பாரீஸ் : விமான விபத்தா அதுவும் போயிங் விமானமா? அட இது அடிக்கடி இப்படியே நடக்குது? ஏன் இதற்கு என்ன காரணம்? இதில் பல நூறு பேர் பலியாகியும் உள்ளனரே. என்ற பல கேள்விகள் நம் மனதில் எழுந்துள்ளன. ஆக இது போன்ற பல விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளதால் நாடு முழுவதும் போயிங்க் 737 ரக விமானங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டது.
எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது. இதில் 157 பேர் உயிரும் இழந்தனர்.

இந்த நிலையில் எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் தனது கணவரை இழந்ததாகவும், இதற்காக பிரான்சு நாட்டை சேர்ந்த நாடெஜ் டூபோஸ் சீக்ஸ் என்கிற பெண், தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் டாலரை இழப்பீடாக கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளாராம்.
சீக்ஸ், அவருடைய கணவர் ஜொனாதன் - ஒரு கென்ய குடிமகனாம். அதோடு amarind Group of Cos நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் இந்த விமான விபத்தில் இறந்துவிட்டார். இதனால் சீக்ஸ், போயிங் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்ந்துள்ளாராம்.
அதோடு இந்த சீக்ஸ் - ஜெனாதன் தம்பதிக்கு மூன்று இளம் குழந்தைகள் உள்ளனராம், அதுவும் 7 முதல் 10 வயதுக்குள். இது குறித்து சீக்ஸ் கூறுகையில் என் கணவரை தெரிந்தே எங்களிடம் இருந்து எடுத்துக் கொண்டனர். அவர் என் குழந்தைகளுக்கு அப்பா மட்டும் அல்ல, அவர் ஒரு சிறந்த வர்த்தகரும் கூட என கண்ணீர் விட்டுள்ளராம்.
இது குறித்து இந்த போயிங் விமான நிறுவனமும், விமானத்தின் மென் பொருளில் பிரச்சனை இருந்தது உண்மை தான் என ஒப்புக் கொண்டுள்ளதாம். உண்மைய ஒப்புக் கொண்டால் மட்டும் போதுமா? இறந்த 157 பேரின் குடும்பங்கள் என்னாவது, அதிலும் சீக்ஸ் போல இளம் வயதில் குழந்தையை வைத்துக் கொண்டு தள்ளாடும் குடும்பங்களுக்கு என்ன சொல்லப் போகிறது இந்த விமான நிறுவனம்.
அதோடு இது ஒன்றும் முதல் முறை நடக்கும் சம்பவம் அல்ல, இது தொடர்கதையாக அல்லவா உள்ளது. கடந்த 2018 அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லயன் ஏர்லைன்ஸின் போயிங்க் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளாகி பல பேர் பலியாகினர். இந்த ஈரம் கூட இன்னும் காயவில்லை அதற்குள் அடுத்த விமான விபத்தா? என்று சமூக ஆர்வலர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறதாம்.
இதற்கிடையில் மற்றொரு வழக்கு பாரிஸில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றொரு குடும்பத்திலிருந்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் போயிங் விமான படுகொலை என்பது "தன்னலமில்லாத படுகொலை" என்று குற்றம் சாட்டியுள்ளதாம் அந்த குடும்பம்.


Click it and Unblock the Notifications