இந்தியா இனி மானிட்டரிங் லிஸ்டில் இல்லை.. முறைகேடு எதுவும் இல்லையாம்..ஜாலி ஜாலி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : டொனால்டி டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு, தனது கரன்சி மானிடரிங்க் லிஸ்ட்டில் இருந்து இந்தியாவை கடந்த செவ்வாய் கிழமையன்று நீக்கியுள்ளதாம். இந்த நிலையில் அமெரிக்க கருவூலத் துறையும் இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடப்பிடவில்லையாம்.

 

முன்னதாக கடந்த அக்டோபரில் இந்தியா, சீனா, ஜப்பான், ஜெர்மனி சுவிட்சர்லாந்து மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் அந்த நாணய பட்டியியலில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த லிஸ்டில் இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இல்லையாம்.

இந்தியா இனி மானிட்டரிங் லிஸ்டில் இல்லை..  முறைகேடு எதுவும் இல்லையாம்..ஜாலி ஜாலி

டாலருக்கு நிகரான கரன்சி மதிப்பை முறைகேடு செய்து மாற்றுவதாக சந்தேகிப்படும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது.

அன்னிய செலவாணி குறித்த அரையாண்டு தொடர்பான அறிக்கையை அமெரிக்கா நிதித்துறை அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் படி 2018ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா - இந்தியா இடையேயான அன்னிய செலவாணியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், எனவே டாலருக்கு எதிரான கரன்சி மதிப்பை முறைகேடு செய்து மாற்றுவதாக சந்தேகிக்கப்படும் பட்டியியல் இந்தியாவை நீக்குவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதே போல சுவிட்சர்லாந்து கரண்சியும் நீக்கப்பட்டுள்ளதாம்.

எனினும் அந்த பட்டியியல் தொடர்ந்து சீனாவை மட்டும் வைத்துக் கொண்டதும், இந்தியாவை வெளியேற்றியுள்ளதும் கவனிக்கதக்கது. மேலும் அமெரிக்கா கருவூல சந்தை தொடர்ந்து நாணய மதிப்பை குறைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்கா கரூவூல துறை செயலர் ஸ்டீவன் மெனுசின் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளராம்.

ஜி.எஸ்.டி வாடிக்கையாளர்களுக்கு இலவச சாப்ட்வேர்.. 80 லட்சம் சிறு குறு வர்த்தகர்கள் பயன்

இவ்வாறு ஒரு நாணய மதிப்பு குறைவு என்பது ஒரு நாட்டின் நிதியச் சந்தைகளையே சறுக்கி விடலாம். ஆக இதை கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது எனவும் கூறியுள்ளாராம்.

 

எனினும் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்தியா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுடன் கடந்த ஆண்டு அக்டோபரில் இரு ஆண்டு நாணய கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்ததும், அதில் சமீபத்திய அறிக்கையில் இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அயர்லாந்து, இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட சில நாடுகளை இந்த பட்டியியலில் புதிதாக சேர்த்திருப்பதும் கவனிக்கதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: india இந்தியா
English summary

America removes India from its currency monitoring list on Tuesday

US government has removed India from its currency monitoring watchlist, but its added Italy, Malaysia, Singapore, Vietnam in this list.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X