ஒரு அடி ஏறினா 9 அடி சறுக்கும் இந்தியா.. ரூ.39,000 கோடி சலுகையை இழக்க போகிறதா?.. கவலையில் மோடி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : எப்படியேனும் தங்களுக்கு குறைந்த வருவாயை கொடுக்கும் நாடுகளாக தேடி கண்டு பிடித்துக் மரண அடி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இப்படி நீயா நானா என அடித்துக் கொள்ளும் போட்டியால், இந்தியா கடந்த ஆண்டு சுமார் 39,000 கோடி ரூபாய்க்கு பெற்ற சலுகையை பறிக்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆமாப்பு இந்தியா கடந்த ஆண்டு பெற்ற சலுகையை இனி பெற முடியாதாம். இனி இந்தியாவுக்கு இந்த ஆண்டு முதல் அதுவும் மே5 முதல் இந்த சலுகை கிடையாதாம்.

 

அட ஆமாப்பு ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் தள்ளாடும் இந்தியாவுக்கு இது மரண அடியாகவே இருக்க போகிறது. எப்படியேனும் இந்தியப் பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் மோடிஜி அடுத்தடுத்த பொருளாதார கொள்கைகளை புதுபித்துக் கொண்டே வந்தாலும், அதற்கு குறுக்காக ஏதேனும் ஒரு பிரச்சனை புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கிறது.

ஆமாப்பு ஒரு அடி ஏறினா ஒன்பது அடி சறுக்கி விழுகிறது இந்தியா. ஜெனரலைஸ்ட் சிஸ்டம் ஆஃப் ப்ரிஃபரென்சஸ் (Generalized System of Preferences) எனப்படும் முன்னுரிமை பட்டியியலில் இருந்து இந்தியாவை நீக்கி விட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்தியாவுக்கு பலத்த அடி?

இந்தியாவுக்கு பலத்த அடி?

தன்னோட வர்த்தகம் செய்யும் நாடுகளில் அதிக லாபம் தரும் நாடுகளை மட்டும் லிஸ்டில் வைத்துக் கொண்டு, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கி உள்ளது. இது இந்தியாவுக்கு மிக துரதிர்ஷ்டவசமான ஒரு விஷயமே. அதுவும் இந்தியா தற்போதுள்ள பொருளாதார பிரச்சனையில், இந்தியாவுக்கு இது ஒரு பலத்த அடியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வர்த்தக உறவு சரியில்லை

வர்த்தக உறவு சரியில்லை

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே இரு தரப்பு அரசியல், ராணுவ உறவுகள் நன்றாக இருந்தாலும், வர்த்தக உறவு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அது வெடித்து சிதற ஆரம்பித்து விட்டது. எப்போது இந்தியாவை பற்றி பேசினாலும் இந்தியா அதிகளவு வரி விதிக்கிறது கூறி வந்த டிரம்பிற்கு இது ஒரு கருவியாக போய் விட்டது.

இறக்குமதி பொருட்களுக்கு 100% வரி
 

இறக்குமதி பொருட்களுக்கு 100% வரி

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு வரி அதிகம் என்று பொருமி தள்ளிய டிரம்ப், தற்போது அதன் முழுகாட்டத்தையும் காட்ட துவங்கியுள்ளார். குறிப்பாக ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவில் 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும், இதுவே இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகிற மோட்டார் சைக்கிள்களுக்கு நாங்கள் வரி அதிகமாக விதிப்பதில்லை. ஆனால் இந்தியா 100 சதவிகித வரியை விதித்துக் தள்ளுகிறதாம்.

2 ஆயிரம் பொருட்களுக்கு சலுகை

2 ஆயிரம் பொருட்களுக்கு சலுகை

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள் என அமெரிக்கா பட்டியலிட்டு, ஜி.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற திட்டத்தின்கீழ் சலுகைகளை வழங்கி வந்தது. இது இன்றல்ல நேற்றல்ல, நீண்டகால நடைமுறையாகும். இந்த திட்டத்தின்கீழ், அமெரிக்க நாடாளுமன்றம் வகுத்துள்ள தகுதி வரம்புக்கு உட்படுகிற நாடுகள், அமெரிக்க சந்தைக்கு வாகன உதிரிபாகங்கள், ஜவுளி வகைகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்தும் வந்தன. இந்த திட்டத்தின் மூலம் சலுகையும் பெற்று வந்தன.

