விளையாட்டு வீராங்கனைகளுக்கு அதிக புகழோடு பணமும் கிடைக்கிறது. விளையாடி ஜெயிக்கும் பணம் மட்டுமல்ல விளம்பர வருமானமும் அதிகமாகவே கிடைக்கிறது. உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகளின் பட்டியலும் வெளி
மும்பை: உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்திய பாட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்துவும் இடம் பிடித்துள்ளார். விளையாட்டில் ஜெயித்து சம்பாதிக்கும் பணம் மட்டுமல்லாமல் கிடைக்கும் புகழ் மூலம் விளம்பர வருமானமும் அதிகம் குவிகிறது. உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் டாப் டென் விளையாட்டு வீராங்கனைப் பற்றி பார்க்கலாம்.
பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் செரீனா வில்லியம்ஸ் வழக்கம் போல முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களில் இருக்கிறார். பி.வி சிந்து இந்த பட்டியலில் ஏழாம் இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் பெரும்பாலும் டென்னிஸ் வீராங்கனைகளே இடம் பெற்றுள்ளனர். முதல் பத்து இடங்களில் எட்டு டென்னிஸ் வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். மற்ற இருவர் பி.வி.சிந்து மற்றும் ஓய்வு பெற்ற ரேஸ் கார் டிரைவர் டேனிகா பேட்ரிக். இதில் இந்தியாவின் பி.வி.சிந்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். டேனிகா பேட்ரிக் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
பி வி சிந்து
இந்தியாவின் பி.வி.சிந்து 59.37 கோடி சம்பாதித்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் சார்பிலும், பாட்மிண்டன் சார்பிலும் முதல் பத்து இடங்களில் இருக்கும் ஒரே வீராங்கனை சிந்து மட்டுமே. 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சிந்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார். பாட்மிண்டன் தரவரிசையில் தொடர்ந்து முன் வரிசையிலேயே இருந்து வருகிறார்.
விளம்பர வருமானம்
இந்த பட்டியலில் செரீனா, மரியா ஷரபோவா, பி.வி.சிந்து ஆகியோர் சமீப காலங்களில் எந்த பட்டங்களையும் வெல்லவில்லை. என்றாலும் அவர்கள் அதிக பணம் சம்பாதித்து வருகின்றனர். விளம்பர வருமானம் மூலம் அதிக பணம் கிடைக்கிறது. நோக்கியா, பானசானிக் உள்ளிட்ட அரைடஜனுக்கு மேற்பட்ட விளம்பரங்களில் நடித்து வருமானம் சம்பாதிக்கிறார்.
செரீனா வில்லியம்ஸ்
முதல் இடத்தை செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவர் டென்னிஸ் போட்டியில் கிடைத்த வெற்றிப் பணமாக 43.3 லட்சம் (62,000 டாலர்கள்) மட்டுமே பெற்றுள்ளார். அதே சமயம், விளம்பர ஒப்பந்தம் மூலம் 126 கோடி (18.1 மில்லியன்) சம்பாதித்துள்ளார். செரினா வில்லியம்ஸ்க்கு தற்போது 34வயது ஆகிறது. அவர் கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக டென்னிஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
வருமானம் எவ்வளவு
செரினா வில்லியம்ஸ் இதுவரை ஆடிய விளையாட்டுப்போட்டிகளில் ரூ475கோடி சம்பாதித்துள்ளார் . மற்ற எந்த விளையாட்டு வீராங்கனைகள் சம்பாதித்தைக்காட்டிலும் செரினா வில்லியம்ஸ் இரு மடங்கு அதிகமாக சம்பாதித்துள்ளார். இதற்கு முன்னர் 12 மாதங்களில் அதிகம் சம்பாதித்த டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமை ரஷ்ய வீராங்கனை மரிய ஷெரபோவாவிற்கு இருந்தது. அந்த சாதனையை தற்போது செரினா வில்லியம்ஸ் முறியடித்துள்ளார்.எச்எஸ்என், நைக் நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார் செரீனா.
டேன் கரோலின்
டென்னிஸ் வீராங்கனைகள் டேன் கரோலின் வோஸ்னியாக்கி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 13 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது.
அடிடாஸ், ரோலெக்ஸ் உள்ளிட்ட அரைடஜன் நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார் இந்த அழகுப்புயல். ஓவோ ஆப்டிக்ஸ் சன் கிளாஸ் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
ஸ்லோஆன் ஸ்டீபன்ஸ்
ஸ்லோஆன் ஸ்டீபன்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அவரது வருமானம் ரூ.78 கோடி. 2017ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற பின்னர் சுக்கிரதிசை ஆரம்பித்தது. நைக், மெர்சிடிஸ் பென்ஸ், ரோலெக்ஸ், கோல்கேட் என விளம்பரங்களின் பிராண்ட் அம்பாசிடராக வலம் வருகிறார். இதன் மூலம் வருமானமும் கொட்டுகிறது.
கார்பைன் முகுருசா
ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 76.8 கோடி வருமானத்துடன் நான்காம் இடத்தில் இருக்கிறார். கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டம் வென்ற கார்பைன் முகுருசாவிற்கு ரோலெக்ஸ், சன் கிளாஸ், இன்சூரன்ஸ் நிறுவன விளம்பரங்கள் மூலம் வருமானம் செழிக்கிறது.
மரியா ஷரபோவா
ரஷ்யாவின் மரியா ஷரபோவா 73.3 கோடி வருமானத்துடன் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றனர். இவருக்கு நைக், ஹெட், போர்ஷே நிறுவனங்களின் விளம்பரங்கள் மூலம் வருமானம் கிடைக்கிறது. இந்த நிறுவனங்களிடம் பல ஆண்டுகள் பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.
வீனஸ் வில்லியம்ஸ்
வீனஸ் வில்லியம்ஸ் 10.2 மில்லியன் டாலர் வருமானத்துடன் ஆறாம் இடத்தில் இருக்கிறார். 38 வயதாகும் இவருக்கு 2020 ஒலிம்பிக்கில் பட்டம் வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார். இந்த பட்டியலில் சிமோனா ஹலீப் 7.7 மில்லியன் டாலர் வருமானத்துடன் எட்டாம் இடத்தில் இருக்கிறார். டேனிகா பார்ட்ரிகா 7.5 மில்லியன் டாலர் வருமானத்துடன் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். ஏஞ்சலிக் ஹெர்பர் 7 மில்லியன் டாலர் வருமானத்துடன் 10வது இடத்தில் இருக்கிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications