பிரிட்டனின் ராணி எலிசபெத்தின் சோசியல் மீடியா பக்கங்களை நிர்வகிக்க அட்மின் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கிங்காம் அரண்மனைக்கு வேலைக்குப் போனால் ரூ 26.5 லட்சம் சம்பளம் வழங்கப்படுமாம்.
லண்டன்: பக்கிங்காம் அரண்மனையில் எலிசபெத் ராணியின் சமூகவலைத்தள பக்கங்களை நிர்வகிக்கும் அட்மின் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். சோசியல் மீடியா மேனேஜர் பதவிக்க சம்பளம் எவ்ளோ தெரியுமா ஜென்டில்மேன் ரூ. 26.5 லட்சமாம்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் வசிக்கும் இரண்டாம் எலிசபெத் மகாராணி புதிதாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் நுழைந்துள்ளார். அவருக்கு தற்போதைய சோசியல் மீடியா பற்றி எதுவும் தெரியாது. புகைப்படங்களை பதிவிடவும், கருத்துக்களை பதிவிடவும் விபரம் தெரிந்த சோசியல் மீடியா மேனேஜர் தேவை என்பதற்காகவே புதிய பணியிடத்தை உருவாக்கியுள்ளனர்.

வேலை ஒன்றும் பெரிய வேலையில்லை. காலையில் அரண்மனைக்கு போக வேண்டியது. அரண்மனையில் இருந்து மகராணி சொல்வதைக் கேட்டு அதை பதிவில் போட வேண்டியது, அரண்மனையில் தரும் மதிய உணவை சாப்பிட்டு விட்டு மாலை வரை இருக்க வேண்டும். அப்புறம் வீட்டுக்கு வந்து விடலாம். இந்த வேலைக்கு சம்பளம் ஆண்டுக்கு 30 ஆயிரம் பிரிட்டீஷ் பவுண்ட், அது நம்ம ஊர் பணத்தில் 26 லட்சத்து 57 ஆயிரத்து 665 ரூபாய் ஆகும்.
வருடத்திற்கு 33 நாட்கள் லீவு உண்டு. 6 மாதத்திற்குப் பின் பணி உறுதி செய்யப்பட்ட பின்னர் பிஎஃப் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்பட உள்ளது. என்ன அட்மின் வேலைக்கு அப்ளை பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா.


Click it and Unblock the Notifications