டெல்லி: சவ்கிதார் மோடியின் முதல் ஐந்தாண்டு காலத்தின் மிகப் பெரிய பிரச்னையாக (மக்களுக்கு மட்டும்) இருந்த வேலை வாய்ப்பு பிரச்னை தொடர்பான தரவுகள் இப்போது அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கின்றன.
நேற்று (மே 31, 2019) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (Ministry of Statistics and Program Implementation) வெளியிட்டிருக்கும் ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையான வேலைவாய்ப்பு தொடர்பான அறிக்கையில் 6.1 சதவிகிதம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.

கிராம புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் 5.3 சதவிகிதமாகவும், நகர் புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் 7.8 சதவிகிதமாகவும் இருப்பதையும் பெருமையாகச் சொல்லி இருக்கிறார்கள் பாஜக தலைமையிலான புதிய அரசு.
இந்த சர்வேக்காக 4.33 லட்சம் பேரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்களாம். கிராம புற ஆண்களில் 5.8 சதவிகிதம் பேர் பணமதிப்பிழப்பினாலும், சரக்கு மற்றும் சேவை வரியான GST-யாலும் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். அதே போல கிராம புற பெண்களை எடுத்துக் கொண்டால் 3.8 சதவிகிதம் பேர் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்களாம்.
இதுவே நகர் புற ஆண்களை எடுத்துக் கொண்டால் 7.8 சதவிகிதம் பேர் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்களாம். நகர் புற பெண்களை எடுத்துக் கொண்டால் 5.7 சதவிகிதம் பேர் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள்.
ஆக இத்தனை நாள் எதிர்கட்சிகள் ஊடகங்கள் சொன்னது எல்லாமே உண்மை தான். இந்திய சரித்திரத்தில் 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவில் கொடூரமாக அதிகரித்திருக்கிறது. இந்த உண்மையை, சுமார் ஆறு மாதங்கள் கழித்து (குறிப்பாக தேர்தலில் வென்ற பிறகு) ஆமா 45 வருஷத்துல இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு குறஞ்சிருச்சு. அதுக்கு என்ன இப்ப..? என நம்மிடமே முரட்டுக் கேள்வி கேட்கிறார்கள்.
மிக முக்கியமாக கடந்த காலங்களில் வேலை வாய்ப்பு தரவுகள், அவர்கள் செய்யும் செலவை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுவார்களாம். ஆனால் இந்த முறை கல்வியை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டிருக்கிறார்களாம். இன்னும் கொஞ்சம் விட்டால் இப்படி புதிய வடிவில் வேலைவாய்ப்பைக் கணக்கிட்டுச் சொல்லத் தான் இத்தனை மாதங்கள் கூடுதலாக எடுத்துக் கொண்டோம் எனச் சொன்னாலும் சொல்வார்கள், புதிய அமைச்சர்கள்.


Click it and Unblock the Notifications