நான்கு நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கிறாராம்.. எச்சரிக்கும் விதமாக லக்ஸ் சோப்

டெல்லி : இந்தியாவில் நான்கு நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவதாக, புற்றுநோய் இந்திய இந்திய புள்ளிவிவர (Cancer India Statistics report) அறிக்கையின் கூறுகின்றதாம்.

இதனை எச்சரிக்கும் விதமாக, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் லக்ஸ் சோப் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாம். அட ஆமாங்க மார்பக புற்று நோயை எச்சரிக்கும் சின்னமாகவே இந்த சோப் அமைந்துள்ளதாம்.

 நான்கு நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கிறாராம்.. எச்சரிக்கும் விதமாக லக்ஸ் சோப்

அதோடு இந்த சோப் பெண்களுக்கு ஒரு கண்டுபிடிப்பு கருவியாக இருக்குமாம், இந்த சோப்பில் உள்ள அசாதாரணமான வடிவம் பெண்களுக்கு தங்களது மார்பகங்களை ஆராய உதவும் என்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கூறியுள்ளதாம்.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், அதன் விளம்பர தார நிறுவனமான Wunderman Thompson தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றும் சோப் வடிவமைப்பாளர்கள், சோப்பு உற்பத்தி மற்றும் முன்னணி புற்றுநோயியல் நிபுணர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, பெண்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்க உதவும் வகையில் இந்த சோப் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாம்.
இந்த சோப்பின் வடிவம் ஒரு அமைதியான மற்றும் தனித்தன்மையுடன் இருக்கும், அதோடு பெண்களிடையே ஒரு ஊக்குவிப்பதை பிரதிபலிக்கும் தருணமாகவும் இருக்கும். பெண்களுக்கு அழகாகவும் இருப்பதை ஊக்குவிக்க விரும்புவதாக ஒரு கணம் தோன்றினாலும், அவை தோற்றத்திற்கு மட்டுமல்ல, அவற்றின் ஆரோக்கியத்திற்காகவும் செயல்படும் என்று ஹிந்துஸ்தான் நிறுவனம் கூறுகிறதாம்.

இதன் மூலம் மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து கொள்வதோடு, ஒரு விரைவான சோதனை செய்ய உதவும். சோப்பு என்பது ஒரு எளிய யுக்திதான். ஆனால் இதன் நோக்கம் ஒரு வணிக திட்டமல்ல, ஒருங்கிணைக்கப்பட்ட படைப்பு என்றும் கூறலாம் என்றும் இந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் சமீர் சிங் கூறியுள்ளராம்.

அதோடு இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த சோப் சில்லறை விற்பனைக்காக அல்லவாம். இந்த நிறுவனம் இந்திய புற்றுநோய் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், நகரங்களில், கல்லூரிகள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு முகாம்களால் சோப்பை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாம். நல்ல விஷயம் தானே நடக்கட்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+