Pepsi அப்பளம்..! வியாபாரமே இல்லிங்கய்யா..! அப்பளம் விக்கிற அளவுக்கு இறங்கிட்டோம்னா பாத்துக்குங்க..!

பெப்ஸி மொதல்ல கூல்ட்ரிங் வித்துச்சி இப்போ தெருத்தெருவா அப்பளம் விக்கப்போகுது. சிறு குறு தொழிலாளர்களை குறிவைப்பதோடு தென் இல்லத்தரசிகளின் மூலம் அடுப்பங்கரைக்குள் நுழைய திட்டமிட்டுள்ளது.

சென்னை: இந்தியாவில் மெல்லக் காலூன்றி குளிர்பானத்தை விற்று தனது விற்பனையை பெருக்கிய பெப்ஸி (Pepsi) குளிர்பான நிறுவனம், பின்னர் லேஸ் சிப்ஸ் விற்பனையிலும் நுழைந்து, தற்பொழுது தென்னிந்தியாவின் முக்கிய உணவுப் பொருளான அப்பளம் விற்பதற்கும் திட்டம் தீட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னிந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத் தீனியான அப்பளத்திலும் கை வைத்துள்ளது, அப்பளம் தயாரித்து விற்பனை செய்து வரும் சிறு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனா ஒரு விசயம் நம்ம ஆட்களுக்கு தெரியவே மாட்டேங்கிறது. அந்தக் காலத்திலெருந்தே, சாப்புடும்போது அப்பளத்த சேத்துகோடா, ஒடம்புக்கு நல்லதுடா, நல்லா செரிக்கும்டான்னு, நம்ம வீட்டு பெருசுங்க சொன்னா கேக்கறதே இல்லை.

அப்பளத்தில் சத்துக்கள்

அப்பளத்தில் சத்துக்கள்

இதே மேட்டரே, சும்மானாச்சுக்கும், அடே, நம்ம சாப்புடற ஒரு அப்பளத்துலே என்னென்ன சத்தெல்லாம் இருக்குன்னு அமெரிக்கா காரன் கண்டுபிடிச்சிறுக்கான்னு தெரியுமா கேட்டுக்கோ, கொழுப்பு 3.3 கிராம், சோடியம்1.7 மில்லி கிராம், பொட்டாசியம் 1 கிராம், கார்போஹைட்ரேட் 60 கிராம், ஃபைபர் 19 கிராம், புரோட்டீன் 26 கிராம், கலோரி 370, அப்புறம் உயிர் சத்து, சாம்பல் சத்து, மணிச் சத்து என எத்தனை இருக்கோ அத்தனையும் இருக்குன்னு கண்டுபிடிச்சி சொல்லியிருக்கான்னு சொன்னா வேற பேச்சு பேசாம வெறும் அப்பளத்த மட்டுமே சாப்பிட்டு தொலைப்பாங்க. காரணம் என்னான்ன அமெரிக்கா காரன் கண்டுபிடிச்சி சொன்னது.

செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்

செகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்

ஏன்னா, செகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்னு நம்மாளுங்க காலம் காலமா நம்பிக்கிட்டு இருக்கானுங்க. இப்போல்லாம் எதுக்கெடுத்தாலும் அமெரிக்கா காரன் பயங்கரமா ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சி சொல்லிட்டான், அதானால் தான் என்று நம்பிக்கையோடு சொல்வார்கள்.

நம்முடைய இந்த அறியாமை என்ற ஒரு ஆயுதத்தை வைத்தே வெளி நாட்டவர்களும் இந்தியாவில் கடைகளை பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

 

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

முதலில் உருளைக் கிழங்கில் கைவைத்தார்கள். சிறியவர்களுக்கு பிடித்தமான சிப்ஸ் வகைகளை தயாரித்து லேஸ் (Lays) மற்றும் குர்குரே (Kurkure) என்ற பெயரில் விற்பனையை தொடங்கினார்கள். பின்னர் அதையே மூலதனமாகக் கொண்டு உருளைக்கிழங்கை அவர்களே கண்டுபிடித்தது மாதிரி காப்புரிமை பெற்று, நம் விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கும் விதமாக அவர்களுக்கு எதிராக வழக்கும் போடுவார்கள்.

அப்பளம்

அப்பளம்

தென்னிந்திய மக்கள் தங்கள் சாப்பாட்டில் முக்கிய உணவாக விரும்பி சேர்த்துக் கொள்ளும் உணவு வகைதான் அப்பளம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவும் கூட. அதுவும் விருந்து விசேஷங்களில் சாப்பிட்ட பின் இறுதியாக பாயாசத்துடன் அப்பளத்தையும் சேர்த்து சாப்பிடுவதுண்டு. அதுவும், பாயாசத்துடன், அப்பளத்தை நொறுக்கிப் போட்டு ஒரு கலக்கு கலக்கி சாப்பிட்டால் நம் ஜென்ம சாபல்யமே அடைந்ததுபோல் முகத்தில் ஒரு ஆத்ம சந்தோசம் உருவாகும்.

அப்பளத்தின் மகிமை

அப்பளத்தின் மகிமை

காரணம், அப்பளத்திற்கு அப்படி ஒரு மகிமை உள்ளது. தென்னிந்தியாவில் அப்பளம் தயாரிப்பு என்பது சாதாரணமாக வீடுகள் தொடங்கி, சிறு குறு உற்பத்தியாளர்கள் வரையில் பெரும்பாலானவர்கள் காலம் காலமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இதை வைத்தே தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

பெப்ஸி அப்பளம் வருது

பெப்ஸி அப்பளம் வருது

இவர்களின் வாழ்க்கையிலும் குறுக்கே வந்து நிற்கப்போகிறது பெப்ஸி குளிர்பான நிறுவனம். இப்பொழுது, பெப்ஸி நிறுவனம் தென்னிந்தியாவின் பக்கமும் தன் பார்வையை திருப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அப்பளத்தை மொத்தமாக வாங்கி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

நொறுக்குத்தீனி

நொறுக்குத்தீனி

இந்தியாவில் நொறுக்குத் தீனி விற்பனையில் தற்போது முன்னணியில் இருப்பது ஹல்திரம் (Haldiram) நிறுவனமே. இதற்கு அடுத்த இடத்தில் பெப்ஸி நிறுவனம் உள்ளது. ஆனால் அதே சமயத்தில் தென்னிந்தியாவைப் பொறுத்த வரையிலும் நம்பர் 1 இடத்தில் இருப்பது பெப்ஸியின் லேஸ் தான். இதை உத்தேசித்தே பெப்ஸி நிறுவனமும் அப்பளம் விற்பதற்கு முடிவெடுத்துள்ளது.

அடுப்பங்கரைக்குள் நுழையுது

அடுப்பங்கரைக்குள் நுழையுது

தென்னிந்தியாவில் பாக்கெட் நொறுக்கத் தீனி வகைகளில் பெரும்பாலானவை வட இந்திய உணவு வகைகளே. எனவே அதை முறியடிக்கும் விதமாகவே தென்னிந்தியாவில் அப்பளம் விற்கும் முடிவுக்கு பெப்ஸி நிறுவனம் வந்துள்ளது. இல்லத்தரசிகள் மூலம் அடுப்பங்கரைக்குள் நுழைவதால் தென்னிந்திய சந்தையில் தான் வலுவாக காலூன்றி வளர்ச்சியடைய முடியும் என்று பெப்ஸி நிறுவனம் நினைத்துள்ளது. ஏற்கனவே குஜராத் உருளைக் கிழங்கு விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடியது. பின்னர் விசயம் நீதிமன்றம் வரையில் போய் பின்னர், நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு அலையால் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டதோடு வழக்கையும் திரும்பப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+