இந்தியாவிக்கு சுமார் ரூ.38,964 கோடி சலுகை

இந்தியாவிக்கு சுமார் ரூ.38,964 கோடி சலுகை

இந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து அதிகளவில் பொருட் களை வரி விதிப்பின்றி அமெரிக்கா இறக்குமதி செய்தது. அதில் இந்தியா 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.38,964 கோடி) அளவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து பலன் அடைந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த ஆண்டில் ஜி.எஸ்.பி. திட்டத்தில் அதிகளவு பலன் பெற்றது இந்தியாதான் எனவும் செய்திகள் வெளியாகின.

வாக்குறிதியை நிறைவேற்றவில்லை.

வாக்குறிதியை நிறைவேற்றவில்லை.

இந்தியா பல துறைகளில் இந்திய சந்தைகளில் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான வாய்ப்பு வழங்குவோம் என மத்திய அரசு வாக்குறுதி கொடுத்தும் அதை செய்ய தவறி விட்டது என்று அமெரிக்கா தரப்பில் கருதப்படுகிறதாம். இந்த நிலையிலேயே ஜி.எஸ்.பி. திட்ட தகுதி வரம்பு குறித்து அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் மறு ஆய்வும் செய்யத் தொடங்கியதாம். அதில், இந்தியாவை முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கி, அதன் மூலம் இந்தியாவுக்கு கிடைக்கும் சலுகைகளை பறிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுக்கு இருமுறை நோட்டீஸ்

இந்தியாவுக்கு இருமுறை நோட்டீஸ்

இதுதொடர்பாக மார்ச் மாதம் 4-ந் தேதி 2 மாத நோட்டீஸ் கொடுத்தது. அந்த நோட்டீஸ் காலம் மே மாதம் 3-ந் தேதி முடிந்த நிலையில், ஜி.எஸ்.பி. திட்டத்தின் கீழான முன்னுரிமை நாடு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜீன்-5ல் இருந்து இந்தியா இல்லை

ஜீன்-5ல் இருந்து இந்தியா இல்லை

"இந்தியா தனது சந்தைகளில் (அமெரிக்க பொருட்களுக்கு) சமமான, நியாயமான வாய்ப்பு வழங்குவோம் என உறுதி அளிக்கவில்லை என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். ஆக இந்தியாவை பலன்பெறும் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருந்து, ஜூன் 5-ந் தேதியில் இருந்து நீக்குவது பொருத்தமானதாகும்" என கூறியுள்ளாராம் டிரம்ப்.

அமெரிக்க எம்.பிக்கள் ஆதரவு

அமெரிக்க எம்.பிக்கள் ஆதரவு

இந்தியாவுக்கு எதிராக இந்த முடிவை எடுக்க வேண்டாம் என அமெரிக்க எம்.பி.க்கள், பலரும் டிரம்ப் நிர்வாகத்தை வலியுறுத்தியும், அது கண்டு கொள்ளப்பட வில்லையாம். இதனால் இந்தியா மிக பாதுப்புக்குள்ளாகும் என்ற போதிலும் அதற்கு சரியான பதில் இல்லையாம்.

மிகப்பெரிய மோடிக்கு சவால்

மிகப்பெரிய மோடிக்கு சவால்

மத்தியில் பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் முடிவு இந்தியாவுக்கு விழுந்துள்ள அடியாகவே இருக்கும். அமெரிக்காவின் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என இந்தியா கூறியுள்ளது.

ஒரு தலைபட்சமான முடிவு

ஒரு தலைபட்சமான முடிவு

இதையொட்டி இந்திய மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஒரு உறவிலும் குறிப்பாக பொருளாதார உறவில், ஒவ்வொரு காலகட்டத்திலும் பரஸ்பரம் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் உண்டு. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளர்ந்து வளருகிற நாடுகளுக்கு ஜி.எஸ்.பி. திட்டத்தின் கீழான பலன்களை பறிப்பது ஒரு தலைப்பட்சமானது என கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump terminates $5.6 billion trade concessions for India

American President Donald Trump has terminated India's designation as a beneficiary developing nation from June 5, ending the country's USD 5.6 billion trade concessions under the key GSP programme.
Story first published: Sunday, June 2, 2019, 14:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X