காக்ணிசன்டில் பரபரப்பு.. அடுத்த ஆண்டில் 2 லட்சம் பேருக்கு வேலையாம்.. கூடுதலாக 18% சம்பளத்துடன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஐ.டி துறையில் முன்னணி நிறுவனமான காக்ணிசன்ட் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 2 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு புதிதாக வரும் பொறியியல் ஊழியர்களுக்கு கூடுதலாக 18% வரும் சம்பளம் வழங்கப்படும் என்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அதோடு ஜீன் 2020ல் பட்டம் பெற்று வரும் பொறியியல் மாணவர்கள், அமெரிக்க நிறுவனங்களால் சம்பளம் 3.38 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ரூபாயாக பெறுவார்கள் என்றும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதோடு இந்த ஐ.டி நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில்,கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த முடிவு செய்துள்ளனவாம். அதோடு அடுத்த ஆண்டு பணிக்காக ஆஃபர்களை இந்த வருடமே வழங்க உள்ளதாம். எப்படி சூப்பர்லா? ஆக மாணவர்கள் தங்களது டிஜிட்டல் துறையில் தங்களது அறிவை வளர்த்துக் கொள்வது மிக நல்லது என்றும் கூறியுள்ளார்.

நல்ல திறன் - அதிக சம்பளம்

நல்ல திறன் - அதிக சம்பளம்

இதுகுறித்து காக்ணிசன்ட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், காக்ணிசன்ட் நிறுவனம் ஏற்கனவே பீரிமியம் திறன் கொண்ட ஊழியர்களுக்கு அதிகப்படியான ஊதியத்தை வழங்கி வருகிறது. இதனையடுத்து அதிக திறன் கொண்ட மாணவர்களுக்கு, அதிலும் அடுத்த ஆண்டு வரும் பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக சம்பளம் என்பது உறுதியே என்றும் கூறப்படுகிறது.

நல்ல டிஜிட்டல் திறமைகளுக்கு முன்னுரிமை

நல்ல டிஜிட்டல் திறமைகளுக்கு முன்னுரிமை

அதன்படி, அடுத்தாண்டு புதிதாக வரும் பொறியியல் பட்டதாரிகளின் இழப்பீடையும் (compensation) அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இன்றைய காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், பொறியியல் பாடத்திட்டங்களில் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி வருகின்றன. ஆக டிஜிட்டல் துறைகளில் திறமைகளை கொண்ட மாணவர்களை சேர்க்க முடிவெடுத்துள்ளன ஐ.டி நிறுவனங்கள் என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் துறையில் தேவைப்படும் திறமையான ஊழியர்கள்
 

டிஜிட்டல் துறையில் தேவைப்படும் திறமையான ஊழியர்கள்

மேலும் இது இந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வளர்ந்து வரும் டிஜிட்டல் துறைக்கு தேவை அதிகரித்து வருவதால், டிஜிட்டல் துறையில் நல்ல திறமையுள்ள மாணவர்கள் தேவையும் அதிகரித்துள்ளது, ஆக காக்ணிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

வருடா வருடம் புதிதாக 15,000 – 20,000 ஊழியர்கள்

வருடா வருடம் புதிதாக 15,000 – 20,000 ஊழியர்கள்

கடந்த 2018ல் மட்டும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு, அவர்களின் டிஜிட்டல் திறமைகளை மேம்படுத்தியுள்ளதாகவும், அதற்காக ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் வழங்கப்பட்டு உள்ளதாம். இதன் மூலம் அவர்கள் பயன் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு இது குறித்து பிளேஸ்மன்ட் அதிகாரிகள் கூறுகையில், வருடா வருடம் 15,000 - 20,000 ஊழியர்களை புதிதாக படிப்பை முடித்து வரும் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அவர்களுக்கு சராசரி ஊதியமாக 3.30 - 3.60 லட்சங்களையும் கொடுத்துக் கொண்டு உள்ளது.

டிஜிட்டல் துறையில் 33% வருமானம்

டிஜிட்டல் துறையில் 33% வருமானம்

காக்ணிசன்ட் நிறுவனம் வருடத்துக்கு சுமார் 33% வருமானத்தினை டிஜிட்டல் துறையில் இருந்து மட்டுமே பெறுகின்றது. அதிலும் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதிலும் உள்ள ஐ.ஐ.டியிலிருந்து மட்டும் 500 மாணவர்களை கேம்பஸ் மூலம் பெற்றிந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக டிஜிட்டல் துறைக்காக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் கேம்பஸ் இந்தியாவில் குறைவு

பொறியியல் கேம்பஸ் இந்தியாவில் குறைவு

மேலும் சமீப காலமாக இந்தியாவில் பொறியியல் துறைகளிலிருந்து கேம்பஸ் இண்டர்வியூ மூலம் ஆட்களை எடுப்பது மிக குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cognizant
English summary

Cognizant to offer higher pay packages

IT major Cognizant plan to take around two lakh fresher employees in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X