எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலாந்து : ஆண்டுக்கு ஆண்டு வெயிலின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெயிலுக்கு அதிகப்படியான மரங்களை வெட்டுதல், நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம், மின்சாதனங்கள் பயன்பாடு, நான்கு வழிச்சாலைகள் மற்றும் எரிபொருள்களால் வெளியேற்றப்படும் வாயுக்கள் தான் காரணம் என்றும் பல வகையில் கூறப்பட்டாலும், இது போன்ற செயல்களை நாம் தவிர்ப்பது இல்லை. இதனால் உலகம் ஒரு காலத்தில் பாலைவனமாக மாறி பாலைவனத்திற்கு நிகரான வெப்பநிலை நிலவும் எனப்தில் சந்தேகமில்லை.

 

இது போன்ற பிரச்சனைகள் சர்வதேச அளவிலும் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் ஹை ஸ்பீடு ரயிலினால் ஏற்படும் தாக்கம் மற்றும் கோடைகாலத்தில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கத்தினால் லட்சக்கணக்கான மரங்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரசு வேதனை தெரிவித்துள்ளது.

 
எச்சரிக்கை.. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் அழிந்து வரும் மரங்கள்.. WT அறிக்கை

அதிலும் கடந்த 2018 கோடைக்காலத்தில் பல மரங்கள் இது போன்ற காரணங்களால் அழிந்துள்ளன என்றும் அறிவித்துள்ளது இங்கிலாந்து. அதிலும் கடந்த 2017 - 2018ல் நடப்பட்ட மரங்களை உயிருடன் வைத்திருப்பது மிக கடினமான ஒன்றாக இருப்பதாகவும் நிலத்தின் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனராம்.

குறிப்பாக நவம்பர் 2017 - மார்ச் 2018க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 89,000 மரங்கள் அழிந்து விட்டனவாம். அதிலும் நடப்பட்ட மொத்தம் 2,34,000 மரங்களில், சுமார் 38 விழுக்காடுகள் அழிந்த்துள்ளனவாம்.

எனினும் கடந்த ஆண்டு HS2 தலைவர்கள், இந்த ஹை ஸ்பீடு ரெயில் பாதை வழியாக 7 மில்லியன் மரங்களை வளர்ப்பதாக உறுதியளித்திருந்தனர். இது சீறும் கோடை காலநிலையில் இருந்து காப்பாற்றும் என்றும் சுட்டிக்காட்டினர்.இது சற்று ஆறுதலை அழித்தாலும், மரங்கள் அழிவது நம்மை நாமே அழித்துக் கொள்வது போல் தான்.

வாரே வா.. 49% லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. ரூ.2.50 டிவிடெண்ட்.. குதூகலத்தில் முதலீட்டாளர்கள் வாரே வா.. 49% லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. ரூ.2.50 டிவிடெண்ட்.. குதூகலத்தில் முதலீட்டாளர்கள்

எனினும் இந்த நிலையில் தி இன்டிபென்டன்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, 2018 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் ஜூன் மாதத்தில் சராசரியாக 35.4 மிமி மழைவீழ்ச்சி இங்கிலாந்தில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் இந்த மரங்களை பராமரிக்க 2 மில்லியன் பவுண்டுகளை செலவழிக்க வேண்டியுள்ளது எனவும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதோடு லண்டன் - பர்மிங்காம், லீட்ஸ் மற்றும் மான்செஸ்டர் ஆகிய இடங்களுக்கிடையிலான அதிவேக இணைப்பு 2033 ஆம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் 61 வனப் பகுதிகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு 16.7 ஹெக்டேர் பழங்கால வனப்பகுதியை அழிவுக்கு கொண்டு வரும் என்றும் இது "சுற்றுச்சூழலுக்கு பெரும் பேரழிவு" என்று கடந்த அக்டோபரில் வுட்லேண்ட் டிரஸ்ட் (WT) தெரிவித்துள்ளது கவனிக்கதக்கது.

இந்த நிலையில் இந்த HS2 ரெய்டால், விலைமதிப்பற்ற, சீரற்ற, பல நூற்றாண்டுகள் பழமையான வனப்பகுதிகளில் கரடுமுரடான சவாரிகளை தொடர்கிறது. இதனால் பல வன உயிரினங்களின் வீடுகளும் மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று WT சுற்றுச்சூழல் நிபுணர் லூசி ரியான் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: trees மரங்கள்
English summary

laks of trees dies as HS2 ways

10s of thousands of trees planted to environmental impact of the High Speed Rail 2 route have died following the 2018 summer drought.
Story first published: Sunday, May 26, 2019, 17:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X