மோடிஜி வெற்றிக்கு இது தான் காரணமாம்.. காங்கிரஸ் கோட்டையை உடைத்த மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : உலகின் மிகபெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்து முடிந்த 17-வது நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றியும் பெற்று, மோடிஜியே மீண்டும் பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொடுள்ளார்.

 

சுமார் 90 கோடி வாக்களார்களில் 67 சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர். இந்தியாவின் இந்த தேர்தல் முடிவை இந்தியா மட்டும் அல்லாது பல்வேறு நாடுகளும் எதிர்பார்த்துக் காத்துக் கொடிருந்தது. இந்த நிலையில் மோடியே மீண்டும் பிரதமராக பதிவியேற்பார் என்ற அறிக்கையை வந்திவிட்டது. அதோடு சில அறிக்கைகளையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மோடி அரசின் சாதனைகளும், மோடி அரசு மேற்கொள்ளவிருக்கும் பிரச்சனைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. அதுகுறித்த அலசலாகவும், மோடி அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த எந்த மாதிரியான சவால்களை மேற்கொள்ளும் என்பது குறித்தானதாகவும் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய புதிய மாதிரி படிவம் - என்னென்ன சிறப்பம்சங்கள்

மோடி அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்

மோடி அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்

பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளுக்கு உதவியதாகவும், சாலைகள், இரயில்வே மற்றும் பிற உள்கட்டமைவுகளை உருவாக்க, சுமார் 1.44 டிரில்லியன் டாலர்கள் செலவளித்தாகவும் கூறியுள்ளது. அகுறிப்பாக துவண்டு போயிருக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதே தலையாய கடமையாக இருக்கும். அதற்கான தூண்டுதல் தான் தற்போது தேவைப்படுகிறது. அதோடு வங்கிகள் வாராக்கடனால் சிக்கித் நெருக்கடியில் உள்ளன. அதோடு கடந்த சில மாதங்களாகவே அன்னிய முதலீடுகளும் மெதுவாகவே உள்ளன. இந்த நிலைமையில் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. ஆக இதுபோன்ற சவால்கள் மோடி அரசுக்கு சிக்கலை கொடுக்க ரெடியாக உள்ளன. இதுவே அவர்கள் சந்திக்கும் முக்கிய முதல் சவாலாக இருக்கும் என்றும் பல ஆய்வுகள் கூறியுள்ளன. தோடு இது உற்பத்தியாளர்களிடையே ஒரு ஊக்கத்தை அளித்தது என்றும், இது ஏற்றுமதியையும் இரு மடங்கு அதிகரித்ததுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு நடுத்தர வர்க்க மக்களுக்கான வரியை குறைக்கும் உள்ளிட்ட மோடியின் தேர்தல் அறிக்கைகளே மோடியை மீண்டும் பிரதமராக உயர்த்தியது என்றும், அதுவும் பெரும்பான்மை இடங்களில் ஜெயிக்க இடம் அளித்தது எனவும் கூறியுள்ளது பா.ஜ.க.

அதிகரிக்கும் வரவு - செலவு பற்றாக்குறை
 

அதிகரிக்கும் வரவு - செலவு பற்றாக்குறை

இந்திய அரசுக்கு இது போன்ற பிரச்சனைகள் வலுத்திருந்தாலும், ஏற்கனவே வரும் மார்ச்2020க்குள் வரவு - செலவு பற்றாக்குறை 3.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், இது மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களாகவே எந்தவொரு புதிய தொழில் உள்ளீடுகளும் அதிகரிக்கவில்லை. சொல்லபோனால் ஏற்கனவே இருந்த தொழில்களே பாதிப்படைந்துள்ளன. இந்த நிலையில் புதிய முதலீடுகள் என்பது இனி அரசு எடுக்கும் புதிய நடவடிக்கைகளை பொருத்து தான் வர ஆரம்பிக்கும்.

இக்கட்டான நிலையில் இந்திய அரசு

இக்கட்டான நிலையில் இந்திய அரசு

இது குறித்து Fitch மதிப்பீடுகள் கூறியுள்ள ஆய்வில், நாட்டின் பலவீனமான நிலையில் உள்ள நிதித்துறையையே முதலில் மேம்படுத்த வேண்டும். இதுவே இந்த அரசுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும், அதோடு நிர்வாகம் முக்கிய பங்காக இருக்கும். சமீபத்திய ஆண்டுகளில் பி.ஜே.பி விவசாயிகளை ஆதரிக்கும் என்ற பிரச்சாரத்தையே முன்னேடுத்தும் வந்தது. இதனால் அதுவும் இந்த சமயத்தில் அழுத்தத்தை கொடுக்கலாம். ஆக இதுபோன்ற பல இக்கட்டான சூழ் நிலைகளையே அரசு சந்திக்கலாம்.

ரூ.100 டிரில்லியன் இலக்கு

ரூ.100 டிரில்லியன் இலக்கு

வரும் 2024 ஆம் ஆண்டில் உள்கட்டமைப்பு மூலதனத்தில் 100 டிரில்லியன் ரூபாய்களை (1.44 டிரில்லியன் டாலர்) முதலீடு செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாம். இது கடந்த 2019 மார்ச்சு முதல் ஆண்டுக்கு சுமார் 1.2 டிரில்லியன் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் சீரான வரி

நாடு முழுவதும் சீரான வரி

நாடு முழுவதும் சீரான விற்பனை வரி மோடி அறிமுகப்படுத்தினார், இது முதலீட்டாளர்களிடம் வரவேற்பை கொடுத்தாலும், எனினும் புதிய வரி முறையின் குழப்பம் மற்றும் ஒழுங்கின்மையால், கடந்த 2016 ஆம் ஆண்டில் உயர் மதிப்பு நாணயக் குறிப்புகள் மீதான ஊழல் எதிர்ப்பு ஊழல்களைத் தடுக்க இந்த வணிக நடவடிக்கைகளை தடைசெய்தது.

மோடியின் பேரில் உற்சாகம்

மோடியின் பேரில் உற்சாகம்

மோடியின் வெற்றிக்கு பின்னர் சந்தைகளில் ஆரம்ப உற்சாகத்தை, முதலீட்டாளர்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறார்கள். அதற்கான பொருளாதார சீர்திருத்தங்களையும் எதிர்பார்க்கின்றனர். அதோடு கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்த தெளிவான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்து வருதலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். ஏனெனில் பணவீக்கமும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதும், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்திருப்பதும் மோடிக்கு அரசுக்கு சவலாகவே இருக்கும்.

ஏற்றுமதியாளர்களுக்கு வாக்கு உறுதி

ஏற்றுமதியாளர்களுக்கு வாக்கு உறுதி

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்கவும், ஏர் இந்தியா லிமிடெட் போன்ற அரசு நிறுவனங்கள், தனியார்மயமாவதும், அரசு வங்கிகள் இணைவதும் உள்ளிட்ட பல பிரச்சனைகள் நிகழலாம். அதோடு ஏற்றுமதியாளர்களுக்கு பி.ஜே.பி வர்த்தகத்தை ஊக்குவிக்கவிப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளது கவனிக்கதக்கது.

அன்னிய முதலீடுகளை திரும்ப கொண்டு வர வேண்டும்

அன்னிய முதலீடுகளை திரும்ப கொண்டு வர வேண்டும்

இந்தியாவில் நீண்ட கால முதலீடுகளை அதிகரிக்க, முதலீட்டாளர்களுக்கான கொள்கைகள் தளர்த்தபட வேண்டும். அதோடு மக்கள் இடம் வாங்க விற்க ஒரு ஈஸியான வரைமுறைகளை வகுக்க வேண்டும். முக்கியமாக அன்னிய முதலீடுகளை திரும்ப கொண்டு வர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நிதியமைச்சகத்தின் உயர் மட்ட ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Our PM Naredra modi faces lot challanges after this victory

India want change major departments rules and regulations, also have to improve FII
Story first published: Friday, May 24, 2019, 16:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X