அடுக்கடுக்கான சவால்களை சந்திக்கும் மோடிஜி.. சவால்களை எதிர்கொள்ளும் நிதியமைச்சர் வேண்டும்..FICCI

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மோடிஜிக்கு தேர்தலில் ஜெயித்தது கூட பெரிய வெற்றியாக இருக்காது, இந்தியாவில் தற்போது நிலவி வரும் பொருளாதார பிரச்சனை சரி செய்து மேம்படுத்தினால் அதுதான் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று நிபுனர்கள் கருதுகின்றனர். அதோடு பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஜெயித்து பதிவியேற்கும் இந்த நிலையில், அவரக்கு காத்திருக்கும் பற்பல சவால்களையும் பல ஆய்வு நிறுவனங்கள் கூறியுள்ளன.

தொடர்ந்து இரண்டாவது முறையாக தனித்து வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மீண்டும் மோடியே பதவியேற்பார் என்ற நிலையில், வரும் மே 30ம் தேதி மோடி பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய தொழில்துறை நிபுனர்களும், பொருளாதார நிபுனர்களும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இது கொஞ்சம் கவலை கொள்ளும் விதமாகவே இருந்தாலும் இது தான் உண்மையும் கூட என்கிறது சில தகவல்கள். மேலும் அதற்காக சில வழிமுறைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Swiggy, zomato-க்கு சங்கு ஊதும் Google! கூகுளில் உணவு ஆர்டர் செய்வது எப்படி..? Swiggy, zomato-க்கு சங்கு ஊதும் Google! கூகுளில் உணவு ஆர்டர் செய்வது எப்படி..?

நாளுக்கு நாள் குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சி

நாளுக்கு நாள் குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியை உடனடியாக மேம்படுத்த வட்டி விகிதம் மற்றும் வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும். மேலும் தற்போது நிலவி வரும் இந்த பொருளாதார நிலை, இது மோடிஜிக்கு மிக கவலை தரும் ஒரு விஷயமே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

உலக நாடுகளுடன் போட்டி போடும் நிலையில் இல்லை.

உலக நாடுகளுடன் போட்டி போடும் நிலையில் இல்லை.

கடந்த டிசம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் கூட்டமைப்பான Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI) கூறுகையில், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் பொளாதார நுகர்வு இந்தியாவின் பொருளாதார நிலை மிக மந்தமான நிலையிலேயே காணப்படுகிறது. தற்போதைய இந்தியாவின் இந்த நிலை சர்வதேச நாடுகளோடு போட்டி போடும் நிலையில் இல்லை, அதாவது மற்ற நாடுகளுடன் பொருளாதாரத்தில் ஈடு கொடுக்கும் அளவுக்கு இந்தியா இல்லை என்கிறது FICCI.

அரசுக்கு பரிந்துரை

அரசுக்கு பரிந்துரை

சமீபத்திய அறிக்கையில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை, குறைந்து வரும் முதலீடுகள், குறைந்து வரும் ஏற்றுமதி, அதோடு நுகர்வோரின் தேவையும் குறைந்து வருகிறதாம். இது போன்ற சில விஷயங்களை சரிசெய்தாலே பொருளாதாரம் ஒரளவுக்கு வளர்ச்சி காணும் எனவும், FICCI கூறுகிறது. மேலும் தனது அறிக்கையின் மூலம் சில தகவல்களையும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதிலும் அடுத்து வரும் பட்ஜெட்டில் அரசு சில விஷயங்களை எடுத்துக் கொள்ள படலாம் என்றும் FICCI தெரிவித்துள்ளது.

சவால்களை மேற்கொள்ளும் நிதியமைச்சர் வேண்டும்

சவால்களை மேற்கொள்ளும் நிதியமைச்சர் வேண்டும்

இது ஒரு சாதரண விஷயம் அல்ல, இது ஒரு நீண்டகால விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயமாக உள்ளது. அதோடு விவசாய துறையில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் தான் மோடி தனிப்பெரும்பான்மையுடன் ஜெயித்துள்ளார். மேலும் வேலை பற்றாக்குறை மற்றும் பொருளாதார மந்தம் உள்ளிட்ட பல பொருளாதார சவால்களை மோடி அரசு மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதற்கு தகுந்தாற்போல, மோசமான பொருளாதாரத்தை எதிர்கொள்ளும், சவால்களை எதிர்கொள்ள கூடிய நிதி அமைச்சரும் வேண்டும் என்கிறது இந்த அமைப்பு.

வாகன விற்பனையும் குறைந்தது.

வாகன விற்பனையும் குறைந்தது.

தற்போது நிலவி வரும் சில பிரச்சனைகளால் வாகனங்கள் உற்பத்தி குறைவு, தொழில்துறை குறித்த குறீயீடு, அதோடு அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் பின்னடைந்தே காணப்படுகின்றன. குறிப்பாக கார், இரண்டு சக்கர வாகனம் விற்பனைகள் மிக குறைவாக காணப்பட்டன. அதோடு விமான துறையிலும் சிக்கல்களே நீடித்து வருகின்றது. இதில் நிலவி வரும் பிரச்சனைகளை கண்டறிந்து, அதற்கான பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலம் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் வளர்ச்சி காணும். கடந்த காலாண்டில் இந்த உற்பத்தி நிறுவனங்கள் அனைத்துமே உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்ததோடு, விற்பனையும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது கவனிக்கதக்க விஷயம்.

கார்ப்பரேட் & தனிப்பட்டவர்களுக்கும் வரிசலுகை

கார்ப்பரேட் & தனிப்பட்டவர்களுக்கும் வரிசலுகை

FICCI மேலும் கூறுகையில், புதிய அரசாங்கம் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் விதித்துள்ள வரியை குறைக்க வேண்டும். அதோடு நுகர்வோர் தேவையை அதிகரிக்க ஏழை விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் (86 டாலர்) வழங்க வேண்டும். அதோடு ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியாளர் களுக்கான வரி சலுகைகளையும் பரிசீலிக்க வேண்டும் என்று FICCI கூறியுள்ளது.

அனைத்து துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

அனைத்து துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

அதோடு இந்திய தொழில் துறையில் உள்ள நிறுவனங்களின் சுமையை குறைப்பதற்காக வரியை குறைக்க வேண்டும். அதோடு எல்லா துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதி துறையும் வளர்ச்சி காணும் என்றும் தெரிவித்துள்ளது FICCI.

வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்

வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்

சமீபத்தியில் FICCI இந்திய ரிசர்வ் வங்கிக்கு வட்டி விகிதத்தை குறைக்க கேட்டுக் கொண்டது கவனிக்கதக்கது. இந்த நிலையில் சமீபத்திய வட்டி குறைப்பினால் மக்களுக்கு பலன் கிடைத்ததாக தெரியவில்லை, சில வங்கிகள் வர்த்தக ரீதியாக இந்த வட்டி குறைப்பை செய்ததாகவும் தெரியவில்லை. வட்டி விகிதங்கள் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. இதனால் அரசு இதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கலாம்

நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கலாம்

கடந்த 2014ல் மோடி பதவியேற்ற போது கச்சா எண்ணெய் விலை குறைந்தே காணப்பட்டது. எனினும் தற்போதைய நிலையில் இரண்டாவது முறையாக பதவியேற்க போகும் இந்த நிலையில் விலை அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

அமெரிக்கா சீனா வர்த்தக போர்

அமெரிக்கா சீனா வர்த்தக போர்

சர்வதேச அளவில் நிலவி வரும் அமெரிக்க சீனா இடையே நிலவி வரும் வர்த்தக பிரச்சனை இந்த இரு நாடுகளை மட்டும் அல்ல, உலகளாவிய அளவில் பொருளாதாரத்தில் ஒரு மந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு சர்வதேச அளவில் வர்த்தகமும் மந்தமாகவே உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் ஏற்றுமதியும் இதனால் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஊன்றுகோல் தேவை

பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஊன்றுகோல் தேவை

உள் நாட்டிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி நிகழ்ந்து வரும் நிச்சயமற்ற தன்மைகளாலும், பொருளாதாரத்தில் நிகழ்ந்து வரும் சவாலான விஷயங்களாலும் பொருளாதாரம் மந்த நிலையிலேயே இருந்து வருகிறது. ஆக இந்தியாவில் உடனடியாக பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது என்றும் FICCI கூறியுள்ளது. மேலும் வரும் பட்ஜெட்டில் உரிய நிதிக் கொள்கைகளை சீரமைப்பதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

அரசு அதிகாரிகள் ஆலோசனை

அரசு அதிகாரிகள் ஆலோசனை

இந்த நிலையில் பட்ஜெட்டிற்கு முன்பாக, FICCI போன்ற தொழிற்துறை நிறுவனங்களுடன் அரசாங்க அதிகாரிகள் ஆலோசனை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் நல்லதொரு நிதிக் கொள்கைகளை கொண்டுவரப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's economy big worry for narendra Modi, thats need to immediate stimulus

india's slowing economy given big worries for Indian government, so the country needs to urgently cut tax and interest rates to revive the economy.
Story first published: Tuesday, May 28, 2019, 15:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X