Raymond நிறுவனப் பங்குகள் சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு 850 ரூபாய் என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸ் விலையை உடைத்து வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.
கடந்த டிசம்பர் 24, 2018 அன்று Raymond நிறுவனப் பங்குகளின் விலை 860 ரூபாயில் இருந்து 835 ரூபாய்க்கு சரியத் தொடங்கியது. இப்படியே Raymond நிறுவனப் பங்கு விலை சரிந்து சுமார் 653 ரூபாயைத் தொட்டது. அதன் பின் Raymond நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் மற்றும் ஒட்டு மொத்த சந்தை ஏற்றம் போன்ற காரணங்களால் ஒரு மாதிரியாக விலை ஏற்றம் காணத் தொடங்கியது.

அந்த விலை ஏற்றங்களின் காரனமாக இன்று Raymond நிறுவனப் பங்குகளின் விலை 850 என்கிற தன் வலுவான ரெசிஸ்டென்ஸை உடைத்து வர்த்தகாகி வருகிறது.
கடந்த ஐந்து வர்த்தக நாட்களாகவே Raymond நிறுவனப் பங்குகளின் விலை ஒரு நல்ல வலுவான ஏற்றத்தைக் காட்டிக் கொண்டிருந்ததையும் வர்த்தகர்கள் கவனித்திருக்கிறார்கள்.
டெக்னிக்கல் அனாலிசிஸில் இந்த Raymond நிறுவனப் பங்கைப் பார்த்தால் ஒரு கப் அண்ட் சாசர் பேட்டன் உருவாகி இருக்கிறது. இந்த பேட்டன் படி பார்த்தால் சுமார் 930 ரூபாய் வரை அசால்டாக விலை ஏற வேண்டும்.
ஆக விலை ஏற்றம் 850 ரூபாய்க்கு மேல் கொஞ்சம் நிலைத்து நிற்கும் என்கிறார்கள். வர்த்தகர்கள் மற்றும் பங்குச் சந்தை டெக்னிக்கல் அனலிஸ்டுகள்.
அதோடு இப்போது 850 ரூபாயைக் கடந்து வர்த்தகமாகும் Raymond நிறுவனப் பங்குகளின் விலை அடுத்து 900 ரூபாயிலேயே தடுமாற வாய்ப்பிருப்பதையும் கணித்து எச்சரிக்கிறார்கள் டெக்னிக்கல் அன்லிஸ்டுகள். ஆக Raymond பங்கை வாங்கி லாபம் பார்க்க விரும்புபவர்கள், கொஞ்சம் உதாராக பார்த்து வாங்கி லாபம் பாருங்கள், மீண்டும் 900 ரூபாயில் தட்டுப் பட்டால் மீண்டும் 850 ரூபாய்க்கு கீழ் வந்தாலும் வரலாம்.
காரணம் 850 ரூபாய் என்கிற லெல்வலை ஒரு வலுவான சப்போர்ட்டாக இன்னும் பார்க்க முடியவில்லை என்பதையும் அவ்வப்போது எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு பக்கம் Raymond பங்கு விலை உயர்வுக்கு கொண்டாடினால், மறு பக்கம் அந்த ஏற்றம் நிலைக்குமா என வருத்தப்பட வேண்டி இருக்கிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications