தலைப்பைப் படித்த உடன் நோன்பு இருந்த ஒருவருக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லையா..? என ரத்தத்தை அடுப்பில் ஏற்றி கொதிக்க வைக்க வேண்டாம். ரிஃபாத் ஜாவித், ஒரு நடுத்தர வயது இஸ்லாமியர். ஒரு பத்திரிகையாளர். தன் மத வழக்கப் படி புனித ரம்ஜான் நோன்பு கடை பிடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வாரம் ஏதோ வேலை விஷயமாக கோரக்பூரில் இருந்து டெல்லிக்கு நம் இந்திய அரசின் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்கிறார்.
விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே, தன் நோன்பு வேளை முடிந்து விட்டது. அதுவரை விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவுகளை வாங்கிக் கொள்ளாமல் மறுத்துவிட்டார். ஆனால் ஒரே ஒரு தண்ணீர் பாட்டிலை மட்டும் தான் வாங்கி வைத்திருந்தார். நோன்பு வேளை முடிந்ததால் கட கட வென குடித்து முடித்துவிட்டார். அந்த 300 - 400 எம் எல் தண்ணீர் போதவில்லை.

"ஒரு பாட்டில் கூடுதல் தண்ணீர் கொடுக்க முடியுமா..?" ஏர் இந்தியா விமானப் பணிப் பெண் மஞ்சுளாவிடம் நம் ரிஃபாத் கேட்கிறார்.
“ஏன்..?” விசாரித்திருக்கிறார் மஞ்சுலா.
"நான் ரம்ஜான் நோன்பு கடை பிடிக்கிறேன். என் நோன்பு வேளை முடிந்து விட்டது. எனக்கு கொடுத்த தண்ணீர் எனக்குப் போதவில்லை. எனவே தான் கூடுதல் தண்ணீர் கேட்கிறேன்" எனச் சொன்னார் ரிஃபாத்.

"உங்கள் இருக்கைக்குச் சென்று அமருங்கள், அடிக்கடி இங்கே வர வேண்டாம் சார்" தன்மையாகச் சொல்லி அனுப்பி விட்டாள் மஞ்சுளா.
"என்னய்யா இது, ஒரு பாட்டில் தண்ணீர் கூட விமானத்தில் கூடுதலாக கிடைக்காதா..?" தோழர் ரிஃபாத் ஜாவித்தும் சின்ன வருத்தப்பட்டுக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்துவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில்
"இந்த உணவுகளை நீங்கள் சாப்பிடலாமா..?" என இரண்டு சான்விட்ச் மற்றும் இரண்டு பாட்டில் தண்ணீரை நீட்டினால் மஞ்சுளா.
இன்முகத்துடன் மஞ்சுளாவிடம் "சாப்பிடலாம். இது எனக்கு மிக அதிகம்" என அன்பில் நெகிழ்ந்திருக்கிறார் ரிஃபாத்.
"நோன்பு இருக்கும் நீங்கள் இங்கு அடிக்கடி நடந்து வந்து சிரமப் பட வேண்டாம்" என மஞ்சுளா சொன்னதன் அர்த்தம் நம் ஜாவித்க்கு அப்போது தான் புரிந்திருக்கிறது.
"மேற்கொண்டு வேண்டும் என்றால் சொல்லுங்கள்" என மேலும் நெகிழ வைத்திருக்கிறாள் மஞ்சுளா.
இதை நம் தோழர் ரிஃபாத் ஜாவித்தும் தன் டிவிட்டர் பக்கத்தில் பெருமையாக பகிர்ந்திருக்கிறார். ட்விட்களைக் காண
இந்தப் பதிவைக் கண்டதும் உணர்ச்சி பொங்க ஆளாளுக்கு இந்தியா டா... விருந்தோம்பல் டா.. நட்பு டா... சூர்யா டா... தேவா டா... எனப் பொங்கிவிட்டார்கள். நமக்கும் படிக்க மெத்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக முக்கியமாக மஞ்சுலா ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டார். நம் ட்விட்டரியப்களின் அத்தனை பாராட்டுக்களையும் மஞ்சுளா மூட்டை கட்டி அள்ளிச் சென்று கொண்டிருக்கிறாள்.
இது போன்ற சம்பவங்கள் அதிகம் வெளி வர வேண்டும், அதனால் இந்தியாவில் மதவாத தீய சக்திகள் ஒழிய வேண்டும் என, எல்லாம் வல்ல எல்லா மத இறைவன் மற்றும் இறைவிகளையும் வேண்டிக் கொள்கிறோம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications