டெல்லி : கடனால் தத்தளித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. ஆமா அப்பு கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 7,767 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளதாம். இதே கடந்த 2017 - 2018 நிதியாண்டில் நிகர இழப்பு 19,776 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது. இதுவே கடந்த 2018 -2019 ஆம் நிதியாண்டில் ஜனவரி-மார்ச் காலாண்டில் மொத்த வருமானம் 1,089 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2017 - 2018 ம் நிதியாண்டில் இதே காலாண்டில் 976 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் இதில் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்னவெனில் நஷ்டம் குறைவாக இருந்தது தான். ஆமாங்க கடந்த நிதியாண்டில் 2018 - 2019ம் இந்த நிறுவனத்தின் மொத்த நஷ்டம் 7,206 கோடி ரூபாயாக இழப்பைக் கண்டுள்ளது தான் மிகப்பெரிய ஆறுதலே. இதுவே கடந்த 2017 - 2018ல் 23,839 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் கொடுத்த வட்டி மற்றும் அந்நியச் செலாவணி மாறுபாடு ஆகியவற்றின் காரணமாக, 2019 ஆம் ஆண்டின் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், 788 கோடி ரூபாயும், 4,710 கோடி ரூபாயும் நஷ்டம் அதிகரித்துள்ளதாம்.
இதோடு கடந்த நிதியாண்டில் மொத்த வருமானம் 4,194 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாம். இதே கடந்த 2017 - 2018ல் 4,684 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனில் அம்பானியில் இந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு ஒப்புக் கொண்டுள்ளது, அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.
இந்த நிலையில் அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட திவால் நிறுவனமாகும். தற்போதைய நிலையில் இந்த நிறுவனத்திற்கு வங்கியில் மட்டும் சுமார் 50,000 கோடி ரூபாய் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கடன் நெருக்கடியை சந்தித்து வரும் ஆர்காம் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி பல சொத்துகளையும் விற்று கடனை அடைத்து வந்தாலும் கடனானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது. இதனால் அனில் அம்பானியின் அடுத்தடுத்த சொத்துகளையும் பதம் பார்த்து வருகிறது கடன் பிரச்சனை.


Click it and Unblock the Notifications