மோடி அலையால் அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு

டெல்லி : மத்தியில் அதிரடியான தேர்தல் முடிவுகளால், கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய பங்கு சந்தைகள் பெரிய ஆட்டம் கண்டன. அதிலும் காலை நேரத்தில் 1000 புள்ளிகளுக்கும் மேல் ஏற்றம் கண்ட சந்தைகள் பின்னர் இறுதியில் சற்று குறைந்து சற்று ஏற்றத்துடன் முடிவடைந்தன.

குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 623 புள்ளிகள் அதிகரித்து 39,435 ஆகவும், தேசிய பங்கு சந்தையின் நிப்டி 187 புள்ளிகள் அதிகரித்து 11,844 ஆக முடிவடைந்திருந்தது.

மோடி அலையால்  அதிகரித்த மூலதனம்.. தேர்தல் முடிவால் ரூ.2.53 லட்சம் கோடி மூலதனம் அதிகரிப்பு

ஏற்கனவே கருத்து கணிப்புகளின் அடிப்படையில், மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று பல கருத்துகணிப்புகள் வெளியாகி வந்த நிலையில் கடந்த வாரம் பூரவும் இந்திய சந்தைகள் காளையின் பிடியிலேயே இருந்தன.

இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் என்கிற பி.எஸ்.இயில் பட்டியிடப்பட்ட பங்குகளின் மூலதனம் ரூ.2,53,830.19 கோடி அதிகரித்து 1,52,71,407.47 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாம்.

இதற்கு காரணம் தற்போதைக்கு பொருளாதார கொள்கையில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருக்காது என்றாலும், பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் அன்னிய முதலீடுகளை அதிகரிக்கவும் நிதிக் கொள்கைகளில் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுவதே.

அதோடு இந்தியாவில் தற்போதைக்கு நிலவி வரும் பொருளாதார பிரச்சனையால், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரே வழி முதலீடுகளை அதிகப்படுத்துவது தான். இதனால் அன்னிய முதலீடுகள் அதிகரிக்கப்படும் என்ற சூழ்நிலையே நிலவி வருகிறது.

எனினும் உள்நாட்டில் தற்போதைக்கு வளர்ச்சியில் அதிகளவு வளர்ச்சி இல்லாவிட்டாலும், ஓரளவு சாதமாகவே போய்க் கொண்டிருக்கிறது. இது குறித்து ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், உள்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் சாதகமான சூழ்நிலையிலேயே போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இனி வரும் காலங்களில் இந்த செயல் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்செக்ஸில் பட்டியிடப்பட்டுள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் லாபத்திலேயே முடிவடைந்தன. அதிலும் ஐ.சி.ஐ.சி.ஐ, லார்சன் & டூப்ரோ, பார்தி ஏர்டெல், வேதாந்தா மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் மோஸ்ட் கெயினர்களாக இருந்தது.

அதிலும் சென்செக்ஸில் உள்ள 19 துறைகளும் நல்ல மாற்றித்திலேயே முடிவடைந்தன. குறிப்பாக ரியல் எஸ்டேட், மூலதன பொருட்கள், தொழிற்துறை நலல ஏற்றம் கண்டன. குறிப்பாக டெலிகாம் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் துறை 4.25% அதிகரித்திருந்தது கவனிக்கதக்கது.

இந்த நிலையில் பிஎஸ்இயில் உள்ள ஸ்மால்கேப் பங்குகள் குறியீடு 2.43%, இதே மிட் கேப் பங்குகள் 2.09% உயர்ந்தே காணப்பட்டது. அதிலும் குறிப்பாக பி.எஸ்.இ யில் 1,833 பங்குகள் விலை அதிகரித்தும், 699 பங்குகள் விலை குறைந்தும், 148 பங்குகள் விலை மாறாமலும் இருந்தது.

எனினும் இந்த தேர்தல் முடிவால் சந்தை உயர்ந்தாலும், முன்னர் தேர்தல் முடிவு குறித்த பிரச்சனையால் முதலீடுகள் முடக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவால், மோடி அரசே திரும்ப வந்துள்ள நிலையில் மீண்டும் முதலீடுகள் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளன. இதனால் சந்தையின் மூலம் வரும் ஜீன் 2020வரை வருமானம் 3 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று பல ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+