அடடே நல்ல விஷயம் தானே.. புதிய தங்க பத்திரம் வெளியீடா.. ஜீன் 7 வரை முதலீடு செய்து கொள்ளலாமா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அரசின் தங்க பத்திரத் திட்டம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கத்தை பத்திர வடிவில் விற்கக் கூடிய ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் தங்கத்தில் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் பெற முடியுமாம்.

 

ஆமாப்பு தங்கம் விலை எப்படி மாற்றம் அடைகிறதோ அதேபோன்று இந்தப் பத்திரங்களின் மதிப்பும் சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஏறும் இறங்குமாம்.

இந்த தங்க பத்திரத் திட்டத்தினை முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர்கள் என எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள முடியும். தங்கக் கட்டிகளை வாங்குவதற்கு பதிலாக இது போன்ற பேப்பர் தங்களில் முதலீடு செய்வது, அதாவது தங்க பத்திரங்களில் முதலீடு செய்வது நல்லது என நிபுனர்களும் பரிந்துரைக்கிறார்கள்.

தங்கப்பத்திரம் வெளியீடு

தங்கப்பத்திரம் வெளியீடு

ரிசர்வ் வங்கி முன்னர் பல தங்க பத்திரங்களை ஏற்கனவே வெளியிட்டு வந்துள்ளது. அதில் லாபமும் கிடைத்து வருவது ஏற்கனவே அறிந்த ஒரு விஷயமே. கடந்த திங்கட்கிழமை முதல் ஜீன்7ம் தேதி வரையிலான காலத்தில் ஒரு கிராம் தங்க விலை ரூ.3,197 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

ஏப்ரல் – மே வரையில் இல்லை

ஏப்ரல் – மே வரையில் இல்லை

கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான காலத்தில், தேர்தல் நேரம் என்பதால், எந்த முதலீட்டு திட்டமும் தீட்டப்படவில்லை. குறிப்பாக தங்க கடன் பத்திரம் பற்றிய எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தான் ஜீன் 3 மாத தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி ஆஃபரும் உண்டு
 

தள்ளுபடி ஆஃபரும் உண்டு

இந்த தங்க கடன் பத்திர முதலீடு செய்பவர்களுக்கு தள்ளுபடி சலுகையும் உண்டாம். ஆமாப்பு கேஸ்லெஸ் முறையில் இந்த முதலீட்டுக்கு பணம் செலுத்துபவர்களுக்கு ரூ.50 தள்ளுபடியாம். ஆமாங்க நெட் பேங்கிங் மற்றும் மற்ற கேஸ் நெஸ் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகையாம்.

இப்ப மட்டும் இல்லங்க!

இப்ப மட்டும் இல்லங்க!

இந்த தங்க கடன் பத்திர திட்டம் வரும் ஜீன் 7ம் தேதியோடு முடிவடைந்தாலும் ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜீலை மாதத்தில் 8 - 12 வரையிலான காலத்திலும், ஆகஸ்ட் மாதத்தில் 5 - 9 தேதி வரையிலும், செப்டம்பர் மாதம் 9 - 13 தேதி வரையிலும் முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு முதலீட்டுக்கான தேதிகள் முன்னரே வழங்கப்படுள்ளதால் மக்கள் முன்னரே இதற்காக தயாராக முடியும். அதோடு முதலீடு திட்டங்களை முன்னரே வழங்கும் ஒரு திட்டமாகவும் இருக்கும்.

தங்கம் விலை இன்னும் குறைவு தான்

தங்கம் விலை இன்னும் குறைவு தான்

குறிப்பாக அட்சய திருதியை காலத்தில் தங்க பத்திரங்களில் முதலீடு அதிகளவில் செய்யப்படும். ஆனால் கடந்த அட்சய திரிதியை காலத்தில் தங்க பத்திரங்கள் கிடைக்கவில்லை. எனினும் தற்[போது ஒன்றும் மாறவில்லை. விலை குறைவாகத் தான் உள்ளது. ஆக மக்கள் தற்போது முதலீடு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தங்கப் பத்திரத்தில் சேதாரம் இல்லை

தங்கப் பத்திரத்தில் சேதாரம் இல்லை

முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த தங்கப்பத்திரம் முதலீடு என்பது மிக பொருத்தமான ஒன்றாகவே இருக்கும். குறிப்பாக தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளை வாங்கினால் அவற்றை திரும்ப விற்கும் போது நம் முதலீட்டை விட குறைவாகவே கிடைக்கும். குறிப்பாக செய்கூலி என்னதான் சொக்க தங்கமாக இருந்தாலும் வாங்கியவுடன் விற்றாலும் கூட தள்ளுபடி செய்து தன் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் தங்க பத்திரத்தில் முதலீடு செய்த பணம் மற்றும் லாபத்தை எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் திரும்பப் பெறலாம். இதுவே இந்த தங்க பத்திரத்தின் பெரிய வெற்றியாகும்.

முதலீட்டு வட்டி விகிதமும் உண்டு

முதலீட்டு வட்டி விகிதமும் உண்டு

அதோடு ஆபரணத் தங்கம் மற்றும் கட்டித் தங்கம் போன்றவற்றை வாங்குவதைக் குறைப்பதற்காகவே இந்த தங்க பத்திரத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 2.50 சதவிகிதம் வட்டி கிடைக்கும். ஆனால் தங்க நகைகளுக்கு அப்படி வட்டி ஏதும் கிடைக்காது. இந்த வட்டி விகிதம் 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கப் பத்திரங்களை அடகு வைத்து பணம் பெறலாம்

தங்கப் பத்திரங்களை அடகு வைத்து பணம் பெறலாம்

ஆமாப்பு ஆபரணத் தங்கங்கத்தினை வைத்து அவசரதுக்கு பணம் வாங்கிக் கொள்ளலாமே என்கிறீர்களா? அ[ப்படின்னா இதையும் தெரிஞ்சுக்க அப்பு, இந்த தங்க கடன் பத்திரங்களை வைத்தும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து கடன்பெற முடியும். எப்போது பத்திரங்களைத் திருப்பி ஒப்படைத்தாலும் அன்றைய தேதியில் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதே, அதை அப்படியே பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi gold bond
English summary

RBI issue Sovereign gold bond opens last Monday

RBI has announced the issue of sovereign gold bonds for first half of the current financial year. In April and May, no sovereign gold bonds were announced due to elections. The June issue opening on Monday, June 3 is priced at Rs 3,196 per gram, also those buying using net banking or cashless method, they will get discount of Rs.50 per gram as usual.
Story first published: Monday, June 3, 2019, 8:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X