லண்டன் : விஜய் மல்லையா ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட பல வங்கிகளிடம் இருந்து கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கே தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் லண்டனிலும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். இனி எந்த நாட்டுக்கு செல்வார் என்று தான் தெரியவில்லை.
எனினும் ஒருபுறம் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர இங்கிலாந்து அரசோடு சட்ட ரீதியில் பேச்சு வார்த்தைகளும் நீதிமன்றங்களில் வழக்குகளும் நடந்து வருகின்றன. இவைகளை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் விடுங்க..

தற்போது விஜய் மல்லையாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தின் உயர் நீதிமன்றம், பிரிட்டனின் மதுபான நிறுவனமான டியாகோவுக்கு (Diageo) செலுத்த வேண்டிய 135 மில்லியன் டாலர்களையும், அதோடு சட்ட ரீதியான செலவுகள் மற்றும் வட்டி+ அசலும், அதோடு நேரடியாக வாங்கிய 40 மில்லியன் டாலர்களையும் சேர்த்து மொத்த தொகையாக $175 மில்லியன் டாலர்களை அடுத்த 28 நாட்களுக்குள் செலுத்த உத்தரவிட்டுள்ளதாம் லண்டன் உயர்நீதி மன்றம்.
அதோடு இந்த $175 மில்லியன் டாலர்களை டியாகோவுக்கு பதிலாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டும என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
இது குறித்து பிரிட்டனின் மதுபான நிறுவனமான டியாகோ கூறுகையில், மல்லையாவும் அவர் சம்பந்தப்பட்ட சில நிறுவனங்களுக்கு நாங்கள் சுமார் $175 மில்லியன் டாலர்களை கடனாக கொடுத்துள்ளோம். ஆக மல்லையாவும் அவரது நிறுவனங்களும் எங்களது நிறுவனத்துக்கு கடனை திரும்ப செலுத்துவற்கு கடமை பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளதாம்.
Diageo Plc, Diageo Holdings Netherlands BV (DHN) and Diageo Finance Plc உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள், 63 வயதான விஜய் மல்லையாவுடன் கடந்த 2016ல் ஒப்பந்தம் செய்துள்ளனவாம். இதன் மூலமே விஜய் மல்லையா வசமாக சிக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிதி மோசடி செய்தவர்களுக்கு எதிரான இந்தப் புதிய சட்டத்தினை அடுத்து, விஜய் மல்லையா இந்தியாவில் பொருளாதார குற்றவாளி என்று தீர்ப்பளிப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இந்த நிலையில் லண்டனிலும் விஜய் மல்லையாவுக்கு லண்டனிலும் நெருக்கடி நிலையே நிலவி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications