இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியால் தனது நிறுவனத்துக்கு பெரிய பூட்டாய் போட்டு தொங்கவிட்டிருந்த நிலையில், அதை மீண்டும் இயக்க அவசரகால நிதியாக ஜெட் ஏர்வேஸ் எஸ்.பி.ஐ வங்கியை நாடியது.

 

அந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நரேஷ் கோயல் ராஜினாமா செய்தால் மட்டுமே அந்த அவசரகால நிதி தரப்படும் என்று வங்கி தரப்பில் கூறப்பட்டது. அந்த நிலையில் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நரேஷ் கோயல் மற்றும் அவர் மனைவி அனிதா கோயல் இருவருமே, ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவில் இருந்து கடந்த மார்ச் 25, 2019 அன்று வெளியேறினர்.

 இனி எங்கயும் போகக் கூடாது.. வீட்டுக்கு போங்க.. நரேஷ் & அனிதாவுக்கு கெடு விதித்த அதிகாரிகள்

அந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும்அப்போதிலிருந்து இயக்குநர் குழுவை ஆளத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில் இன்று நரேஷ் கோயலும், அவரது மனைவி அனிதா கோயலும் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய்க்கு செல்ல திட்டமிட்டனர். இதற்காக, அவர்கள் மும்பை விமான நிலையத்திற்கும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதோடு அவர்கள் திருப்பியும் அனுப்பப்பட்டுள்ளனராம். எனினும் ஏன் எதற்கு என்ற தகவல்கள் இதுவரை வெளியாகப்படவில்லை.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த நிறுவனங்களின் குழு எஸ்.பி.ஐ தலைமையில் அமைக்கபட்டு, இந்த நிறுவனத்தை ஏலம் விட காத்துக் கொண்டிரூகின்றன. இந்த நிலையில் இந்த நிறுவனத்தை வாங்க ஒரு சிலரே முன் வந்துள்ள நிலையில் இதுவரை எந்தவொரு அதிகார பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னால் இயக்குனர்களான நரேஸ் கோயலுக்கும், அனிதா கோயலுக்கும் அனிதா கோயலுக்கும் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

 

இது குறித்து எந்தவொரு அதிகார பூர்வ தகவல்களும் வெளியிடப்படாத நிலையில், ஏன் எதற்காக அவர்கள் தடுக்கப்பட்டார்கள் என்பதும் மர்மமாகவே உள்ளது.

எனினும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 15,000 கோடி ரூபாய் கடனால் மூடப்பட்டுள்ளது, இந்த நிலையில் ஊழியர்களுக்கு சம்பளமும், எரிபொருள் கட்டணம், லீஸ் பாக்கி, வாடகை கட்டணம் என பலவாறு பல இன்னல்களை சந்தித்த பிறகே கடந்த ஏப்ரல் 17 அன்று இந்த மூடுவிழாவை சந்தித்தது.

என்ற நிலையில் இந்த மூடு விழாவை கண்டித்து இதுவரை, ஜெட் ஏர்வேஸ் விஷயத்தில் சிபிஐயிலும் இதுவரை எந்த வழக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த தீவிர நடவடிக்கைக்கு சட்ட அமலாக்க நிறுவனம் தொடர்ந்தும் இன்னும் தெளிவானதொரு தகவலும் தெரிவிக்கவில்லை. ஆக மொத்தம் எதோ ஒன்று நடக்கிறது என்று மட்டும் புரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Naresh Goyal and Anita Goyal stopped from flying out of India

Jet Airways founder Naresh Goyal and Anita Goyal were stopped from flying to Dubai today by the immigration authorities in Mumbai.
Story first published: Sunday, May 26, 2019, 8:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X