டெல்லி : இந்தியாவில் அடுத்து வரும் 9 ஆண்டுகள் வரை நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம் என்று ஆராய்ச்சி நிறுவனமான பிட்ச் சொல்யூசன்ஸ் அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா முக்கிய இடத்தில் இருந்தாலும், இங்கு பற்றாக்குறையே நிலவி வருவதால் இன்னும் அடுத்த நாட்டையே கையேந்தும் நிலைமையில் உள்ளது. அதிலும் சீனாவுக்கும் அமெரிக்காவும் பிரச்சனை. ஆனால் இங்கு பதறும் நிலை. ஆமாங்க இந்த இரு நாடுகளின் பிரச்சனையால் நிலக்கரி விலை அதிகரிக்கும் அபாயம் நிலவி வருகிறது.

இது நிலக்கரியில் மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்களில் இப்படிதான் இருக்கிறது. அதிகளவு நிலக்கரி நுகர்வோரான சீனாவில் கூட இப்படியொரு பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் அமெரிக்க சீனாவிற்கு இடையே நிலவி வரும் குளறுபடிகளால் நிலக்கரி விலை உயரும் என மதிப்பிட்டுள்ளது பிட்ச் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சீனாவின் இரும்பு துறையில் நிலக்கரிக்கான ஒரு வலுவான தேவை அதிகரித்துள்ளதாகவும், எனினும் அமெரிக்கா சீனா வர்த்தக போரால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாம்.
இதன் காரணமாக விலை மீண்டும் அபாயம் நிலவி வருகிறதாம். கடந்த ஆண்டே சராசரியாக ஒரு டன்னின் விலை 195 டாலராக இருந்து வந்தது. இந்த நிலையில் இது மீண்டும் விலை உயர்ந்தால் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நஷ்டத்தை கொடுக்கும் என்று சீனா அரசு, சீனாவின் பல உற்பத்தி நிறுவனங்களுக்கு பல சலுகைகளையும் அறிவித்துள்ளதாம்.
இந்த நிலையில் முக்கிய நிலக்கரி இறக்குமதியாளரான ஆஸ்திரேலியாவிலும் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளதாம். குறிப்பாக குக்கிங்க் நிலக்கரி தேவை இருந்து வந்த போதிலும், இறக்குமதி குறைந்துள்ளதால் இது நிலக்கரி சந்தையில் ஒரு அழுத்தத்தை கொடுத்துள்ளது.
அதோடு நிலக்கரி வெட்டியெடுக்கப்படும் ஆஸ்திரேலிய சுரங்களிலேயே இந்த நிலக்கரி உற்பத்தி வெகுவாக குறைதுள்ளதாம். குறிப்பாக குக்கிங்க் நிலக்கரி அடுத்து வரும் காலாண்டுகளில் விலை அதிகரிக்கலாம் என்ற நிலக்கரி விலை அலையே தொடர்ந்து வீசி வருகிறது.
தற்காலிகமாக நிகழ்ந்துள்ள இந்த சந்தையில் விலையேற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட கால நிகழ்வாகவே இருக்கும் என்றும், எனினும் சீனாவின் உற்பத்தி துறையில் சற்று வலுவடைந்து உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே மாற்றம் நிகழலாம். இதனால் நீண்டகால போக்கில் விலை குறையலாம்.
அதோடு சர்வதேச அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் அளவில், சீனாவில் 3ல் இரண்டு பங்கு நிலக்கரி நுகரப்படுவதாகவும், இதனால் விரைவில் உற்பத்தி தொடங்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
இந்த நிலையில் பிட்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், இந்தியா அதிகளவு நிலக்கரிக்கு ஆஸ்திரேலியாவையே நம்பிள்ளதாகவும், இது முந்தைய ஆண்டு நிலக்கரி இறக்குமதியுடன் ஒப்பிடும்போது சுமார் 11.7% குறைந்துள்ளதாம்.
எனினும் அடுத்து வரும் ஆண்டுகளில் இது சுமார் 5% வரை அதிகரிக்கலாம் என்றும், இதோடு மட்டுமல்ல அடுத்து வரும் 9 ஆண்டுகளுக்கு இந்த இறக்குமதி அதிகரிக்கவே செய்யும் என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது.
இதே சீனாவிற்கு கடந்த முதல் காலாண்டில் நிலக்கரி இறக்குமதி 35% அதிகரித்துள்ளதாம். எப்படியோங்க விலை அதிகரிக்காமா இருந்தா சரிதானே.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications