ஒருத்தரும் சரியில்லை.. எடு எந்த வயாகராவை.. பிரான்ஸ் மேயர் செஞ்ச வேலையைப் பாருங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன பண்றது பா? ஒரு பயலும் வேலைக்கே ஆக மாட்டேங்குறான். வர வர நாட்டில் மக்கள் தொகை வேற கம்மியாகிட்டே வருது. என்ன பண்ணலாம் என்று யோசித்த போது நம்ம பிரெஞ்சு மேயருக்கு தோன்றிய ஐடியா பாருங்களேன்.

ஆமாங்க நம்ம ஊருல ரேஷன்ல்ல அரிசி பருப்பு தான் சும்மா கொடுத்தாங்க? அதுவும் இப்ப இல்ல? ஆனா பிரெஞ்சு நாட்டுல உள்ள மான்டேரவின் மேயரான Jean Debouzy அந்த நாட்டில் குழந்தைகள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்குன்னு வயாகராவ சும்மாவே கொடுக்கறாம்.

ஒருத்தரும் சரியில்லை.. எடு எந்த வயாகராவை.. பிரான்ஸ் மேயர் செஞ்ச வேலையைப் பாருங்க!

அதுவும் பாரிஸின் தெற்கு பகுதிகளில் கிராமத்திற்கு 650 மக்களே இருக்காங்களாம். இதனால் அந்த கிராமங்களில் குழந்தைகளின் விகிதம் மிக குறைவாகவே இருக்காம். அதிலும் பள்ளிக்கூடங்கள் எல்லாம் மாணவர்கள் அதிகம் இல்லாம காத்து வாங்கிட்டு இருக்காம் அப்பு.

 இந்த 10 பேருக்கு மட்டும் 11,000 கோடி ரூவா சம்பளமா (Salary)..? அப்ப மத்தவங்களுக்கு 910 தானா..? இந்த 10 பேருக்கு மட்டும் 11,000 கோடி ரூவா சம்பளமா (Salary)..? அப்ப மத்தவங்களுக்கு 910 தானா..?

ஆமா அப்பு கடந்த 2000 வருடத்துல இருந்தே இந்த மக்கள் தொகை கம்மியாகிட்டே வருதாம். அதுவும் சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின் படி இந்த நாட்டின் மக்கள் தொகை கடந்த மே23வரை, மொத்தம் 65,453,854 தானாம். அதாவது 6.5 கோடி தானாம். அதுவும் உலக நாடுகளின் மக்கள் தொகையில் 0.85% மட்டுமே பிரான்சின் மக்கள் தொகையாம். அதுவும் மொத்த மக்கள் தொகையில்ல இந்த நாடு 22வது இடத்துல இருக்குன்னா பார்த்துக்கோங்களேன். அதிலயும் இந்த நாட்டோட ஜனத்தொகை அடர்த்தி Kmக்கு வெறும் 120 பேர்தானாம்.

அதிலும் சில கிராமங்கள்ள சில பேர் குழந்தையே இல்லாம இறந்தும் போறாங்களாம். இது போன்ற பிரச்சனைய தடுக்க அரசு 18 வயது முதல் 40 வயது வரை உள்ள தம்பதிகளுக்கு சும்மாவே வயாகாராவை வழங்கிட்டு இருக்காங்களாம்.

அதிலும் இந்த மாதிரி குறைபாடுள்ள யாரும் கிராமங்களுக்கு சென்றாலும் அவர்களுக்கும் தர்றாங்களாம்.

இந்த பாலிசி சட்ட பூர்வமா தெளிவா இல்லாததால, இப்போதைக்கு இந்த மருந்த பிரான்சில் மட்டும் பரிந்துரைக்கபடுகிறதாம். அதே போல பிரிட்டனில் இது போன்ற எந்த விழிப்புணர்வும் இல்லாமலும், போதை பொருட்கள் கவுண்டர்களில் கிடைக்குதாம்பா? எக்கு தப்பா யாரும் அந்த பக்கம் போயிடாதீங்க சரியா?

இன்னொரு முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா? சும்மா கொடுத்து கொடுத்து எல்லா மாத்திரைகளும் தீர்ந்து போச்சாம். அதுனால இதற்குன்னு தனியா ஒரு போர்ட்டல்ல உருவாக்க போறாராம். அதுல வேற எதுவும் நாடுகள்யோ அல்லது உள்ளூர்ல கிடைக்குமா? எதுவும் புரோபசல் இருக்குமான்னு பார்த்திட்டு இருக்காறாம்.

எப்படியோ தப்பி தவறி அவர இந்தியா பக்கம் யாரும் பார்த்தா விட்டராதீங்க? அப்படியே பேக் பன்னி அவங்க ஊருக்கே அனுப்பிடுங்கபா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: viagra வயாகரா
English summary

French mayor to offers free Viagra to village peoples

Frech mayor given free vaigra for village peoples, because he hoping to reverse the decline of it population.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X