டிரம்ப் சார் தொட்டா தூக்கிருவோம் தெரியுமா.. கச்சா எண்ணெய் விலை $100ராக அதிகரிக்கும்.. அப்ப இந்தியால

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெக்ரான்: மத்திய கிழக்கு பகுதிகளில் ஈரானின் ஏவுகனைகள் தாக்கும் தொலைவில் தான் அமெரிக்க போர் கப்பல்கள் உள்ளன என்று ஈரான் எச்சரித்துள்ளது.

 

ஆமாப்பு... அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் பதிவியேற்றதும் முதலில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் நலன் கருதி டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா விலகியது.

இந்த நிலையில் தான் இந்த இரு நாடுகளும் தொடர்ந்து மோதிக் கொள்ள ஆரம்பித்தன. இந்த நிலையில் ஈரானை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவித்து வருகிறது.

ஈரான் மீது பொருளாதார தடையையும் விதித்தது. அதோடு ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையேல் மற்ற நாடுகளின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா கூறியிருந்தது. இந்த நிலை தற்போது வரை தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

தொடந்து அதிகரித்துக் கொண்டே வரும் வங்கி மோசடிகள்.. ரூ2.05 லட்சம் கோடி மோசடி. கடுப்பில் ரிசர்வ் வங்கி

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில் ஈரான் அமெரிக்காவை எச்சரித்துள்ளது. ஆமாப்பு.. ஈரான் ஏவுகனைகள் தாக்கும் தொலைவில் தான் அமெரிக்க போர்க்கப்பல்கள் உள்ளன என்றும் Defense Secretary Patrick Shanahan எச்சரித்துள்ளார்.

$100 வரை அதிகரிக்கலாம்

$100 வரை அதிகரிக்கலாம்

அப்படி ஒருவேளை இந்த இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டால் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 ஆயிரம்) அதிகமாக உயர்த்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. அதுவும் கடந்த 2012லேயே இதன் எதிரொலியை அமெரிக்கா பார்த்துக்கிறலாம் என்றும் கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கும் தெரியும்
 

அமெரிக்காவுக்கும் தெரியும்

மத்திய கிழக்கு பகுதியில், ஈரானின் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில் தான் அமெரிக்க போர் கப்பல்கள் உள்ளன. இது பாரசீக வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அனைத்து அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு கடற்படையினருக்கும் தெரியும். அதோடு ஈரானின் பலமும் என்னவென்று அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். பாரசீக வளைகுடாவில் முதல் தோட்டா சுடப்படும்போது எண்ணெய் விலை இங்கு 100 டாலருக்கும் மேலாக உயரும் என்றும் எச்சரித்துள்ளது.

தென் கொரியா- ஜப்பான் பாதிக்கும்

தென் கொரியா- ஜப்பான் பாதிக்கும்

இந்த இரு நாட்டு பிரச்சனை ஈரான் அமெரிக்கா மட்டும் அல்லாது, இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு தாங்க முடியாததாக இருக்கும். ஆக இதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவை எச்சரித்துள்ளது ஈரான்.

அமெரிக்க பேச்சு வார்த்தைக்கு தயார்

அமெரிக்க பேச்சு வார்த்தைக்கு தயார்

இந்த நிலையில் ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, அமெரிக்கா கவுரவமாக நடந்துகொண்டால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கலாம், ஆனால் டெஹ்ரான் தானாக சென்று பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காது என்றும் கூறியுள்ளார்.

தற்காப்பு நடவடிக்கையில் ஒரு போதும் பின் வாங்காது

தற்காப்பு நடவடிக்கையில் ஒரு போதும் பின் வாங்காது

ஈரான் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் பாகெரி இது பற்றி கூறுகையில், ஈரான் ஏவுகணை திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கைவிடப்படாது. ஆனால் அதே நேரம் ஈரானின் தற்காப்பு திறன்களில் இருந்து நாடு ஒருபோதும் ஈரான் பின்வாங்காது என்றும் கூறியுள்ளார்.

தினசரி 20 மில்லியன் பேரல்கள்

தினசரி 20 மில்லியன் பேரல்கள்

அது மட்டும் இல்லாமல் அமெரிக்கா ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகத் தான் ஒவ்வொரு நாளும் 20 மில்லியன் பேரல்கள் எண்ணெயை, கப்பல், நீர்முழ்கிக்கப்பல் வழியாகத் எடுத்து செல்கின்றன. அதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது ஈரான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America ship has become the focal point of tense U.S.-Iran relations.

U.S Department of Commerce, nearly $20 million barrels of oil pass through the Strait of Hormuz every day and, Keeping water way or open and navigable is a top priority for the U.S Navy. Also In the past, Iranian gunboats have shadowed American ships as they pass through the strait, which at its narrowest points can be just 2 miles across.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X