15 டுபாக்கூர்கள்.. என்சிஆர் இன்சூரன்ஸ்.. 500 பேரிடம் மோசடி.. எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கய்யா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்ஷூரன்ஸ் என்றாலே பலரும் பதறியடுத்து ஓடும் இந்த நிலையில் தப்பி தவறி சிலர் மட்டுமே இன்ஷூரன்ஸ் போட்டு வருகிறார்கள். ஆமாப்பு வயித்த கட்டி வாய கட்டி இன்ஷூரன்ஸ் பாலிசிகள் போடுவதே ஏதாவது கஷ்ட காலத்தில் உதவும் என்று தான்.

 

ஆனா அந்த கனவையும் பொய்யாக்க நினைத்தால் எப்படி? மக்கள் யாரைத்தான் நம்ப முடியும். ஆமாப்பு டெல்லி என்.சி.ஆர்ல 15 பேர் கொண்ட இந்த போலி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த கும்பல கைது செஞ்சிருக்காங்கலாம் நம்ம காவல்துறை.

ஆமாப்பு உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள்ள இந்த திருட்டுக் கும்பல் சுமார் 500க்கும் மேற்பட்ட பாலிசிகள வாங்கி இருப்பதாகவும், இதன் மூலம் பல லட்சம் ரூபாய்க்கு மேல் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதோட இந்த திருட்டு கும்பல இப்பதான் கையும் களவுமா பிடிச்சிருப்பதாகவும் IANS அமைப்பு கூறியுள்ளது.

என்ன டிரம்ப் சார்... வெள்ளக் கொடி காட்டுனா, பயந்துட்டோன்னு நெனைச்சீங்களா..? காம்ரெட் China சார்..!

திருட்டு கும்பல் கைது

திருட்டு கும்பல் கைது

கவுதம்பூத் நகர் மற்றும் காஸியாபாத் நகர் போலிசார் ஒரு குழுவாக இணைந்து, இந்திராபுரத்தில் உள்ள NCR Insurance Policy நிறுவனத்தினை முற்றுகையிட்டதாகவும், இதன் மூலம் பலர் கைது செய்யப்பட்டதாகவும் கவுதம்பூத் நகர் காவல்துறை மூத்த அதிகாரி வைபவ் கிருஷ்ணா கூறியுள்ளராம். இவர்கள் போலியான இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

இந்த அதிரடி ரெய்டின் மூலம் 36 செல்போன்களும், 28 டெபிட் கார்கள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். அதோடு பல முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த கும்பலில் பெரும்பாலானவர்கள் காஸியாபாத் மற்றும் டெல்லி வசிப்பவர்கள் தானாம்.

போலியான வங்கி கணக்கு
 

போலியான வங்கி கணக்கு

அதோடு 500க்கும் மேற்பட்டோரை பங்கு முதலீடு செய்ய ஏமாற்றியதாகவும், அவர்களுக்கு இலபகராமான இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும், அதோடு அவர்களுக்கு ஒரு நல்ல கடன் வழங்கும் திட்டமும் உள்ளதாக கூறி ஏமாற்றியுள்ளனர். அதோடு ஒரு போலியான வங்கிக் கணக்கையும் காட்டி ஏமாற்றியுள்ளனர்.

அல்வா கொடுத்த மக்கள்

அல்வா கொடுத்த மக்கள்

இது குறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பஞ்சாப்பை சேர்ந்த ஹர்ஜித் சிங், கவுதம்பூத் நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தாராம். ஆமாப்பு எல்.ஐ.சியில் லாபகரமான பாலிசி எனக் கூறி பல பாலிசிகளை வாங்கியதாகவும், இதன் மூலம் தான் மிக ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளாராம். எனினும் இதன் மூலம் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் யாரெல்லாம் சம்பந்த பட்டிருக்கிறார்கள் என முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: insurance
English summary

Around 15 peoples sold over 500 fake insurance policies in some states

Around 15 peoples have been arrested in Delhi-NCR's Ghaziabad and Noida for allegedly running a fake insurance policy gang. Also IANS reported that the gang had duped over 500 people in Uttar Pradesh and some others states.
Story first published: Monday, June 3, 2019, 12:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X