என்னாது தனி நபர் வருமானம் அதிகரிக்குமா.. ஆனா ஜி.டி.பி மட்டும் குறையும்

டெல்லி : ஒரு நாட்டின் அல்லது ஒரு ஆட்சிப் பகுதியின் மொத்த தேசிய உற்பத்தி அங்கு வாழும் அனைவருக்கும் சமமாக பிரிக்கப்பட்டால், ஒருவருக்கு தோரயமாக சுட்டும் ஒரு பொருளாதார அளவுகோலே தனி மனித வருமானமாம்.

அப்படிப்பட்ட இந்தியர்களின் அப்படிப்பட்ட தனிநபர் வருமானம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சில தினங்களுக்கு வெளியிட்டுள்ளது.

ஆமாப்பு கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் ஒரு தனி மனிதரின் சராசரி வருமானம் 10 சதவிகிதம் அதிகரித்து 10,534 ரூபாயாக அதிகரிக்குமாம். இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில் (2017 - 2018) 9,580 ரூபாய் மட்டுமே தனி மனித சராசரி வருமானம் இருந்ததாம்.

தனி நபர் வருமானம் அதிகரிப்பு

தனி நபர் வருமானம் அதிகரிப்பு

தற்போதைய விலைகளின் அடிப்படையில் தனி மனித வருமானம் கடந்த 2018 - 2019ம் நிதியாண்டுக்கு 1,26,406 ரூபாயாக (மாதம் ரூ.10,533.83) ஆக 10 சதவிகிதம் உயருமாம். இதுவே கடந்த 2017 - 2018ம் நிதியாண்டில் 1,14,958 ரூபாயாக (ரூ.9,579 ) இருந்தது குறிப்பிடத்தக்கது என்று வருடாந்திர வருமானம் குறித்து தேசிய புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ளது.

வருட வருமானம் ரூ.188.17 லட்சம் கோடி

வருட வருமானம் ரூ.188.17 லட்சம் கோடி

தனி நபர் வருமானம் என்பது ஒரு நாட்டின் செழிப்புக்கான முக்கிய குறிகளுள் ஒன்றாகும். அதுவும் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் 188.17 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்குமாம். இதுவே 2017 - 2018ம் நிதியாண்டில் 169.10 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் சுமார் 11.3 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

ஜி.டி.பி 5.8%மாக குறையலாம்

ஜி.டி.பி 5.8%மாக குறையலாம்

அதிலும் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.8 சதவிகிதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முக்கியமாக பண்ணை மற்றும் உற்பத்தி துறைகளில் ஏற்பட்ட மோசமான செயல் திறன்களின் காரணமாக மிக குறையலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜி.டி.பி குறைந்து கொண்டே வருகிறது

ஜி.டி.பி குறைந்து கொண்டே வருகிறது

குறிப்பாக 2013 - 2014ல் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 6.4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் அதற்கு பின்னர் இந்த விகிதம் படிப்படியாக, 2014 -2015லிருந்தே மொத்த உள்நாட்டு வளர்ச்சியை விட குறைந்தே காணப்படுகிறது. எனினும் கடந்த 2018 -2019ம் நிதியாண்டில் ஜி.டி.பி 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 7.2 சதவிகிதமாகவும் இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+