இந்தியாவை உலுக்கபோகும் ஜி.டி.பி.. மோடி அரசுக்கு சவால் விடும் பொருளாதார வளர்ச்சி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஒரு நாட்டின் வளர்ச்சியை கணக்கிடுவதற்கு ஜி.டி.பி என்பது ஒரு முக்கிய பங்காக உள்ளது. ஒரு நாட்டில், ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்களின் மொத்த இறுதிப் பொருட்களின் மதிப்பு தான் ஜி.டி.பி. இந்த நிலையில் ஜி.டி.பி குறித்த பல தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும் தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த2018 - 2019ல் ஜி.டி.பி விகிதம் 7% கீழாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

 

இதற்கு காரணம் கடந்த நான்காவது காலாண்டில் நிலவிய மோசமான நிலையே காரணம் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஜி.டி.பி விகிதம் 5.9 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்தியாவை உலுக்கபோகும் ஜி.டி.பி.. மோடி அரசுக்கு சவால் விடும் பொருளாதார வளர்ச்சி

இந்த அறிக்கைகள் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிய மோசமான பொருளாதார நிலையே காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனக்கு வேலை குடுக்கல 10-வது மாடில இருந்து குதிச்சிருவேன்..! என்னம்மா இப்புடி பண்றீங்களேமா..?

வட்டி விகிதத்தை குறைக்கலாம்
இந்த நிலையில் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், இந்திய ரிசர்வ் வங்கி வரப்போகும் கூட்டங்களில் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன.

ஜி.டி.பி 6.9% மாக இருக்கலாம்
அதிலும் அந்த வட்டி விகித குறைப்புகள் 0.50 விகிதங்கள் வரை இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு எஸ்.பி.ஐ தலைமையிலான பொருளாதார நிபுனர்கள் குழு கடந்த 2018 -2019ம் நிதியாண்டில் ஜி.டி.பி 6.9 சதவிகிதமாக இருக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவை உலுக்கபோகும் ஜி.டி.பி.. மோடி அரசுக்கு சவால் விடும் பொருளாதார வளர்ச்சி

முதல் கட்ட அறிக்கை
எனினும் இது முதல் கட்ட அறிக்கைதான். மோடி பிரதமாராக பதவியேற்புக்கு பின் இரண்டாம் கட்ட அறிக்கை வெளியிடப்படும். அதோடு பிரதமராக பதவியேற்றபின் அரசு முறையான கொள்கைகளை அமல்படுத்தினால் மட்டுமே வளர்ச்சி அதிகரிக்கும். இல்லையேல் வளர்ச்சி தாமதமாகும்.

 

அதிக வட்டியே முதலீடு குறைய காரணம்
அதோடு அதிக வட்டி விகிதங்கள் காரணமாக முதலீடு குறைந்து வருகிறது, இந்த நிலையில் முதலீட்டை அதிகரிக்க வட்டி விகிதங்கள் 0.30 - 0.50 விகிதம் வரை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது பணவியல் கொள்கை
இந்திய ரிசர்வ் வங்கி ஜீன் 6ம் தேதி அடுத்த இரண்டாவது பணவியல் கொள்கை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய கடன் களுக்கான விகிதம் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி துணை மோடிக்கு தேவைப்படும்
அதோடு தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி தலைமையிலான பிரதான அரசுக்கு பற்பல சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. எனினும் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கண்டிப்பாக மோடி அரசுக்கு தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வலுவான அரசாங்க கொள்கையின் ஆதரவு தேவை
வளர்ச்சி விகிதங்கள் மிக பலவீனமாக இருப்பதை காண முடிகிறது. எனினும் வலுவான அரசாங்க கொள்கையின் ஆதரவு மற்றும் சிறந்த நாணய கொள்கை சூழல் ஆகியவை இந்த நிதியாண்டின் இரண்டாம் பாகத்தில் அதாவது (FY20) ஆண்டின் பிற்பகுதியில் வளர்ச்சிக்கான வளர்ச்சிக்காக வழிவகுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதோடு பணவீக்கமும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது கவனிக்கதக்க விஷயமாகும்.

பணவீக்கம் உயரும்
இதுவே உள்நாட்டு பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்களின் மதிப்பீட்டின் படியும், பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படியும், 2019 - 2020 ல் பணவீக்கம் 4 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2018 - 2019ல் 3.4 சதவிகிதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மதிப்புகள் 2020 நிதியாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி 7.2 சதவிகிதத்திற்கு உயர்த்த பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gdp ஜிடிபி
English summary

India’s last financial year GDP expected below 7%

State Bank of India indicated that the country's GDP growth for last financial year is expected below 7%due to a poor fourth quarter performance. At that same time ented march quarter is expected as low as 5.9%. its also indicate that India is likely to face its worst economic slowdown in the past few years.
Story first published: Wednesday, May 29, 2019, 19:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X