வாரே வா.. 49% லாபத்தில் பொதுத்துறை நிறுவனம்.. ரூ.2.50 டிவிடெண்ட்.. குதூகலத்தில் முதலீட்டாளர்கள்

டெல்லி : பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி (National Thermal Power Corporation ) கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிகரலாபமாக 48.7% அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் 48.7 சதவிகிதம் அதிகரித்து 4,350.32 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2,925.59 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதோடு இந்த நிறுவனத்தின் வருவாய் 22,545.61 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாம். இதுவே இது முந்தைய ஆண்டில் 23,617.83 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செலவு குறைந்துள்ளது

செலவு குறைந்துள்ளது

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டை விட செலவும் குறைந்துள்ளதாம். குறிப்பாக கடந்த மார்ச் காலாண்டில் செலவு 19,008.44 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாம். இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 20,229.26 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட நிகரலாபம்

தனிப்பட்ட நிகரலாபம்

இதுவே இந்த நிறுவனத்தின் 2018 - 2019 ஆம் ஆண்டில் தனிப்பட்ட நிகரலாபம் 13.60 சதவிகிதம் அதிகரித்து 11,749.89 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 10,343.17 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் மொத்த வருவாய் 92,179.56 கோடி ரூபாயாகும். இது 2017-2018ம் நிதியாண்டில் 85,207.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நிகரலாபம் ரூ. 12,633.45 கோடி

நிகரலாபம் ரூ. 12,633.45 கோடி

இதுவே இந்த நிறுவனத்தின் நிகர இலாபம் 2018-19 ஆம் ஆண்டில் 12,633.45 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ. 10,501.50 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோயடு கடந்த நிதியாண்டில் மொத்த நிகர வருவாய் ரூ. 97,537.34 கோடியாக உயர்ந்ததுள்ளது. இதுவே 2017 - 2018ல் 89,641.59 ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.

டிவிடெண்ட் 25%

டிவிடெண்ட் 25%

இதே இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு டிவிடெண்டாக 25% பரிந்துரை செய்துள்ளது. அதாவது பங்குக்கு 2.50 ரூபாயாக அறிவித்துள்ளது. அதோடு முகமதிப்பையும் அதிகரிக்க உள்ளதாம். இது ஆகஸ்ட் மாதத்தில் நடக்க விருக்கும் கூட்டத்தில் பரிதுரைக்கப்பட்டு பின்னர் வெளியிடப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிகரித்துள்ள நிலக்கரி சப்ளை

அதிகரித்துள்ள நிலக்கரி சப்ளை

கடந்த மார்ச் மாத காலகட்டத்தில் நிலக்கரி சப்ளை 46.94 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 44.36 மில்லியன் டன் மட்டுமே சப்ளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு சப்ளை 168.21 மில்லியன் டன்னிலிருந்து 175.05 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி இறக்குமதியும் அதிகரிப்பு

நிலக்கரி இறக்குமதியும் அதிகரிப்பு

இதுவே கடந்த மார்ச் மாத காலாண்டில் நிலக்கரி இறக்குமதி 0.66 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே மார்ச் மாத காலாண்டில் 0.10 மில்லியன் டன்களாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி 1.05 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. இதுவே 2017 -2018ல் 0.32 மில்லியன் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்.டி.பி.சியில் நிறுவப்பட்ட மொத்த திறன்

என்.டி.பி.சியில் நிறுவப்பட்ட மொத்த திறன்

குறிப்பாக இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் 31, 2019 ஆம் ஆண்டோடு என்டிபிசி நிறுவனம் மொத்த நிறுவப்பட்ட திறன் 55,126 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு 53,651 மெகாவாட் என்ற அளவில் மட்டுமே இருந்தது.

பங்குகளி விலை அதிகரிக்கலாம்

பங்குகளி விலை அதிகரிக்கலாம்

எனினும் சனிக்கிழயன்று இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டதால் இந்த நிறுவனத்தின் பங்குகள் விலையில் மாற்றம் ஏதும் தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமையன்று 129 ரூபாயாக வர்த்தக முடிவில் இருந்தது. எனினும் இதன் மாற்றம் நாளை சந்தையில் இருக்கலாம் என்றும் நிபுனர் மத்தியில் கருத்துகள் நிலவி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+