டெல்லி : கடந்த சில வாரங்களாக பெரிதும் ஏற்ற இறக்கத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே தனிப்பெரும்பான்மையாக பி.ஜே.பி அரசு இருந்து வந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை தொட்டது. அதோடு தேசிய பங்கு சந்தை நிப்டி 12,000 புள்ளிகள் அருகில் சென்றும் திரும்பியது.
இந்த நிலையில் பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி வரும் ஜீன் 2020 க்குள் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 45,000 புள்ளிகளைத் தொடும் என்று கணித்துள்ளது.

அதோடு அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடந்து முடிந்த தேர்தலில் சரியான தலைமையுடன் மீண்டும் அதே ஆட்சி அமைந்துள்ளதாகவும், இதனால் முதலீடு அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க சீனாவிடையே நிலவி வரும் வர்த்தக போரால் உலக அளவில் பங்கு சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. என்றும் இதனால் ஃபெடரல் வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவில் பொருளாதராம் குறித்த மாற்று அறிக்கைகள் சாதகமாக இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மத்தியில் தொடரும் தலைமையால் கடந்த முறை தொடங்கப்பட்ட முதலீடு குறித்த நடவடிக்கைகள் மீண்டும் தொடரலாம் என்றும் கருதப்படுகிறது.
அதோடு பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முதலீடுகளை கொண்டு வர வேண்டும். இதனால் முதலீடுகள் குறித்த கொள்கைகளில் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அன்னிய முதலீடுகளும் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.
குறிப்பாக மோடியின் ஜி.எஸ்.டி வரி குறித்த திட்டங்களில் ஆரம்பத்தில் எதிர்ப்பு நிலவினாலும், பின்னர் இது நன்றாகவே கைகொடுத்தது என்றே கூறலாம். அதோடு தொடர்ந்து ஜி.எஸ்.டி குறித்த மாற்றங்களையும் மத்திய அரசு தொடர்ந்து செய்து வருவது கவனிக்கதக்கது. அதிலும் குறிப்பிட்ட துறைகளுக்கு ஜி.எஸ்.டி விகிதங்களை மாற்றி அமைத்து வருவதும் கவனிக்கதக்கது.
ஆக இது போன்ற மத்திய அரசின் சாதகமான செயல்களினால் கண்டிப்பாக இந்திய பங்கு சந்தைகளிலும் இதன் எதிரொலி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பணப்புழக்கம் அதிகரிப்பதோடு பங்கு சந்தையில் முதலீடுகளும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு மத்திய அரசு ஏற்கன்வே கூறியது போல விவசாயிகளுக்கும், விவசாயதுறைக்கும், குறிப்பாக கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் வளர்ச்சி மேம்படும் என்றும், அதோடு உற்பத்தியும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கிராமப்புறங்களில் உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், அது மற்ற துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஏற்றுமதி நகர வளர்ச்சி, உள்நாட்டு விலை விகிதம் சாதகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உணவு பொருள் விலையில் நல்லதொரு மாற்றத்தை இது கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வங்கிகள் வாராக்கடனால் சிக்கித் தவித்தும் வருகின்றன. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கிகள் குறித்த முக்கிய சாதகமான நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
அதோடு மோடி அரசு உள்கட்டமைப்பு துறைக்கு முக்கியதுவம் கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. இது போன்ற சாதகமான கொள்கைகளினால் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தை அடையும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது. மார்கன் ஸ்டான்லி ஆய்வு நிறுவனம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications