என்கிட்ட மோதுனா உலக வரைபடத்தில இருந்த காணாம பண்ணிருவேன் - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்கா உடன் மோதிவிட்டு ஜெயித்துவிடலாம் என்று ஈரான் நினைத்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை ரப்பர் வைத்து அழித்து விடட்டும். அப்படி இல்லாவிட்டால் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட நிலை தான் ஈரானுக்கும் ஏற்படும் என்றும் உலக வரைபடத்தில் இருந்து இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விடும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

எனக்கு சண்டையில் விருப்பம் கிடையாது, ஆனால் அவர்கள் தான் அந்த சூழ்நிலையை உருவாக்கும் நிலைக்கு என்னை தள்ளி விடுகின்றனர், அவர்கள் அணு ஆயுதங்களை ஒழித்துவிட்டால் எங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் ட்ரம்ப் காட்டமாக கூறினார்.

நம்மூரில் தான் சில அரசியல் தலைவர்கள் தினசரி தங்களின் புகைப்படம், தங்களைப் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் அதே நினைப்பில் இருப்பார் போலிருக்கிறது. ஒருவேளை நம்மூர் அரசியல் தலைவர்களிடம் பயிற்சி ஏதாவது எடுத்திருப்பார் போல.

அடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா? பியூஷ் கோயாலா?

மோதிப்பார்க்கலாம் வர்றியா

மோதிப்பார்க்கலாம் வர்றியா

தினமும் ஏதாவது ஒரு நாட்டுடன் ஏழரை இழுத்துக்கொண்டே இல்லாவிட்டால் ட்ரம்புக்கு தூக்கம் வராது போல. நேற்றைக்கு சிக்கியது வளைகுடா நாடான ஈரான்தான். எங்களுடன் மோத நினைத்தால் அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் விளைவுகள் வேறுவிதமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பருந்துப் பார்வை

பருந்துப் பார்வை

உலக போலீஸ்காரனாக தன்னை நினைத்துக்கொள்ளும் அமெரிக்காவுக்கு ஆரம்பத்தில் இருந்தே எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளின் மீது ஒரு கண் இருந்தது. தன்னுடைய கழுகக் கண்ணால் தீவிரமாக கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, எண்ணெய் வளம் மிக அதிக அளவில் இருக்கும் ஈரான், ஈராக் குவைத் போன்ற நாடுகளின் மீது தன்னுடைய பருந்துப் பார்வையை பதிந்துகொண்டே இருந்தது.

எச்சில் ஊறவைக்கும் எண்ணெய் வளம்
 

எச்சில் ஊறவைக்கும் எண்ணெய் வளம்

கடந்த 1980ஆம் ஆண்டுகளில் தன்னுடைய முதல் இரையாக குவைத்தை எடுத்துக்கொண்டது. அதன் பின்னர் அங்கிருந்தே தன்னுடைய பார்வையை பக்கத்தில் இருந்த ஈராக் மீது திருப்பியது. அங்கிருந்த எண்ணெய் வளத்தை பார்த்து நாக்கில் எச்சில் ஊற்றெடுத்தது. எப்படியாவது அதை சாப்பிட்டாக வேண்டுமே என்ற வெறியில் துடித்தது.

பின்வாங்கிய ஈராக்

பின்வாங்கிய ஈராக்

ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே, என்ன செய்வது என்று யோசித்த வேளையில் தானாக வந்து மாட்டியது ஈராக். குட்டி நாடான குவைத்தை ஆக்கிரமித்ததாக சொல்லி சண்டைக்கு இழுத்தது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் நடைபெற்ற சண்டையில் ஈராக் பின்வாங்கியது. இருந்தாலும் அமெரிக்காவுக்கு எப்படியாவது ஈராக்கை கபளீகரம் செய்தாக வேண்டுமே என்ற வேட்கை மட்டும் தீரவில்லை.

6 லட்சம் மக்கள் படுகொலை

6 லட்சம் மக்கள் படுகொலை

உலகை அச்சுறுத்தும் ரசாயன ஆயுதங்களை வைத்து ஈராக் அண்டை நாடுகளை மிரட்டி வருகிறது என்று சொல்லி அமெரிக்கா வம்படியாக ஈராக்கை சண்டைக்கு இழுத்தது. சில மாதங்கள் நடைபெற்ற சண்டையில் சுமார் 6 லட்சம் ஈராக் மக்கள் கொல்லப்பட்டனர். பண்டைய நாகரீகத்தின் தொட்டில் என்று போற்றப்பட்ட யூப்ரடீஸ் மற்றும் டைக்ரீஸ் நதிகளில் ரத்த ஆறு ஓடியது.

தூக்கிலிடப்பட்ட சதாம் உசேன்

தூக்கிலிடப்பட்ட சதாம் உசேன்

தப்பி ஓடிய ஈராக் அதிபர் சதாம் உசேன் பின்னர் பாதாள அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதன் பின்னர் ஈராக்கின் எண்ணெய் வளங்களை தன் வசம் வைத்துக்கொண்டுவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் கடைசியில் ஒரு 50 கிராம் ரசாயன ஆயுதத்தைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்பது தான் வேடிக்கையான வேதனை.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் 4வது இடம்

கச்சா எண்ணெய் உற்பத்தியில் 4வது இடம்

இப்பொழுது தன்னுடைய பார்வையை ஈரான் மீது திருப்பி உள்ளது. உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் சுமார் நான்காவது இடத்திலும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ள ஈராக்கை எப்படியாவது தன் வசம் வைத்துக்கொள்ள துடியாய் துடித்துக் கொண்டுள்ளது.

அணு ஆயுதக் குவியல்

அணு ஆயுதக் குவியல்

முன்பு ஈராக் மீது சுமத்திய அதே பழைய குற்றச்சாட்டை ஈரான் மீதும் சுமத்தி வருகிறது. தடை செய்யப்பட்ட அணு ஆயுதங்களையும் யுரேனியத்தையும் வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறது என்றும் யுரேனியத்தை சிரியா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது என்றும், அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்றும் மிரட்டி வருகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்திக்கு தடை

கச்சா எண்ணெய் உற்பத்திக்கு தடை

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாமல் ஈராக் தன்னுடைய வேலையை செய்துகொண்டு வந்தது. இதனால் எரிச்சலடைந்த அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்தது. தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து விற்க வேண்டும் என்று நிபந்ததை விதித்தது. அதோடு நில்லாமல் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.

 பணிந்து போன இந்தியா

பணிந்து போன இந்தியா

தன்னுடைய எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் அந்த நாடுகளுக்கும் (இந்தியா உள்பட) பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய் இறக்குமதியை ஈரான் நாட்டிடம் இருந்துதான் அதிக அளவில் செய்து வந்தது. அதோடு கச்சா எண்ணெய் வாங்குவதற்கு உண்டான பணத்தை இந்திய ரூபாயிலேயே கொடுத்துவந்தது. இதனால் அமெரிக்காவுக்கும் ஒரு பயனும் இல்லை என்பதால் இந்தியாவையும் மிரட்டியது. வேறு வழி இல்லாததால் இந்தியாவும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு சவுதி அரேபியாவை நாடியுள்ளது.

 நல்ல பேர் வாங்கணும்

நல்ல பேர் வாங்கணும்

தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்ப் எப்படியாவது அமெரிக்க மக்களிடம் நல்ல பேர் வாங்கிவிட வேண்டும் என்ற பேராசையில் ஈரானை கபளீகரம் செய்ய துடித்துகொண்டிருக்கிறார். நாங்கள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கிறோம். எங்களின் எச்சரிக்கையை ஈரான் தொடர்ந்து உதாசீனப்படுத்திக் கொண்டே வருகிறது.

ஈரான் காணாமல் போகும்

ஈரான் காணாமல் போகும்

ஒருவேளை ஈரானுக்கு எங்களுடன் மோத வேண்டும் என்ற நப்பாசை இருந்தால் தயவு செய்து அந்த நினைப்பை ரப்பர் வைத்து அழித்துவிடச்சொல்லுங்கள். இல்லாவிட்டால் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலைதான் அவர்களுக்கும் ஏற்படும். உலக வரைபடத்திலிருந்தே ஈரான் என்ற தேசம் இல்லாமல் ஒழிக்கப்பட்டுவிடும் என்று செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ட்ரம்ப் எச்சரிக்கும் விதமாக கூறினார்.

அணு ஆயுதங்களை ஒழிக்கணும்

அணு ஆயுதங்களை ஒழிக்கணும்

கடந்த ஞாயிறு அன்று ஃபோக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு எங்களை எல்லாம் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க முடியாது. அவர்களிடம் உள்ள அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்று தொடர்ந்து எச்சரித்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் அவர்கள் அதை உதாசீனப்படுத்தி வருகிறார்கள்.

உங்களால் தடுக்க முடியுமா

உங்களால் தடுக்க முடியுமா

போர் வரும் என்பதை நான் உறுதியாக நம்பவில்லை. போர் வருமானால் அது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதோடு அதை விட முக்கியமாக அப்பாவி மக்களையும் கொன்று குவித்துவிடும், ஆனால் அவர்கள் தான் போரை நோக்கி என்னை இழுத்துவிடுகிறார்கள். அவர்கள் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை உங்களால் தடுக்க முடியாது, என்று கூறியதோடு போர் வருமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள் என்று கூறினார்.

நாங்களும் சண்டைக்கு தயார்தான்

நாங்களும் சண்டைக்கு தயார்தான்

அமெரிக்காவின் நிலை குறித்து பேட்டியளித்த ஈரான் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஹோசின் சலாமி (Hossein Salami) ஈரான் எந்தவிதமான போரையும் விரும்பவில்லை. ஆனால் அதே சமயத்தில் போர் வருமானால் அதை சந்திக்க முழு வீச்சில் தயாராக உள்ளோம், என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US warns Iran: If Iran wants to fight with US then Iran will be End

If Iran wants to fights, that will be the official end of Iran, Donald Trump said in a tweet and never threatens the United States again
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X