மோடியின் உஜ்வாலா இனி நாடு முழுவதும்- 5 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்கிக்கலாம்

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனைத்தும் அந்தந்த குடும்பத் தலைவியின் பெயரிலேயே இருப்பதால், மானியமும் குடும்பத் தலைவிக்கே வழங்கப்படுகிறது.

டெல்லி: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த 14.2 கிலோ மதிப்புள்ள சிலிண்டரின் அளவைக் குறைத்து 5 கிலோ சிலிண்டர்களாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்ட போது இதன் இலக்கானது மிகக் குறைந்த அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அபார வெற்றிக்கு உஜ்வாலா திட்டமும் கை கொடுத்ததால் இதனை நாடு முழுவதும் விரிவு படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பது என்பது மிக அரிதானதாக இருந்தது. நகர்புறங்கள், அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் உயர் வகுப்பினர் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவில் உள்ள மக்களுக்கே சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைத்து வந்தது.

இதற்கு மாறாக கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் அனைவரும் அருகாமையில் கிடைக்கும் விறகுகளையும், கரி அடுப்புகளையும் கொண்டு சமைப்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படுவதுண்டு. மேலும் விறகு அடுப்புகளில் சமைப்பதால் வெளிவரும் புகையை சுவாசிப்பதால், சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு நுரையீரல் தொற்று நோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்று நோய் ஏற்பட்டு ஆண்டு தோறும் சுமார் 5 லட்சம் மரணங்கள் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனை மனதில் கொண்டே அவர்களை காப்பாற்றும் வகையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் அவதிப்படும் மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முன்வந்தார்.

உஜ்வாலா திட்டம்

உஜ்வாலா திட்டம்

மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகமும் நாட்டிலுள்ள ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில் உஜ்வாலா திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டியது. மத்திய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளித்தது.இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டில் மே மாதம் 1ஆம் தேதி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடும் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கும் உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

கோடிக்கணக்கான பெண்கள் பயன்

கோடிக்கணக்கான பெண்கள் பயன்

இதன்படி, 2016-17ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 1.5 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு வழங்குவதற்காக சுமார் 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரையிலும் சுமார் 7.19 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மானிய விலை சிலிண்டர்கள்

மானிய விலை சிலிண்டர்கள்

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 14.20 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர்களுக்கு சுமார் 712 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் சுமார் 215 ரூபாய் மானியமாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன. மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனைத்தும் அந்தந்த குடும்பத் தலைவியின் பெயரிலேயே இருப்பதால், மானியமும் குடும்பத் தலைவிக்கே வழங்கப்படுகிறது. இதில் கவனிக்கப்படவேண்டிய விசயம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதால் தான் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுகிறது.

ஏழைகளுக்கு சிரமம்

ஏழைகளுக்கு சிரமம்

ஆனால் அந்த ஏழைக் குடும்பத்தினர் முழுமையாக நிரப்பப்பட்ட 14.20 கிலோ எடையுள்ள சிலிண்டர் வாங்குவதற்கு 712 ரூபாய் செலவழிக்க மிகவும் சிரமப்படுவதால் பல சமயங்களில் அவர்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில்லை. இதனால் சில சமயங்களில் சிலிண்டர் வாங்குவதை தவிர்த்துவிடுகின்றனர்.

இதன் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கத் தொடங்கிவிடுகின்றனர்.

 

5 கிலோ சிலிண்டர்கள் கிடைக்கும்

5 கிலோ சிலிண்டர்கள் கிடைக்கும்

பயனாளர்களின் இந்த சிரமங்களைப் போக்குவதற்காக இதில் மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. 14.2 கிலோ எடையுள்ள சிலண்டர்களுக்கு பதிலாக 5 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை 260 ரூபாய் விலையில் வாங்கும்போது அதற்கு மானியமாக 80 ரூபாய் கிடைக்கும்.

அதோடு விலையும் குறைவாக இருப்பதால் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை வாங்க முடியும். இவை எடை குறைவாக இருப்பதால் கையாள்வதற்கும் எளிதாக இருக்கும் என்றும், இதனால் இவை மேலும் பிரபலமடையும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சத் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

நாடு முழுவதும் உஜ்வாலா

நாடு முழுவதும் உஜ்வாலா

தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டதற்கு, உஜ்வாலா திட்டம் முக்கிய காரணம் என்பதால், பிரதமர் மோடி, இந்தத் திட்டத்தை மேலும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளார். இதன்படி, தற்போது வழங்கப்பட்டு வரும் 3 சிலிண்டர்களுக்கு பதிலாக 5 சிலிண்டர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+