டெல்லி : மோடியின் வலது கையாக இருந்த அருன் ஜெட்லி இனி நிதியமைச்சர் பதவி தனக்கு வேண்டாம் எனவும், தனக்கு உடல்நிலை காரணமாக மத்திய அமைச்சராக தொடர விரும்பவில்லை எனவும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளாராம்.
தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அதோடு நாளை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள இந்த நிலையில், மோடிக்கு இப்படியொரு அதிர்ச்சிகரமான செய்தியும் கிடைத்துள்ளது.

தற்போது அமைச்சர்களாக உள்ள பலருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கருதப்பட்டு வந்த நிலையில், நிதி அமைச்சராக இருந்து வந்த அருண் ஜெட்லி, இனி தான் அமைச்சர் பதவியில் தொடர விரும்பவில்லை என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறாராம்.
மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அருன் ஜெட்லி எழுதிய கடிதத்தில், கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது தனக்கு மிக பெருமை அளிக்கிறது. அதோடு நிறைய அனுபவத்தையும் தந்திருக்கிறது. இது மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது. எனினும் கடந்த 18 மாதங்களாக எனது உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதோடு அந்த மோசமான நிலையிலிருந்து தற்போது தான் கொஞ்சம் மீட்கப்பட்டுள்ளேன். ஏற்கனவே பிரசாரம் முடிந்த பின்னர், நீங்கள் கேதர்நாத் சென்ற போது, தேர்தலுக்காக எனக்கு அளிக்கப்பட்ட பொறப்புகளில் இருந்து விலகி கொள்ள விரும்புகிறேன் என உங்களிடம் வாய்மொழியாக தெரிவித்திருந்தேன். ஆக எதிர்காலத்திலும் சில காலம் எந்த பொறுப்பையும் ஏற்காமல் விலகியிருக்க விரும்புகிறேன்.
இதன் மூலம் சிகிச்சை மற்றும் உடல்நிலையில் என்னால் முழுக்கவனம் செலுத்த முடியும். நாளை புதிய அரசு அமைகிறது. இதனால், உங்களுக்கு நான் முறையாக கடிதம் எழுதுகிறேன். அதோடு பொருளாதாரத்தில் முக்கிய பொருப்புகளை வகிக்கும் அந்த பதவியில், என்னால் முழு ஒத்துழைப்போடும் முழுமனதோடும் பதவி வகிக்க முடியாது. அதோடு எனது உடல் நிலையும் அதற்காக முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும் கூறியுள்ளராம்.
ஆக எனக்கு எந்த பதவியும் வேண்டாம். அதோடு என்னால் அங்கிருந்து தான் உதவ வேண்டும் என்பதில்லை. என்னுடைய ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும், அதை வெளியிலிருந்தே என்னால் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளராம்.


Click it and Unblock the Notifications