற்றப்பட்டன. அதாவது ஒருவேளை வேலைக்கான எச்-1பி விசா நிராகரிக்கப்பட்டால், மீண்டும் அதே பிரிவில் உயர்கல்விக்காக எச்-1பி விசா பிரிவில் விண்ணப்பிக்கலாம் என்று எச்டிஎஃப்சி கிரெடிலா (HDFC Credila) நிறுவனத்தின் இணை நிறுவனர் அஜய் போரா தேரிவித்தார்.

 வேலையில்லாத் திண்டாட்டம் குறைவு

வேலையில்லாத் திண்டாட்டம் குறைவு

ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையால் வேலையில்லாத் திண்டாட்டத்தின் சராசரி அளவானது கடந்த பிப்ரவரி மாதத்தில் 2.2 சதவிகிதமாக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Students visa rise growth in Donald Trump period

The number of Indian students seeking entry into US by securing a loan rose barely 5% year-on-year to 1.96 lakhs in Financial Year 2018.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X