சென்னை : இன்றைய இளைஞர்களின் வேகமும், துடிப்பும் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அட என்னடா இது எப்ப பார்த்தாலும் ஒரே டார்ச்சர்? அதிலும் மாசம் முழுக்க வேலைக்கு போய், அதுவும் பிடிக்காத ஒரு வேலைக்காக போவது மிக கஷ்டமான விஷயம். எனினும் இளைஞர்கள் நாளுக்கு நாள் இதுபோன்ற விருப்பு வெறுப்புகளை ஒதுக்கு வைத்தி தொழில் எனும் கடலில் முழ்கி முத்தெடுக்க நினைக்கிறார்கள். ஆனால் அதில் பலர் சில நாட்களிலேயே காணமல் போகிறார்கள்.
ஏன் என்றால் சிலர் கூறும் பதில் பணம். பணம் இல்லை. அதை செய்யனும் இதை செய்யனும் ஆனா பணம் இல்லை என்பதே. ஆனால் உங்களுக்கு தெரியுமா பெரிய தொழில் தொடங்கும் அளவுக்கு பெரிய நிதி என்பது இல்லையானாலும் கிடைத்ததை சாதனையாக்கும் அளவுக்கு நம் இந்திய இளைஞர்களுக்கு அதிக திறமையும் உள்ளது, அறிவும் உள்ளது. சாதனையாளர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதிலும் புதிய தொழில்நுட்பங்களை தேடி அதை வைத்து, அவர் மட்டுமல்ல மற்றவர்களையும் கற்றுக் கொள்ள வைப்பதே அவர்களின் சிறப்பு. அதோடு தனது தொழிலையையும் சேர்த்து வளர்ப்பதே இன்றைய இந்திய இளைஞர்களின் சாதனையும் கூட. முகம் தெரியா பலர் இன்றளவிலும் ஏதேனும் ஒரு துறையில் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தனித்துவம் வேண்டும்
ஆமா அப்பு நீங்கள் எந்த சந்தையில் நுழைகிறீர்கள் என்பது முக்கியமில்லை, தெரிந்த தொழிலோ? தெரியாத தொழிலா? என்பது முக்கியமல்ல, நீங்கள் நுழையும் சந்தையில், நீங்கள் தனிப்பட்டவராக ஒரு புரட்சியை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும் எனில், அதில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் நீங்கள் முழுமையடைவீர்கள்.
புதுமையை புகுத்துங்கள்
அப்படி ஒரு தொழிலில் நீங்கள் தனித் தன்மையோடு இருக்க வேண்டும் எனில், உங்களது தொழில் புதுமையை புகுத்திக் கொண்டே வர வேண்டும் என்பதை அண்ணாமலையை பார்த்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். சரி யாரந்த அண்ணாமலை என்று கருதுகீறீர்களா? 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், ஒரு ஆட்டோ ஒட்டுனராகத்தான் தனது காலடியை எடுத்து வைத்தவர் எப்படி இன்று தொழிலை மேம்படுத்தினார். எப்படி பெரும் வாடிக்கையாளர்களை ஈர்த்தார். அதன் மூலம் தானும் பயனடைந்ததோடு வாடிக்கையாளரையும் எப்படி பயனடைய வைத்தார். அதுவும் ஆட்டோ ஒட்டிக் கொண்டே எப்படி செய்தார் என்பது தான் டிவிஸ்டே.
அண்ணாமலை ஆட்டோஸ்
அண்ணாமலைக்கு வயசு 24 தான் ஆகுது, ஆனா சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன். அதனால் தான் தன்னை அண்ணாமலை என்றும், தனது ஆட்டோவிற்கு அண்ணாமலை ஆட்டோஸ் என்றும் பெயர் வைத்துள்ளார். அதனாலேயே அவரது வீட்டிலும் சரி நண்பர்களும் சரி அண்ணாமலை என்றுதான் கூப்பிடுவார்கள். சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக இருந்தாலும் தால் அவரை போல ஆட்டோ ஓட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அவ்வப்போது வசனும் பேசுவார்.
படிப்பதை தவிர அனைத்தும் செய்தோம் அன்று
அதோடு தான் படிக்கும் வயதில் படிக்க வேண்டியதை படிக்க வில்லை. படிப்பதை தவிர மற்ற அனைத்தையும் செய்தேன். அதனால் படிப்பில் கோட்டை விட்டேன். அதனாலேயே தான் ஆட்டோ ஓட்டுவதாகவும் கூறினார். இதனால் தான் பலவற்றையும் இழந்து விட்டதாகவும் வருத்தப்படுவாராம்.
குடும்பமே ஆட்டோ குடும்பம் தான்
அட ஆமா அப்பு அண்ணாமலையோட அப்பா, தம்பி என அனைவருமே ஒட்டுனர்கள் தான். இது பற்றி அண்ணாமலை கூறும் போது புடிச்ச வேலை கிடைக்கலான்னா என்ன? கெடச்ச வேலைய புடிச்ச மாதிரி மாதிரி மாத்திக்கோங்க என்பது தான் அவரின் டயலாக்காம். அது வெறும் டயலாக் மட்டும் அல்ல என செயலிலும் செய்து காட்டியவர் அண்ணாமலை.
