டெல்லி : தேர்தல் முடிவுகள் என்ன ஆகுமோ? யார் ஆட்சி அமைப்பார்களோ? அடுத்து எந்த கட்சி ஆட்சியை கைபற்றுமோ? என்ற பதட்டத்திலேயே முதலீட்டாளர்கள் பின்வாங்கினர். எனினும் தேர்தல் முடிவுகள் குறித்த வாக்கெடுப்பு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்துடனேயே காணப்படுகிறது.
இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை ஆளும் கட்சிக்கு சாதகமாக போய் கொண்டிருப்பதால் சந்தையும் எந்த பாதகமும் இல்லாமல் சாதகமாகவே போய்க் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் பி.ஜே.பி 240 இடங்களிலும், காங்கிரஸ் 101 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 660 புள்ளிகள் உயர்ந்து 39758 ஆக வர்த்தகமாகி வருகிறது, இதுவே நிஃப்டி 180 புள்ளிகள் அதிகரித்து 11,915 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
இந்த நிலையில் பங்கு வர்த்தகத்தில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பங்கு சந்தையில் சாதமான சூழ்நிலை உருவாகும், அதோடு நிதிக் கொள்கைகளில் பெரிதும் மாற்றம் இருக்காது என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டிலும் பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளும் சாதகமாகவே இருக்கும்பட்சத்தில் பல பங்குகள் ஏற்றத்திலேயே உள்ளன.
அந்த நிலையில் மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் உயர்ந்துள்ளன. இதில் சென்செக்ஸை கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 25 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதில் 5 நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் சரிந்தே காணப்படுகிறது.
குறிப்பாக இண்டஸ்இந்த் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, எச்.டீ.எப்.சி., கோட்டக் மகிந்திரா வங்கி, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், டாட்டா மோட்டார்ஸ், வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, என்.டி.பி.சி., எல் அண்டு டி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை அதிகரித்தே காணப்படுகிறது.
எனினும் யெஸ் பேங்க், ஐ.டி.சி, டி.சி.எஸ், பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய 5 நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications