லண்டனில் பங்கு வெளியிட ஏர்டெல் முடிவு.. $16 பில்லியன் கடனை குறைக்க பங்கு வெளியீடாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது, ஆப்பிரிக்கா யூனிட்டின் மூலம் லண்டன் பங்கு சந்தையில் பங்கு வெளியிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 16 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடனை கட்ட முடியும் என்றும் ஏர்டெல் ஆப்பிரிக்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளாகவே, அதாவது ஜியோ நிறுவனம் எப்போது தொலைத்தொடர்பு துறையில் காலடி எடுத்து வைத்ததோ அன்றிலிருந்தே மற்ற நிறுவனங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பித்தது. அட ஆமாப்பு 2016லிருந்து ஜியோ வந்ததிலிருந்தே ஏர்டெல் உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெகுவாக பதிக்கப்பட்டன.

லண்டனில் பங்கு வெளியிட ஏர்டெல் முடிவு.. $16 பில்லியன் கடனை குறைக்க பங்கு வெளியீடாம்

குறிப்பாக மிகக் குறைந்த விலையில் டேட்டா கார்டுகள் மற்றும் மலிவான விலையில் கால்கள் பேக்குகள், ஏன் ஒரு கட்டத்தில் இலவச சலுகைகளை அறிவித்தது. இந்த நிலையில் சில இந்திய தொலைத்தொடர்பு காணாமல் போய்விட்டன.

அதில் மிஞ்சியது தான் ஏர்டெல் மற்றும் வோடபோன். தற்போது இந்த இரு நிறுவனங்களுமே மிகுந்த கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்து வந்தது. இதனால் பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே உரிமைப்பங்கு வெளியீட்டின் மூலம் 25,000 கோடி ரூபாயை திரட்டவும் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில் ஆப்பிரிக்க யூனிட் தான் நல்ல லாபத்தைக் கொடுத்தது என்றும், அதன் மூலம் தான் பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நஷ்டத்தை கண்டிருந்தாலும் ஆப்பிரிக்கா யூனிட் மூலம் சற்று லாபம் கண்டதால் சற்று ஆறுதல் அடைந்த்ததாகவும் கூறியிருந்தது.

இந்த நிலையில் தற்போது பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்டி கடனை குறைக்க முடிவு செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக தொடர்பு சேவையில் நைஜீரியா, கென்யா மற்றும் டான்ஜானியா உள்ளிட்ட 14 நாடுகளில் ஏறக்குறைய 100 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்ட ஜோஹன்னஸ்பர்க்-சார்ந்த எம்டிஎன் குழு லிமிடெட் பின்னால், ஏர்டெல் இரண்டாவது இடத்தில் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து இந்த நிறுவனத்தின் சுனில் மிட்டல் கூறுகையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனம் ஆரம்பித்தலிருந்தே சுருங்க தொடங்கியது. அதோடு ஜியோவின் சலுகைகளால் மிக நஷ்டமடைந்தது. இந்த நிலையில் இந்த பங்கு வெளியீட்டின் மூலம் இந்த கடன் களைக் அடைக்க முடியும் என்றும், இதோடு இன்னும் நிறுவனத்தை வழி நடத்திச் செல்ல இந்த பங்கு வெளியீடு ஏதுவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: airtel ஏர்டெல்
English summary

Airtel Africa ltd Plans London IPO To Cut Debt

Bharti Airtel is planning to initial public offering in London .
Story first published: Wednesday, May 29, 2019, 14:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X