டெல்லி : தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர். எனினும் ஒரு நடிகையாக அல்லாமலும் பொருளாதார நோக்கில் இல்லாமலும், ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் சாய் பல்லவிக்கு ஒரு சல்யூட்.
அட ஆமாப்பு தனக்கு வந்த விளம்பர ஆஃபருக்கு 2 கோடி கொடுப்பதாக கூறியும், சாய் பல்லவி நடிக்க நிராகரித்துவிட்டாராம். அதற்காக அவர் கூறிய காரணம் மக்கள் மத்தியில் பிடித்துப் போகவே, இன்றைய சோஷியல் மீடியாக்களின் டாப் மோஸ்ட் ஹீரோயின் சாய் தானாம்.

பல்வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகி, நடித்துக் கொண்டிருக்கும் சாய் பல்லவி, மலையாளப் படத்தில் அறிமுகமானாலும், தமிழ்ப் பெண்ணாக நம்மால் கவனிக்காமல் இருக்க முடியுமா? இவருடைய அழகான முகம், நடனத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலும் இன்றைய இளைஞர்களின் கனவு நாயகி என்றே கூறலாம்.
மருத்துவப் படிப்பை முடித்து விட்டு அத்துறைக்கு செல்லாமல், சினிமா மீது காதல் வயப்பட்டு நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு இந்த விளம்பரத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்துள்ள சாய் பல்லவி, அதற்காக கூறும் காரணம் சூப்பரோ சூப்பர்.

அதோடு அவர் நடிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்நிறுவனம் ரூ.2 கோடி வரை தரத் தயாராக இருப்பதாகக் கூறியும் மசியவில்லையாம்.
சரி அப்படி என்ன விளம்பரம்ன்னு கேட்கிறீங்களா? அழகை மேம்படுத்தும் சிவப்பழகு கிரீம் சம்பந்தப்பட்டதாம். இதை தடவிக் கொண்டால் வெளிநாட்டவர்கள் போல, நாம் வெள்ளையாக மாறிவிடலாமாம்.
இதுகுறித்து விளக்கமளித்த சாய் பல்லவி. இந்தியர்களின் நிறம் இது தான். நாம் ஏன் வெளிநாட்டவர்களை போல் மாற வேண்டும். இந்தியர்களாக இயல்பாகவே இருக்கலாம். அதோடு இந்த சிவப்பழகு க்ரீம்களை பயன்படுத்தும் போது பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால் நாம் எப்போதும் போல இயல்பாய் இருப்பதே அழகு என்று கூறிவிட்டாராம்
அதோடு மட்டும் அல்லாமல், சிறு வயதில் சாய் பல்லவியின் தங்கை பூஜாவிற்கு ஒரு கவலை. அது அவர் அக்காவை விட தான் கொஞ்சம் கலர் குறைவாக இருப்பது என்பது தானாம். எனினும் சாய் பல்லவி, சிவப்பாக இல்லையே என்பதற்காக வருத்தப்படாதே. இந்தியர்களின் நிறம் இது தான். இதுதான் அழகு என்று கூறுவாராம்.
அதோடு அவரது அழகை மேம்படுத்த காய்கறிகள், பழங்கள், பல்வேறு வகையான உணவுகள் என வாங்கி சாப்பிட சொல்வாராம். ஆனால் நிறத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லையாம். இதனால் பூஜா பெரும் வருத்தத்தில் இருந்துள்ளார். இதைக் கண்டு கலங்கிய சாய் பல்லவி, இயல்பாக இருப்பது தான் அழகு என்று அடிக்கடி கூறுவாராம். அதோடு எப்போதும் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications