ஒரு முறைதான் ஏமாறுவோம்.. விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட நரேஷ் கோயல் & அனிதாவிடம் தீவிர விசாரணை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஸ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயலும் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் செல்வதற்காக மும்பை விமானநிலையத்துக்கு சென்றபோது, இருவரும் விமானநிலையத்திலேயே சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதுவும் விமானம் பாதையிலிருந்து கிளம்பத் தயாரானபோது, விமானம் நிறுத்தப்பட்டதும், பின்னர், இருவரும் விமானத்திலிருந்து இறங்கவும் செய்தனர் என்று தகவல்கள் வெளியாகின.

ஒரு முறைதான் ஏமாறுவோம்.. விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட நரேஷ் கோயல் & அனிதாவிடம் தீவிர விசாரணை

இந்த நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியது மீதமிருப்பதன் காரணமாக அவர்கள் வெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அதோடு வெளிநாடு தப்பி செல்லாமல் இருப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆமாங்க ஒரு முறைதான் ஏமாறுவோரும். இப்பவுமா? ஏற்கனவே விஜய் மல்லையா விவகாரத்திலேயே அனுபவப்பட்ட அதிகாரிகள் தற்போது தீவிரமாக விசாரணையில் இறங்கியும் உள்ளனராம்.

2020-ல் சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை தொடும்.. மார்கன் ஸ்டான்லி அறிக்கை 2020-ல் சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை தொடும்.. மார்கன் ஸ்டான்லி அறிக்கை

சுமார் 8500 கோடி ரூபாயை எஸ்.பி.ஐயிடம் கடன் வாங்கிவிட்டு கடன் பிரச்சனையால், கடனையும் திரும்ப கட்ட முடியாமல், ஏன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியது.

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் என்ன பிரச்சனை நடந்தது? ஏன் இந்த நஷ்டம்? எதற்காக இவ்வளோ கடன் பெறப்பட்டது? அதை வைத்து என்ன செய்தார்கள்? முதலீடுகள் வேறு எதிலும் செய்யப்பட்டதா? என்ற பல கோணத்தில் கேள்வி எழுகிறது.

இந்த நிலையில் நரேஷ் கோயலும் அவரது மனைவி அனிதா கோயலும் எதற்காக அங்கு செல்ல வேண்டும்? மல்லையா போலவே இவர்களும் நாடுகடந்து செல்ல திட்டமிட்டுள்ளனரா? எதற்காக அரசு விதி முறைகளை புறகணித்துள்ளனராம். இது குறித்து இந்த கார்பரேட் அமைச்சகம் மெயில் அனுப்பியும் எந்த வித சரியான தகவலும் இல்லையாம்.

அதோடு நரேஷ் கோயலும், அவரது மனைவியும் அவ்வளவு அவசரமாக செல்ல என்ன காரணம் என்ற கோணத்திலும் விசாரனை நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் பல பிரச்சனைகள் என்று கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாம். அதோடு தவறு இருப்பது நீருப்பிக்கபடும் பட்சத்தில் நரேஷ் கோயல் கைது செய்யப்படலாம் என்று கருதப்படுகிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ministry of Corporate Affairs moved a month ago to bar Naresh Goyal

widening inquiry into diversion of funds Naresh goyale
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X