இங்க தான் இப்படின்னா? அங்கயும் அப்படிதான்னா? ஆமாங்க இத்தாலிய விமானத் தொழிலாளர்கள் 24 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாங்கலாம். இதனால் குறைந்த பட்சம் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனவாம்.
அதோடு மட்டும் இல்லங்க.. உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளனவாம். அதோடு பல உள்நாட்டு, வெளிநாட்டு விமான விமானங்கள் தாமதமாதான் வரும்ன்னு சொல்லி இருக்காம் இத்தாலி நாட்டின் விமான துறை.

அதிலும் சர்வதேச விமான தளமான அலிடாலியா, கடந்த திங்கட்கிழமை மாலை தொடங்கி, இதுவரை 300 க்கும் அதிகமான பயணங்களைத் நிறுத்தியுள்ளதாம்.
அதிலும் அலிடாலியாவில் இருந்து லண்டனுக்கு செல்லும் 6 விமானங்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாம். அதோட ஹீத்ரோ மற்றும் ரோம் இடையே நான்கு விமானங்களும், ஹீத்ரோ மற்றும் மிலன் லினேட் இடையே ஒரு சுற்று பயணமும் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாம்.
இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்ன அப்படின்னா கூடுதலாக, புதன்கிழமை காலை ஹீத்ரோவிலிருந்து ரோம் வரை புறப்படுவது ரத்து செய்யப்பட்டதாம்.
சும்மா இருப்பாங்களா பயணிகள் கடித்து கொதறிட்டாங்களாம். எனினும் என்ன பண்றது முள்ளுமேல சேலைய போட்டாச்சே மெதுவாதானே எடுக்க முடியும், அப்படின்னு பயணிகள கூல் பண்றதுக்காக உங்களுக்கு அடுத்த நாள், முதல் பிளைட்லயே டிக்கெட் புக் பண்ணி தர்றோம் சொல்லி கூல் படுத்தி இருங்காங்களாம்.
இதனாலேயே சிலர் கடுப்பாகி டிக்கெட்டும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் சொல்லிட்டு, சுமார் 4000 பேர் டிக்கெட்டா கேன்சல் செய்துட்டு போய்ட்டாங்களாம்.
எனினும் 60% பயணிகள் நாளைக்கு பயணம் செய்துக் கொள்ளலாம் என்று கெஞ்சி கூத்தாடி ஒத்துக் வச்சிருக்காங்கலாம். அதோட வாடிக்கையாளர்களின் இந்த சிரமத்தை குறைக்க நிறுவனம், இன்னும் பல முயற்சிகள் எடுத்து வருதாம்.
அதோடு சமீபத்திய தொழில்துறை நடவடிக்கையால் விமான நிறுவனங்களுக்கு நஷ்டம் அதிகரித்துள்ளதாம். எப்படின்னு கேட்குறீங்களா? அதாவது விமானம் ஒரு வேளை ரத்து செய்யப்பட்டால், விமானங்களில் இருந்து வருவாய் இழப்பு தவிர, அவர்களுக்கு உணவு வழங்குவதற்கும், தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் வேண்டுமாம். இந்த கொள்கையால் ஏற்கனவே வருவாய் இழப்பை சந்தித்த விமான நிறுவனங்களுக்கு மேற்கொண்டு பாதிப்பே எனவும் கருதுகின்றன. அதனால ஒரு கல்லில் இரண்டு மாங்காய்ன்னு சொல்லுவாங்க, ஆனா இங்க ஒரே கல்லுல பல விக்கட் போய்டுசே.
இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்ன அப்படின்ன, முன்னதாக மே மாதம் பிரஞ்சு ஏர் ட்ராஃபிக் கட்டுப்பாட்டு வீரர்கள் 500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இது தற்போது விமான துறையில் தொடரும் ஒரு விஷயமாகவே உள்ளதாம்.


Click it and Unblock the Notifications