டெல்லி : ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் இந்த நிலையில், ஏர் இந்தியா புதிய பிரச்சனை ஒன்றை சந்தித்துள்ளது.
அட ஆமாங்க 3775 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்த ஏர் இந்தியா, அந்த நிலத்தை இன்னொருவருக்கு குத்தகைக்கு விட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளதாம். நில உரிமையாளருக்கு தெரியாமல் ஐந்து ஆண்டுகளாக மற்றொருவருக்கு லீசுக்கு விட்டிருப்பதாக வந்துள்ள செய்திகள் அதிர வைக்கின்றன.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இதில் பல அரசு துறை சார்ந்த அதிகாரிகளும், ஏன் வங்கிகளும், பல மத்திய அமைச்சரகங்களும், ஏர் இந்தியா யூனியன் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு, ஆகியவற்றோடு மட்டுமல்லாமல், உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சகம், மத்திய அமைச்சரையும், ஏன் பிரதமர் அலுவலகம் கூட இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியாவுக்கு புது பிரச்சனை
ஏற்கனவே கடனில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியாவுக்கு, ஒரு புறம் கடன் பிரச்சனை இருந்து வந்தாலும், மறுபுறம் இது போன்ற பிரச்சனைகளும் புதிதாக வர ஆரம்பித்துள்ளன. நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏர் இந்தியாவுக்கு கடன்களை அடைக்க பல சலுகைகளை அளித்து கொண்டே தான் இருக்கிறது. எனினும் அது நடந்த பாடில் இல்லை. பிரச்சனைகள் மேற்கொண்டு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது.
கடனை கட்ட சாத்தியமில்லாத நிலை
எனினும் இந்த பிரச்சனையிலிருந்த ஏர் இந்தியா வெளிவர வேண்டுமெனில் முதலில் வங்கிகளின் கூட்டமைப்பிற்கு பணத்தை செலுத்த வேண்டும். அதோடு இந்த வங்கி கூட்டமைப்புகள் அந்த இடத்தின் மதிப்பை ரூ.6000 கோடியாக மதிப்பிட்டுள்ளன. இந்த நிலையில் ஏற்கனவே 55,000 கோடி ரூபாய் கடனில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் இதை திருப்பிச் செலுத்தும் நிலையிலும் இல்லை. இந்த நிலையில் இந்த நிறுவனம் மற்றொரு குடியிருப்புகளை பணையம் வைக்கும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
இன்று நேற்றல்ல 1983ல் ஆரம்பித்த பிரச்சனை
இந்த பிரச்சனை கடந்த 1983ம் வருடமே இந்திய ஹவுஸிங் அமைச்சகத்திற்கும், ஏர் இந்தியாவுக்கு இடையே மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் 30 ஏக்கர் நிலம் (ரூ.65 லட்சம் )1.64 லட்சம் ரூபாய் வருட வாடகைக்கு விடப்பட்டது. மேலும் இந்த இடம் விமான பணியாளர்களுக்கு குவார்ட்டர்ஸ் கட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.
கன்னாட் இடம் - தி ஹார்ட் ஆப் பிசினஸ்
மற்றொரு இடமான 3.5 ஏக்கர் பாபா காராக் சிங் மார்க் அருகில் உள்ள கன்னாட் இடம், தி ஹார்ட் ஆப் பிசினஸ் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் 1983ல் ஏர் இந்தியா அலுவலகங்கள் கட்ட 15 கோடி ரூபாயை ஒதுக்கியது. சென்ட்ரல் கவர்மென்ட்டில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களும் மத்திய வீட்டு வசதி அமைச்சகத்தின் பாதுகாப்பில் தான் இருக்கும். தற்போது பிரச்சனையில் உள்ள இரு கட்டிடங்களும் சேர்த்தும் தான்.
ஏர் இந்தியா ஊழியர்களுக்காக பிளாட்
இந்த நிலையில் 1983ல் மீண்டும் இந்த பிரச்சனை தலை தூக்க தொடங்கியுள்ளது. அந்த நிலையில் வசந்த் விஹார் குத்தகைக்கு ரூ.70 லட்சம் செலுத்தாதால் இந்த ஒப்பந்தத்தை கேன்சல் செய்தது மத்திய வீட்டு வசதி அமைச்சகம். எனினும் ஏர் இந்தியா மட்டும் அங்கேயே தங்கியிருந்தது. அதோடு ஊழியர்கள் தங்கும் விடுதிக்காக 810 பிளாட்களும், அதோடு கிளப்களும், ஷாப்பிங் வளாகத்தையும் கட்டியது. இந்த நிலையில் பாபா கார்ட் மார்க் சிங் நிலத்தை ஏர் இந்தியாவும் பயன்படுத்த தவறிவிட்டது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியாவுக்கு அபராதம்
இது தவிர கடந்த 2014 ஆம் ஆண்டு அமைச்சகத்தில் விதிக்கப்பட்ட 372 கோடி ரூபாய் அபராதத்தையும் ஏர் இந்தியா கட்ட தவறி விட்டது. அதோடு செலுத்த வேண்டிய கட்டண தொகையான 70 கட்சம் ரூபாயும், அதோடு வசந்த் விஹார் நிலத்துக்கு அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புக்காக 302 கோடி ரூபாயும் செலுத்த வேண்டும். இந்த நிலையில் 2019 ஏப்ரல் மாதத்தில் அது 632 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாரிடம் இருந்தும் சரியான பதில்கள் இல்லை
இதில் குறிப்பிட பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் சரி, சிவில் விமானப் போக்குவரத்துச் செயலர் பிரதீப் சிங் கரோலா உள்ளிட்ட யாரும் இதுகுறித்து சரியான பதிலை அளிக்க வில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு இந்த பிரச்சனை குறித்து ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த பிரச்சனை விமான துறை போக்குவரத்து துறை அமைச்சகத்தால் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி நழுவி விட்டராம். இதோடு சிவில் விமானத்துறை அமைச்சர் சுரேஷ் பாபுவிடம் பல கேள்விகள் கேட்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளதாம்.
உபயோகப்படுத்தவில்லை என்றால் திரும்ப கொடுக்க வேண்டும்
விமான துறை அமைச்சகம், வீட்டுக் கடனை கட்ட விமானங்களின் சொத்தை அதிகப்படுத்தும் என்றும் முன்மொழிந்தது. அதாவது விமான நிறுவனத்தின் சொத்துக்கள் மூலம் வருமானத்தை அதிகரிப்பதே இதன் திட்டமாகும். எனினும் இந்த திட்டத்திற்கு வீட்டு வசதி அமைச்சகம் அனுமதியளிக்கவில்லை. அதோடு இந்த நிலங்கள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அரசு நிறுவனங்களுக்காக இந்த ஒதுக்கப்படுவதாகவும், அவ்வாறு வழங்கப்பட்ட இடத்தினை 2 வருடங்களுக்குள் உபயோகபடுத்தவில்லை என்றால், அந்த நிறுவனங்கள் அரசுத் துறைகளுக்கே திரும்ப வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
வருமானத்தை அதிகரிக்க திட்டம்
ஜூன் 1, 2017 ல், நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஏர் இந்தியா இரண்டு அடுக்குகளை வீட்டு வசதி அமைச்சகத்திற்கு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஏர் இந்தியாவில் இரண்டு அடுக்குகளின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது.
எஸ்.பி.ஐ தலைமையிலான கூட்டமைப்பிடம் அடமானம்
எனினும் 2012ம் ஆண்டிலேயே எஸ்.பி.ஐ கூட்டமைப்பிலான வங்கிகளுக்கு, இரு அடுக்குகளை ஏற்கனவே ஏர் இந்தியா அடமானம் வைத்ததாகவும் ஏர் இந்தியா செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அமைச்சரவை புதியதாக பதவியேற்ற பின்னரே எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications