மோடி 2.0: அப்போ பாதுகாப்பு... இப்போ நிதி- இந்திராகாந்தி போல சாதிப்பாரா நிர்மலா சீதாராமன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: லோக்சபா தேர்தலில் பிரம்மாண்டமாக வெற்றி பெற்று 2ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடியின் அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியமைச்சர் பொறுப்பக்கு நிர்மலா சீதாராமன் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தற்போது ராஜ்யசபா உறுப்பினராகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் உள்ள நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில் சுதந்திர இந்தியாவில், முன்னால் பிரதமர் இந்திரா காந்தியை அடுத்து நிதியமைச்சராக பொறப்பேற்கும் 2ஆவது பெண்மணி என்ற பெயரை இவர் பெறுவார்.

மோடி 2.0: அப்போ பாதுகாப்பு... இப்போ நிதி- இந்திராகாந்தி போல சாதிப்பாரா நிர்மலா சீதாராமன்

நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் பல்வேறு கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி விட்டு, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்றுக்கொள்ள இருக்கிறார்.

நிதி

நிதி

இந்நிலையில் இவருக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் நிதியமைச்சர் என்ற அதிகாரம் மிக்க பதவியை யார் அலங்கரிப்பார் என்று பல்வேறு யூகங்களும் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு முக்கிய காரணம், நிதியமைச்சர் பதவியை மோடி மீண்டும் அருண் ஜெட்லிக்குத் தான் தருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி

ஆனால், அருண் ஜெட்லியோ தன்னுடைய உடல் நிலையை மனதில் வைத்து, தன்னால் முன்பு போல செயல்பட முடியாது என்பதால் தனக்கு நிதியமைச்சர் பதவி வேண்டாம் என்று மோடிக்கு கடிதம் எழுதிவிட்டார். இதனை அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் நிதியமைச்சர் பதவியை மோடி யாருக்கு வழங்குவார் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மோடி
 

மோடி

நிதியமைச்சர் பதவிக்கு தன் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கும் திறமை வாய்ந்த ஒருவரைத் தான் மோடி தேர்ந்தெடுப்பார் என்று அனைவருமே நினைக்கின்றனர். காரணம் தற்போதைய சூழலில் மந்த நிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான துணிச்சலான மற்றும் தைரியமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஒருவர் இருந்தால் தான் தான் நினைப்பதை சாதிக்க முடியும் என்று மோடி நினைக்கிறார்.

ஒகே

ஒகே

இந்த வகையில் மோடியின் மனசாட்சியாகவும், அவரின் எண்ணத்தை அப்படியே செயல்படுத்தும் திறமைமிக்கவர்களாக உள்ளவர்ளாக மூன்று நபர்கள் உள்ளனர். முதலாமவர், மோடியின் உற்ற நண்பரான அமித் ஷா. தற்போது பாஜகவின் தலைவராக உள்ளார். அதோடு லோக்சபா எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இவரை மத்திய அமைச்சராக ஆக்கிவிட்டால் கட்சியின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்படும் என்பதால் இவருக்கு அநேகமாக நிதியமைச்சர் வாய்ப்பை மோடி வழங்கமாட்டார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

பியுஷ் கோயல்

பியுஷ் கோயல்

அடுத்ததாக தற்போது நிலக்கரி மற்றும் ரயில்வே அமைச்சராக இருப்பதோடு, நிதியமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கும் பியூஷ் கோயலை தேர்ந்தெடுப்பார் என்றும் பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கின்றனர். காரணம், நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலமில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது, கடந்த பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நல்ல பிள்ளை

நல்ல பிள்ளை

இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு தரப்பினருக்கும் பல சலுகைகளை அள்ளி வழங்கினார். குறிப்பாக விவசாயிகளுக்கு மாதாந்திர மானிய உதவித் திட்டம் மற்றும் மாதச் சம்பளதாரர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் வரிச் சலுகை என தாராளம் காட்டினார். இதன் காரணமாகவே மாதச் சம்பளதாரர்கள் அனைவருமே பாஜக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தனர். இதனை மனதில் வைத்து மோடி பியூஷ் கோயலுக்கே நிதியமைச்சர் பொறுப்பை வழங்குவார் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அடுத்த இடம்

அடுத்த இடம்

மற்றொருவர், யாருமே எதிர்பார்க்காத, மோடி மனதில் நினைப்பதை செயல்வடிவம் காட்டுவதில் கில்லாடியான தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன். இவர் தற்போது ராஜ்யசபா உறுப்பினராகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் உள்ளார். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழிப்பதில் வெற்றி பெற்றார். மேலும் பாஜகவின் செய்தித் தொடர்பாளாகவும் உள்ளார்.

ஆலோசனை

ஆலோசனை

எனவே இவரை நிதியமைச்சராக நியமிப்பது குறித்து அமித் ஷாவுடன் மோடி கலந்தாலோசித்து வருவதாக கூறப்படுகிறது. முதலில் பியூஷ் கோயலைத் தான் நிதியமைச்சராக நியமிக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது. இருந்தாலும் அவர் தற்போது ரயில்வ துறையை நன்கு கவனித்து வருவதால் அந்தப் பொறுப்பிலேயே தொடரச் செய்ய மோடி முடிவு செய்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

மோடிஜி

மோடிஜி

ஆகவேதான், அடுத்த சரியான நிதியமைச்சர் பொறுப்புக்கு நிர்மலா சீதாராமனை மோடி தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. முன்னால் பிரதமர் இந்திரா காந்தியும் முதலில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்துள்ளார். பின்னர் நிதியமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இரண்டாவது பெண்

இரண்டாவது பெண்

எனவே, பெண்களை மதிக்கும் மோடி, அவர்களை முன்னேற்றுவதில் அக்கறை காட்டும் விதமாக, நிர்மலா சீதாராமனையே நிதியமைச்சராக நியமிப்பார் என்று அனைவரும் குறிப்பாக பெண்களும் எதிர்பார்க்கின்றனர். ஒருவேளை இவர் நிதியமைச்சராக பதவியேற்றால் சுதந்திர இந்தியாவில், இந்திரா காந்திக்கு பின்னர் நிதியமைச்சராக பதவியேற்கும் நாட்டின் இரண்டாவது பெண்மணி என்ற பெயரை தட்டிச்செல்லும் வாய்ப்பிருக்கிறது.

வீட்டு நிதி நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் நாட்டு நிர்வாகத்தை நல்லா கவனிக்க மாட்டாங்களா என்ன?


தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Version 2.0 Nirmala Sitharaman becomes a Finance Minister

The new council of cabinet ministers is likely to be different from the outgoing team with some new faces. Nirmala Sitharaman will be a key member and finance minister of the Modi cabinet and her promotion in the cabinet is almost certainty.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X