என்னாது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு நாங்க சம்பளம் தரணுமா.. கதவை இழுத்து சாத்திய எஸ்பிஐ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தேளுக்கு இடம் கொடுத்தால் நொடிக்கு நொடி கொட்டுமாம் என்பதற்கு ஏற்ப ஜெட் ஏர்வேஸ் கடன் என்னும் தேளுக்கு இடம் கொடுத்து விட்டு இப்போது நொடிக்கு நொடி கொட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறது.

 

அதோடு மட்டும் அல்லா, ஜெட் ஏர்வேஸ்வுடன் இணைந்து அதன் ஊழியர்களும் கொட்டு வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏற்கனவே கடன் பிரச்சனையால் சிக்கித் தவித்து சின்ன பின்னமாகிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வேலையில்லாமல் தவித்து வருவது ஒரு புறம் எனில், மறுபுறம் செய்த வேலைக்காவது பணத்தை கொடுங்கள் என்பது தான் வேதனையான விஷயம்.

என்னாது ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு நாங்க சம்பளம் தரணுமா.. கதவை இழுத்து சாத்திய எஸ்பிஐ!

இது மழைவிட்டாலும் இன்னும் ஈரம் காயவில்லை என்பது போலதான் இருக்கிறது. என்றே நடந்த ஒரு பிரச்சனைக்கு இன்றுவரையில் ஊழியர்கள் பலிக் கெடவாகி வருகின்றனர்.

உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் நலனுக்காக அவரசரகால நிதியாக பணம் ஓதுக்கப்பட வேண்டும் என்ற பல முறை எஸ்.பி.ஐயிடம் முறையிட்டு வந்தாலும், இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன் என்பதற்கு ஏற்ப, எஸ்.பி.ஐ தற்போதைக்கு எதுவும் அவசர கால நிதியாக ஒதுக்க முடியாது என்று கூறி வருகிறது.

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனதிதில் யாரேனும் முதலீடு செய்தாலோ அல்லது இந்த நிறுவனத்தை வாங்க முன் வந்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற நிலையில் ஒரு சில நிறுவனங்களே ஆர்வம் காட்டி வந்தன.

எனினும் இதுகுறித்த முழுமையான தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், இனி ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தற்போதைக்கு சிரி அளவிலாவது ஒரு நிதியை ஒதுக்காலாமே என்று கேட்டதற்கு, ஜெட் ஏர்வேஸின் ஏலம் முடியும் வரையில் எந்த நிதியையும் ஒதுக்க முடியாது என்று எஸ்.பி.ஐ அதிரடியாய் மறுத்து விட்டதாம்.

 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தரப்பில், சுமார் 200 ஊழியர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். இருப்பினும் எஸ்.பி.ஐ இதற்கெல்லாம் செவி சாய்ப்பதாக இல்லை.

இந்த நிலையில் இந்துஜா குழுமம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடியுமா என்றும் பரீசிலித்தும் வருகிறதாம். இதே முன்பு ஆர்வம் தெரிவித்திருந்த எதியாட் நிறுவனம் தன்னால் முழு பங்கையும் வாங்க முடியாது என்றும், ஒரு பங்காளனாக இருக்க முடியும் என்று பின் வாங்கியுள்ளதாம்.

எப்படியோங்க ஊழியர்களுக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கும் சரியானதொரு வாய்ப்பு கிடைத்தால் சரிதான். அதோடு ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அது தேர்தல் பிரச்சனை காராமாக பெரிதும் கண்டுக்க படவில்லை என்றே கூறலாம். இருப்பினும் நடந்து கொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் மோடியே மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்ற நிலையில், இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cannot release funds to pay Jet Airways staff

SBI to jet airways has reportedly said it will not be able to release interim funds to pay the company's employee salaries.
Story first published: Thursday, May 23, 2019, 13:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X