இந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய் : துபாயில் தங்கத்துறையில் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ள 10 நாடுகளில் இந்தியாவும் உள்ளதாம். இதில் என்ன சந்தேகம் அப்பு? இந்தியா இந்த லிஸ்டில் இல்லைனா தானா ஆச்சரியம்.
குறிப்பாக இந்தியர்கள், பாக்கிஸ்தான், பிரிட்டன், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, ஓமன், ஜோர்டான், பெல்ஜியம், ஓமன் மற்றும் கனடாவின் குடிமக்கள் உள்ளிட்ட பல மக்கள் துபாய் தங்கத்துறையில் முதலீடு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனராம்.

 

துபாயில் 4,086 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் துபாயில் தங்கத் துறையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 62,125 ஆகவும் செயல்படுகிறது. இதே 60,012 வணிகர்களும், 2,113 தொழிலதிபர்கள் ஈடுபட்டுள்ளனராம். அதோடு Business Registration and Licensing (BRL) பதிவுகளும் பதிவு செய்துள்ளார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்களது.

உடைத்துக் கொண்டு போகும் Raymond விலை..! எச்சரிக்கும் அனலிஸ்டுகள்..!

முதலீட்டினை அதிகரிக்கபதே நோக்கம்

முதலீட்டினை அதிகரிக்கபதே நோக்கம்

அதோடு தங்கத் துறையில் புதிய புதிய தொழில் அதிபர்களை அறிமுகப் படுத்தவும், அதோடு இதன் மூலம் முதலீட்டினை அதிகரிப்பதுமே இதன் நோக்கமாக உள்ளதாம். அதோடு இந்த அறிக்கைகள், துபாயில் எத்தனை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதன் நடைமுறை என்ன? அது குறித்த புள்ளிவிவரங்கள், தங்க சந்தையில் இதன் நடவடிக்கைகள் என்ன? இது போன்ற தகவல்களை இந்த ஆய்வு செய்ய பயன்படுகிறதாம்.

மொத்தம் 4086 வணிக நிறுவனங்கள்

மொத்தம் 4086 வணிக நிறுவனங்கள்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 4086 நிறுவனங்களில் 2498 நிறுவனங்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளதாம். அதோடு 1184 நிறுவனங்களுக்கு தங்கம் மற்றும் விலையுயர்ந்த ஆபரண வர்த்தகங்களை செய்ய உரிமம் உள்ளதாம். அதுவே 392 நிறுவனங்களுக்கு தங்க நாணயம் உற்பத்திக்கும் மற்றும் தங்க நகை செய்யவும் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதோடு 7 தங்க பவுண்ரிகளும் மற்றும் உயர் மதிப்புமிக்க ஆபரணங்களுக்கும் உரிமம் உள்ளதாம், அதோடு 5 தங்கம் உருக்கு குறித்த நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாம்.

மொத்த ஆபரண விற்பனை 3% அதிகரிப்பு
 

மொத்த ஆபரண விற்பனை 3% அதிகரிப்பு

மொத்த தங்கம், நகை மற்றும் வைரம் விற்பனை கடந்த ஆண்டு 274 பில்லியன் டிராம்களை (274 billion dirhams) எட்டியுள்ளதாம். இன்றைய தேதியில் இந்திய மதிப்பில் ஒரு டிராம் என்பது 18.91 ரூபாயாகும். இது 2017 உடன் ஒப்பிடும் போது சுமார் மூன்று விழுக்காடு அதிகரித்துள்ளது என துபாய தங்கம் மற்றும் ஜூவல்லரி குழுமம் தெரிவித்துள்ளது.

விலையுயர்ந்த வணிகத்தில் ஐக்கிய அரபு எமிராட் வளர்ச்சி

விலையுயர்ந்த வணிகத்தில் ஐக்கிய அரபு எமிராட் வளர்ச்சி

அதோடு தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் உள்ளடக்கிய வணிகத்தில் ஐக்கிய அரபு எமிரேட் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் இந்த துறையில் அதன் வெளிநாட்டு வர்த்தகம் சுமார் 400 பில்லியன் டிராம்கள் (dirhams) என மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதி

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் தங்கத்தின் இறக்குமதியானது 142.4 பில்லியன் டிராம்கள் மதிப்புடையதாம். அதே நேரத்தில் ஏற்றுமதியின் மதிப்பு 75.9 பில்லியன் டிராம்களைக் கொண்டுள்ளதாம். அதோடு மறுஏற்றுமதியின் மதிப்பு 26 பில்லியன் டிராம்களையும் கொண்டுள்ளது என்று பெடரல் கஸ்டம்ஸ் ஆணையம் தெரிவித்ததாம்.

சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

இது மட்டும் அல்லாமல் துபாய் சுமார் 30 நாடுகளுக்கு இறக்குமதி மூலம் தங்கம் மற்றும் தங்க நகைகளை துபாயிலிருந்து வழங்குகின்றனவாம். அதோடு இது துபாய்க்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் கோரிக்கையாகவும் உள்ளதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: dubai துபாய்
English summary

Indians top the chart of gold buyers in Dubai's

Indians in the top 10 nationalities investing in Dubai's gold sector.
Story first published: Monday, May 27, 2019, 14:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X