வாடிக்கையாளர்களே தெய்வம்
ஆமாம் அப்பு வாடிக்கையாளர்கள் நமக்கு சோரு போடும் தெய்வம். ஆக அவங்கள சந்தோஷ படுத்த நினைச்சேன். எந்த வகையில் திருப்தி படுத்த முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு வாடிக்கையாளர் ½ மணி நேரம் டிராவல் பண்ணாறாங்க அப்படின்னா? அந்த டைம்ல அவங்களுக்கு எப்படி உபயோகமுள்ளதா மாத்தலாம் என்று யோசிக்கும்போது ஏன் தினசரி பேப்பர்களையும், குமுதம் விகடன் இந்த மாதிரி பல புத்தகங்களையும் வாங்கி வைத்தார். ஆட்டோவில் வரும் சில வாடிக்கையாளர்கள் படித்து பயன் பெறவும் செய்தனர். ஆனா அதை வெறும் 30% வாடிக்கையாளர்கள் மட்டுமே அத பயன்படுத்துனாங்க.
வாடிக்கையாளர்களுக்கு பிரவுசிங் ஃப்ரீ
சரி ஏன் இப்படி இருக்காங்க அப்படின்னு யோசிக்கும் போது, நம்ம யூத்துகள் எப்ப பார்த்தாலும் அந்த ஸ்மார்ட் போனையே பார்த்துட்டு பேப்பர படிக்கிறது இல்லன்னு தோனுச்சி. அதனால அவங்களுக்கு உபயோகமா இருக்க ஒரு டேப் (TAB) வாங்கி ஆட்டோல வைத்தேன். அதன் மேல் வாடிக்கையாளர்களுக்கு பிரவுசிங் ஃப்ரீ என்றும் எழுதி வைத்தேன். அதிலும் நிறைய இணைய சேவைகளை வைத்திருந்தேன். ஏன்னா ஆட்டோவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது நெட் கட்டாக கூடாது இல்லையா? அதுக்காக தான். இதனாலேயே பல இளைஞர்கள் மத்தியில் என்னோட ஆட்டோ மிக ஃபேமஸ் ஆக ஆரம்பிச்சது. வாடிக்கையாளர்களும் பெருக ஆரம்பிச்சாங்க.
புதுமையை புகுத்த வேண்டும்
அண்ணாமலை இது குறித்து சொல்லும் போது, எந்தவொரு பொருளாகட்டும், அல்லது சேவையாகட்டும் அதில் புதுமையை புகுத்தினால் மட்டுமே நாம் வளர முடியும் என்பார். உங்களுக்கு தெரியுமா ஐ- போன் அறிமுகம் செய்யும் முன் ஆப்பிள் நிறுவனம் கணினி தயாரித்து விற்பனை செய்து வந்தது. ஆனால் அவர்கள் புதிதாக போன் சந்தையில் பல புதிய தொழில்நுட்பங்களை களமிறக்கினார்கள், அதனால் தான் அவர்கள் இன்று ஸ்மார்ட்போன் சந்தையில் ஜொலிக்கிறார்கள் என்கிறார்.
சரியான உணவு கிடையாது
இப்படி சம்பாதிப்பதை கொஞ்சம் வீட்டுக்கு கொடுத்தது போக ஆட்டோவுக்காக செலவு செய்த அண்ணாமலைக்கு இது போதவில்லை. ஏன் பல நாட்கள் சாப்பிடக் கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டிருகிறாராம். எஇனும் தனது முயற்சியை மட்டும் கைவிடவில்லையாம். இன்னும் இன்னும் என தன்னை பக்குவப்படுத்திக் கொண்டே இருந்தார்.
ஊக்கப்படுத்த போட்டிகள்- பரிசுகள்
இதனால் தனது ஆட்டோவில் வரும் வாடிக்கையாளர்களுக்கு சில கேள்விகள் கேட்கப்படுமாம். அதில் சரியாக பதில் அளித்தவர்களுக்கு பரிசும் கொடுத்தாராம். முதலில் இந்த திட்டத்தை தன் ஆட்டோ நண்பர்களிடம் சொன்ன போது இதெல்லாம் நடக்குற காரியமா என்று கலாய்திருக்கிறார்கள். எனினும் அண்ணாமலை தனது தீவிர முயற்சியை கைவிடவில்லை.
அடுத்தடுத்த முயற்சி
வாடிக்கையாளர்கள் சிலர் சரியான சில்லறை இல்லை என கூறிய போது முதலில் ஒரு சிறிய தயக்கம் இருந்தாலும், அதை பேடிஎம், கூகுள் பே, கார்டு யூஸ் பண்ற மாதிரி ஸ்வைப் மெஷின் என பல வகையிலும் யூஸ் பண்ண ஆரம்பிச்சாராம் அண்ணாமலை. இதற்கு பிறகு அண்ணாமலை முறையாக தனது நிறுவனத்தை முறையாக பதிவு செய்து நிறுவனமாகவே நடத்த விரும்பினார்.
படிப்படியான வளர்ச்சி
இந்த நிலையில் ஒரு ஆட்டோ 10 ஆட்டோவானது, அதோடு கார்கள், சொகுசு கார்கள் என பல நிலையை அடைந்துள்ளார். முன்னர் ஒரு ஆட்டோ வாங்க கஷ்டப்பட்ட அண்ணாமலை தற்போது அந்த தொகையை வருட டேக்ஸ் ஆக கட்டியும் வருகிறார். இதுபோன்ற எண்ணற்ற இளைஞர்கள் தங்களது திறமைகளை பயன்படுத்தி முன்னுக்கு வந்தவர்கள் பலர். அதிலும் தங்களது திறமையிலும் கொஞ்சம் ஸ்மார்ட்னஸை பயன்படுத்தினால் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்பதே தொழிலதிபர்களின் கருத்து.
(குறிப்பு இது வெறும் கற்பனை கதையே, தொழில் செய்ய முனைவோருக்காக பல வெற்றி பெற்றவர்களின் கதையை ஒருங்கினைத்து எழுதப்பட்டது. )
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

எரிபொருள் நெருக்கடி.. அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை கட்..!!



Click it and Unblock the Notifications