மும்பை : தொடர்ந்து 10 காலாண்டுகளாக நஷ்டத்திலேயே இயங்கி கொண்டுள்ள ஐ.டி.பி.ஐ வங்கி, கடந்த மார்ச் காலாண்டிலும் வெற்றிகரமாக நஷ்டத்தில் தான் உள்ளதாம். அட ஆமாப்பு கடந்த ஜனவரி - முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.4,918 கோடி ரூபாயாக நஷ்டத்தினை சந்தித்துள்ளதாம் இந்த வங்கி.
மக்களின் பணத்தினை வைத்து ரிஸ்க் எடுத்துள்ள எல்.ஐ.சிக்கு இது மிக பீதியை கொடுத்துள்ளதாம். அட ஆமாப்பு எல்.ஐ.சி சமீபத்தில் ஐ.டி.பி.ஐ வங்கியின் 51% பங்குகளை வாங்கியது. சுமார் 21,624 கோடி ரூபாயை முதலீடு செய்து அரசு நிறுவனமான எல்.ஐ.சி, ஐ.டி.பி.ஐ வங்கியை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வங்கி தொடர்ந்து 10 காலாண்டுகளாக நஷ்டத்தினையே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் என்ன கொஞ்சம் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.5663 கோடி ரூபாயை நஷ்டத்தினை சந்திருந்ததாம். தற்போது கொஞ்சம் குறைந்திருக்கிறதாம்.
இது குறித்து ஐ.டி.பி.ஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலாண்டுகளை விட நஷ்டம் தற்போது குறைந்துள்ளது. அதோடு வாராக்கடன்களின் விகிதமும் குறைந்து கொண்டே வருகிறது என்றும் அந்த வங்கியின் தலைமை அதிகாரி ராகேஷ் சர்மா கூறியுள்ளார்,
அதோடு இதற்கு முந்தைய ஆண்டில் 10,773 கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன் விகிதம், தற்போது கடந்த மார்ச் காலாண்டில் 7,233 கோடி ரூபாயாக குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளதாம்.
எனினும் வங்கிகள் ஒரு புறம் தாங்கள் நஷ்டத்தினை குறைத்துக் கொண்டு வருவதாக மேல் பூச்சு பூசினாலும், கடந்த நிதியாண்டில் மட்டும் 15,116 கோடி ரூபாய் மொத்த நஷ்டமாக காட்டப்பட்டுள்ளதாம். ஆமாப்பு ஆனா இது இதற்கு முந்தைய 2018ம் நிதியாண்டில் நஷ்டம் 8,238 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து நஷ்டத்தினையே சந்தித்து வரும் இந்த வங்கியின் மீது பி.சி.ஏ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடா பிசிஏ நடவடிக்கையா அப்படின்னா என்ன கேட்கிறீங்களா? ஒரு வங்கி தொடர்ந்து நஷ்டத்தினை கண்டு திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டால் அந்த வங்கியின் மீது, இந்திய ரிசர்வ் வங்கி, PCA நடவடிக்கைகை கொண்டு வரும்.
சரி அதனால எதுவும் பிரச்சனையா? என்கிறீர்களா? ஆமாப்பு இந்த பி.சி.ஏ (PCA) நடவடிக்கை எடுத்தால் ஒரு வங்கி பெரிய அளவில் லோன் தர முடியாதாம். அதோடு வங்கியில் புதிய வேலைவாய்ப்பினை ஏற்படுத்த முடியாதாம்.
அது மட்டும் இல்ல ஏற்கனவே வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் இருக்காதாம். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளதாம். இனிமேலாவாது சரியான நடவடிக்கையை எடுக்க கூறியுள்ளதாம்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications