அட என்னாது 401% லாபமா.. இண்டிகோ நிறுவனத்திலா.. பேஷ் பேஷ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாத காலாண்டில் 401.17% நிகர லாபம் அதிகரித்துள்ளதாம். காலாண்டு லாபம் அதிகரித்தாலும் கடந்த நிதியாண்டில் 93% லாபம் குறைந்துள்ளதாம்.

இதே இண்டிகோ நிறுவனத்தின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் 1.57 கோடி பயணிகளை கவர்ந்துள்ளதாம். இதே இதற்கு முந்தைய காலாடில் 1.34 கோடி பயணிகள் பயணம் செய்திருந்தது கவனிக்கதக்கது.

அட என்னாது 401% லாபமா.. இண்டிகோ நிறுவனத்திலா.. பேஷ் பேஷ்

அதோடு இந்த விமான நிறுவனத்தின், இண்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனம் ரூ.589.59 கோடியை நிகரலாபமாக ஈட்டியுள்ளதாம். இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 117.64 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதோடு கடந்த மார்ச் காலாண்டில் வருவாய் ரூ.8,259.81 கோடியாக உயர்ந்துள்ளதாம். இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் வருவாய் ரூ.6,097.68 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் கடந்த நான்காவது காலாண்டில் எரிபொருள் செலவினம் 2,787.28 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 2,337.71 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே இண்டிகோ நிறுவனத்தின் மொத்த கடன் தொகை கடந்த 2019 மார்ச் காலாண்டில் 2,429.2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே கடந்த 2018 - 2019 நிதியாண்டில், இண்டிகோ இலாபம் 157.25 கோடி குறைந்துள்ளதாம். அதாவது இதற்கு முந்தைய 2017 - 2018 ஆம் ஆண்டை விட 2242.32 கோடியிலிருந்து 93% குறைந்துள்ளதாம்.

இதே நிறுவனத்தின் இந்த வருவாய் ரூ.29,821.37 கோடியாக அதிகரித்துள்ளதாம். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 23,967.74 கோடி ரூபாயாக இருந்ததாம். இது சுமார் 24.42 அதிகமாகும்.

இதுவே நடப்பு நிதியாண்டில் அதிகப்படியான எரிபொருள் செலவு மற்றும் வலுவான போட்டிகளின் காரணமாக மிக கடினமான ஒன்றாகவே இருக்கும். எனினும் முதல் பாதி இப்படி இருந்தாலும் ஆண்டின் இரண்டாவது பாதி நல்ல முன்னேற்றம் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது என இந்த விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரொனோஜாய் தத்தா கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: indigo இண்டிகோ
English summary

IndiGo's jan- march quarter profit surges 401%

IndiGo airlines said net profit for q4 rose 401.17% from a year ago as the airline flew more passengers and registered higher yields. But annual basis Indigo's profit for 2018 - 2019 was down 93%.
Story first published: Monday, May 27, 2019, 18:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X