டெல்லி : அதிரடியான தேர்தல் முடிவுகளால், நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தைகள் பெரிய ஆட்டம் கண்டன. இந்த நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 623 புள்ளிகள் அதிகரித்து 39,435 ஆக முடிவடைந்தது. இதே தேசிய பங்கு சந்தையின் நிப்டி 187 புள்ளிகள் அதிகரித்து 11,844 ஆக முடிவடைந்தது.

கருத்து கணிப்புகளின் அடிப்படையில் கடந்த சில நாட்களாகவே சந்தை ஏற்ற இறக்கங்களுடன் இருந்த நிலையில், தற்போது ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றிருப்பதும், பிரதமாகராக மோடியையே மீண்டும் தேர்வு செய்துள்ளது முதலீட்டாளர்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பொருளாதார கொள்கையில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருக்காது என்றாலும், பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் அன்னிய முதலீடுகளை அதிகரிக்கவும் நிதிக் கொள்கைகளில் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும், இதன் எதிரொலியே இன்றைய சந்தையிலும் காணப்பட்டது என்கிறார்கள் பொருளாதார நிபுனர்கள்.
இந்த நிலையில் சென்செக்ஸில் உள்ள பங்குகளில் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், லார்சன் & டூப்ரோ, பார்தி ஏர்டெல், வேதாந்தா மற்றும் டாடா மோட்டார்ஸ் டாப் கெயினர்களாக இருந்தனர். அதே ஹிந்துஸ்தான் யூனிலீவர், என்.டி.பி.சி உள்ளிட்ட சில பங்குகள் சற்று சரிவுடனும் காணப்பட்டன.
இதே என்.எஸ்.யில் 1823 பங்குகளின் விலை சற்று அதிகரித்தும், 676 பங்குகளின் விலை குறைந்தும், 150 பங்குகளின் விலை விலை மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
அதுவே தேசிய பங்கு சந்தையில் உள்ள் துறைகள் பல நல்ல முன்னேற்றத்துடனே முடிவடைந்தன. குறிப்பாக ஆட்டோ செக்டார் 2.87% துடனும், இதற்கு அடுத்தாற்போல் உலோகத்துறை 2.30% பங்கீட்டுடனும், இதுவே இன்ஃப்ரா துறை 2.46%, இதுவே பேங்க் துறை 2.11% மாற்றத்துடனும் முன்னனியில் இருந்தது.
இதுவே தேசிய பங்கு சந்தையில் உள்ள லார்சன் 3.25% வர்த்தகத்துடனும், ஜீ எண்டர்டெயின்மென்ட் 2.98%, பார்தி ஏர்டெல் 2.86%, ஹீரோ மோட்டார் கார்ப் 2.28% பங்களித்து டாப் கெயினர்களாக இருந்தன.
ஆனால் இதுவே ஒ.என்.ஜி.சி, டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், ஹெ.சி.எல் டெக், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் பலத்த அடியையும் வாங்கின.
இதே சன் டிவி நெட்வொர்க் பங்குகள் சுமார் 6.5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. காரணம் இந்த நிறுவனத்தின் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டு முடிவுகள் குறையலாம் என்று டிராய் மதிப்பீடுகள் வெளியிடப்பட்டதையடுத்து இந்த வீழ்ச்சியை கண்டுள்ளதாம்.
இதுகுறித்து சில பங்கு வர்த்தக நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்தில் மோடியே இரண்டாவது முறையாக பிரதமராக வருவது, நல்ல விஷயமே, ஏனெனில் கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ஜி.எஸ்.டி, ஜன் தன் யோஜனா திட்டம், அதோடு இன்னும் பற்பல வெல்ஃபேர் திட்டங்களையும் அறிவித்திருந்தார்.
அதோடு அவர் வகுத்திருந்த பொருளாதார கொள்கை மூலம் அன்னிய முதலீடுகள் அதிகமாக தான் வந்து கொண்டிருந்தது. இதனால் மீண்டும் பொருளாதாரம் குறித்த அறிக்கைகள் அதை தொடர்ந்தாற் போல் தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆக சந்தையில் ஒரு மெதுவான வளர்ச்சியை பார்க்க முடியும், அதிலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் சந்தை வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications