மோடிஜி தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து கடனா.. ரூ.2400 கோடியா.. அதுவும் ஏர் இந்தியாவுக்கா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தொடர்ந்து கடன் பிரச்சனையால் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம், தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து கடன் கேட்டுள்ளதாம். ஏற்கனவே வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்திய தற்போது மக்களின் சிறு சேமிப்பு நிதியிலும் விளையாட நினைக்கிறது.

 

ஏற்கனவே சுமார் 58,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம், தற்போது மேற்கொண்டு விமான நிறுவனத்தை நடத்த 2400 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளதாம்.

மோடிஜி தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து கடனா..  ரூ.2400 கோடியா..  அதுவும் ஏர் இந்தியாவுக்கா?

இதற்கு முன்னரே ஏர் இந்தியா, தேசிய சிறு சேமிப்பு நிதியத்திடம் இருந்து 1000 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் இந்த நிலையில், இது மீண்டும் 2400 கோடி கேட்பது அனைவரிடத்திலும் கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.

மேலும் இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கூறுகையில் சுமார் 58,000 கோடி ரூபாய் கடனில் உள்ள இந்த நிறுவனம், பங்கு விலக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விமான நிறுவனத்தை நடத்தவும், தொடர்ந்து சேவையை வழங்குவதற்கு தேவையான மூலதனம் என்பது பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது.

மோடிஜி தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து கடனா..  ரூ.2400 கோடியா..  அதுவும் ஏர் இந்தியாவுக்கா?

அதோடு இந்த பற்றாக்குறையை நீக்கத்தான் இந்த கடனையும் கேட்கிறது என்று கூறுகிறதாம் ஏர் இந்தியா. இந்த நிலையில் கடந்த மே 14ம் தேதியன்றே ஏர் இந்திய நிர்வாகிகள் கூட்டமைப்பில், கடன் வாங்குவது குறித்தும் பேசப்பட்டதாம்.

அதோடு பட்ஜெட்டில் மோடி அரசு தருவதாகக் கூறிய தொகையில் 2484 கோடி ரூபாய் மீதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது இந்த கூட்டமைப்பு. இந்த நிலையில் அந்த நிதியை தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து பெறுவதற்காகவும் அரசிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதோடு இவ்வாறு வாங்கப்படும் கடனுக்கான வட்டி நேரடியாக அரசிடம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளது ஏர் இந்தியா. இவ்வாறு பெறப்படும் கடனானது வங்கியிலிருந்து பெறப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை விட வட்டி 0.5 சதவிகிதம் குறைவாக இருக்கும். ஆக ஏர் இந்தியா இப்படியொரு திட்டத்தை திட்டியுள்ளதாகவும், ஏர் இந்தியாவின் தற்போதைய நிலைக்கு இது மிக உபயோகமாக இருக்கும் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India seeks for Rs 2,400 crore loan from NSSF

air india boasts a total debt of around Rs 58,000 crore, but its have sought the government's approval to borrow Rs 2,400 crore from the NSSF account to meet its working capital requirements.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X